- Tuesday
- July 21st, 2026
கால்நடை வளர்ப்பாளர்களுக்கு கால்நடைகளுக்குரிய பசும்தீவனத்தை உற்பத்தி செய்வது தொடர்பான பயிற்சி கடந்த வியாழக்கிழமை (18.02.2016) கிளிநொச்சியில் வழங்கப்பட்டுள்ளது. இதன்போது வடக்கு கால்நடை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கலந்துகொண்டு சம்பிரதாயபூர்வமாகப் பயிற்சியை ஆரம்பித்து வைத்தார். வடமாகாண விவசாய அமைச்சு கடந்த ஆண்டு இறுதியில் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த 14 கால்நடை வளர்ப்பாளர்களுக்குத் தலா 70,000ரூபா பெறுமதியான புல் நறுக்கும்...
ஊழியர் சேமலாப நிதியத்தின் 30 வீதத்தினை மீளப்பெறும் செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வை வடமாகாண தொழில் திணைக்களத்தில் இராஜாங்க அமைச்சர் ரவீந்தர சமரவீர நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைத்தார். யாழ்.பண்ணையில் அமைந்துள்ள வடமாகாண தொழில் திணைக்கள காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றது. வடமாகாண தொழில் ஆணையாளர் நீலலோஜினி ஜெயகதீஸ்வரன், மற்றும், அ.பி.சி. அமரதுங்க தலைமையில்...
ஒன்பதாவது தேசிய சாரணர் ஜம்போரி இன்று (20) யாழ். நகரில் ஆரம்பமாகிறது. “நட்புறவும் தெளிவும்” என்ற தொனிப் பொருளில் எதிர்வரும் 26ஆம் திகதி வரை சாரணர் ஜம்போரி நடைபெறவுள்ளது. 37 சாரணர் மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 10,000க்கும் மேற்பட்ட சாரணர்கள் இதில் பங்குகொள்வர். 05 வெளிநாடுகளிலிருந்து 17 தலைவர்கள், 110 சாரணர்கள் இதில் பங்கு கொள்வரென பிரதான...
இலங்கை சனநாயக சோசலிச குடியரசின் 68 ஆவது சுதந்திர தினத்தையொட்டி யாழ் மாவட்டத்திலும் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றது. மாவட்டத்தின் பிரதான சுதந்திரதின நிகழ்வு யாழ் மாவட்ட செயலகத்தில் அரசாங்க அதிபர் திரு என்.வேதநாயகன் தலைமையில் இடம்பெற்றது. இதன்போது தேசியக்கொடியை அரசாங்க அதிபர் ஏற்றிவைக்க தேசிய கீதம் இசைக்கப்பட்டு சுதந்திரதினம் அனுஸ்டிக்கப்பட்டதுடன் தேசிய சுதந்திர தினத்தை முன்னிட்டு...
அண்மையில் வெளியான க.பொ.த (உ.த) பரீட்சை முடிவுகளின்படி மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அனுசரணையுடன் இடம்பெற்றது. பாலகன் கல்வி மேம்பாட்டுபிரிவின் ஏற்பாட்டில் ஏற்பாட்டில் நடைபெற்ற மேற்படி நிகழ்வுக்கு அக்கட்சியின் கொள்கை முன்னெடுப்பு பிரிவு இணைப்பாளர் சமயலிங்கம் அண்ணாத்துரை தலைமை தாங்கினார். இந்நிகழ்வு நேற்று (31.01.2016)...
எத்தனை இடர்கள் வந்தபோதும் நாம் கொண்டிருக்கும் நம்பிக்கையை இழந்து விடக்கூடாது. நம்பிக்கைதான் வாழ்க்கையின் அடித்தளம். அந்த நம்பிக்கையை நாம் இழந்து மனம் துவண்டுவிழாமல் இருப்பதற்கு விழாக்கள் உதவுகின்றன என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்திருக்கிறார். புளியம்பொக்கணையில் சனிக்கிழமை (31.01..2016) ஹற்றன் நாஷனல் வங்கியின் ஏற்பாட்டில் நடைபெற்ற நெல் அறுவடை விழாவில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு...
வடக்கு மாகாண விவசாய அமைச்சின் உழவர் பெருவிழா நேற்று பிற்பகல் முல்லைத்தீவு வித்தியானந்தா கல்லூரியில் நடைபெற்றது. வடமாகாண விவசாய அமைச்சர் பொ. ஐங்கரநேசன் தலைமையில் நடைபெற்ற இப்பெருவிழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரன் மற்றும் சிறப்பு விருந்தினராக தமிழகத்தின் பிரபல கவிஞரும் பாடலாசிரியருமான வைரமுத்துவும் கலந்து கொண்டுள்ளனர். இந்த விழாவில் வடக்கு மாகாணத்தைச்...
முல்லைத்தீவில் நடக்கும் உழவர் விழாவில் பங்கேற்க வந்துள்ள கவிப்பேரரசு வைரமுத்து நேற்று வெள்ளிக்கிழமை வடக்கு மாகாண முதலமைச்சர் வைரமுத்துவை சந்தித்துப் பேசினார். வடக்கு மாகாண விவசாய அமைச்சின் அழைப்பின்பேரில்கவிப்பேரரசு வைரமுத்து இலங்கை வந்துள்ளார். யாழ்ப்பாணம் வந்த இவர் நேற்று இரவு 7 மணிக்கு யாழ்ப்பாணத்தில் உள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் முதலமைச்சரை சந்தித்துப் பேசினார். இதன்போது வைரமுத்து...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் 31 ஆவது பொதுப் பட்டமளிப்புவிழா நேற்றயதினம் (19) ஆரம்பமாகியது. யாழ் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நேற்றும் (19) இன்றும் (20) ஆக எட்டு அமர்வுகளாக இடம்பெறவுள்ள இப்பட்டமளிப்பு விழாவில் 1939 மாணவர்கள் பட்டம்பெறவுள்ளனர். யாழ் பல்கலைகழக துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம் தலைமையில் நடைபெற்ற நேற்றய முதல் நாள் அமர்வில் யாழ் பல்கலைக்கழக வேந்தர்...
வல்வெட்டித்துறையில் தமிழ் பொங்கலை முன்னிட்டு நடத்தப்பட்ட பட்டப்போட்டியினை பார்வையிட பெருமளவில் மக்கள் திரண்டனர். குடாநாட்டின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்கள் அலையென திரண்டமையால் வல்வெட்டித்துறை கடற்கரை நிரம்பி வழிந்தது. தமது திறமைகளை வெளிப்படுத்தும் வகையினில் வித விதமான பட்டங்கள் போட்டியில் பங்குபற்ற வைக்கப்பட்டிருந்த நிலையினில் வடக்கு முதலமைச்சர் பிரதம அதிதியாக கலந்து கொண்டிருந்தார். சிறார்களினை தாண்டி வயது...
இம்முறை தேசிய பொங்கல் தின நிகழ்வுகள் நேற்று (15) யாழ்ப்பாணத்தில் வெகு சிறப்பாக இடம்பெற்றன. நேற்று காலை யாழ் பலாலியில் அமைந்துள்ள சிறி இராஜராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் இடம்பெற்ற பொங்கல் தின நிகழ்வில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா, சிறுவர் மற்றும் மகளீர் விவகார இராஜாங்க...
பாடசாலை மாணவரிடையே தேசிய இன ஒருமைப்பாட்டை கட்டியெழுப்பும் நோக்கில் இலங்கை தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க பணியகத்தின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களிற்கான பொங்கல் நிகழ்வொன்று யாழ் மருதனார்மடம் இராமநாதன் கல்லூரியில் நேற்று (15) இடம்பெற்றது. வடமாகாண கல்வி அமைச்சுடன் இணைந்து ஏற்பாடு செய்ப்பட்ட இந்நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதியும் இலங்கை தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க பணியகத்தின் தலைவியுமான சந்திரிக்கா...
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் 31ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகி நடைபெறவுள்ளதாக யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர் வசந்தி அரசரட்ணம் தெரிவித்தார். யாழ். பல்கலைக்கழக கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். எதிர்வரும் 19 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள பொதுப் பட்டமளிப்பு விழாவில்...
அமரர் அன்னை சிவத்தமிழ் செல்வி பண்டிதை கலாநிதி தங்கம்மா அப்பாக்குட்டியின் 91ஆவது பிறந்த நாள் அறக்கொடை விழா நேற்று வியாழக்கிழமை காலை 8.30 மணிக்கு ஸ்ரீதுர்க்கா தேவி தேவஸ்தான அன்னபூரணி மண்டபத்தில் செஞ்சொற் செல்வர் கலாநிதி ஆறு திருமுருகன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக கனடா சைவசித்தாந்த மன்ற நிறுவுநரும் இளைப்பாறிய ஆசிரியர்களுமான...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் பதவியேற்று ஒரு வருடகால பூர்த்தியினை முன்னிட்டு முக்கிய நிகழ்வுகள் இன்று யாழ் மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் தேவநாயகன் தலைமையில் நடைபெற்றது. புதிய அரசாங்கம், நாட்டின் சமாதானம், நல்லிணக்கத்தின் ஊடான ஒரே தேசம் மாபெரும் பலம் என்னும் தொனிப்பொருளிலேயே நிகழ்வுகள் நடைபெற்றது....
நாட்டின் முன்னணி இலக்கியசார்ந்த கொண்டாட்ட நிகழ்வான Fairway Galle Literary Festival இன் இறுதியானதும் மூன்றாவதுமான வார நிகழ்வுகள் யாழ்ப்பாணத்தில் ஜனவரி 23 மற்றும் 24 ஆகிய திகதிகளில் முன்னெடுக்கப்படவுள்ளன. இந்த கொண்டாட்டத்தில் பிரத்தியேகமான மற்றும் பரந்தளவு சர்வதேச கலைஞர்கள் பங்கேற்கவுள்ளதுடன், உள்நாட்டு திறமைசாலிகளும் பங்கேற்கவுள்ளனர். சகல நிகழ்ச்சிகளும் யாழ்ப்பாணம் பொது நூலகத்தில் முற்றிலும் இலவசமாக...
தொழில் முயற்சியின்போது மரத்தில் இருந்து தவறுதலாக வீழ்ந்து இறந்த பனை, தென்னைச் சாற்று உற்பத்தித் தொழிலாளர்களின் ஆறு குடும்பங்களுக்கு வடக்கு கூட்டுறவு அமைச்சால் வாழ்வாதார நிதியாக தலா ஒரு இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளது. வடக்கு முதல்வர் க.வி.விக்னேஸ்வரன் இன்று புதன்கிழமை (30.12.2015) பேரவைச் செயலக வளாகத்தில் ஒழுங்குசெய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியின்போது உரிய குடும்பங்களிடம் இதற்கான காசோலைகளைக் கையளித்துள்ளார்....
இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அருள்நெறி விழா எனும் விருது வழங்கும் நிகழ்வு நேற்று (27) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கடந்த நல்லூர் கந்தசுவாமி ஆயலத்தின் திருவிழா உற்சவ காலத்தின் போது யாழ் மாவட்டத்திலுள்ள அறநெறி பாடசாலை மாணவர்களிடையே சமயம் சார்ந்த போட்டிகள் நடாத்தப்பட்டன. இவ்வாறு யாழ்...
Loading posts...
All posts loaded
No more posts






