புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் சாதனையாளர் மதிப்பளிப்பு!!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில், புதுக்குடியிருப்பு பங்கிற்ற்கு உட்பட்ட சாதனையாளர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார். அந்தவகையில் புதுக்குடியிருப்பு பங்குத்தந்தை அருட்பணி எஸ். அஜந்தன் தலைமையிலும், முல்லைத்தீவு மாவட்ட குருமுதல்வர் இராஜசிங்கம் அடிகளார் அவர்களது ஆன்மீகத் தலைமையிலும் இடம்பெற்ற இந்த மதிப்பளிப்பு...

பொதுமக்களுக்கான அவசர வேண்டுகோள் – தயவுசெய்து தீ வைக்க வேண்டாம்!

முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு பொதுமக்களுக்கு விடுக்கும் அவசர வேண்டுகோள்.... முல்லைத்தீவு மாவட்டத்தில் தற்போது நிலவும் வரண்ட காலநிலை காரணமாக, மக்கள் தங்களுடைய காணிகளை சுத்தப்படுத்துவதற்காக வைக்கும் தீ, கட்டுப்பாட்டை இழந்து அருகிலுள்ள காணிகள், வீடுகள் மற்றும் ஏனைய சொத்துகளுக்கும் பரவி பாதிப்புகளை ஏற்படுத்தி வருகின்றது. எனவே, காணிகளுக்கு தீ வைப்பதை பொதுமக்கள் முற்றாகத்...
Ad Widget

முல்லைத்தீவு குருந்தூர் விகாரைக்கு மீண்டும் பொலிஸ் பாதுகாப்பு

முல்லைத்தீவு குருந்தூர் ரஜமஹா விகாரை வளாகத்திலிருந்து அகற்றப்பட்டிருந்த பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குவதற்குப் புத்தசாசன, சமய மற்றும் கலாசார விவகார அமைச்சு தீர்மானித்துள்ளது. விகாரையில் அகற்றப்பட்ட பொலிஸ் பாதுகாப்பை மீண்டும் வழங்குமாறு கோரி, விகாராதிபதி கல்கமுவே சந்தபோதி தேரரினால் அமைச்சுக்கு அனுப்பப்பட்ட கடிதத்திற்குப் பதிலளிக்கும் வகையிலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தக் கோரிக்கைக்குப் பதிலளிக்கும் வகையில், விகாரைக்குத்...

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

நாட்டில் ஏற்பட்டுள்ள எல்நினோ தாக்கம் காரணமாக கிளிநொச்சி மாவட்டத்தில் பிரதான நீர்ப்பாசன குளங்களில் ஒன்றான இரணைமடுக்குளம் மற்றும் ஏனைய குளங்களின் மொத்த நீர்க்கொள்ளவு 20 வீதத்தில் காணப்படுவதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி நீர்ப்பாசன பணிப்பாளர் பொறியியலாளர் கைலாயபிள்ளை பிரகாஸ் தெரிவித்துள்ளார். 36 அடி நீர்கொள்ளவைக் கொண்ட இரணைமடுக்குளத்தின் நீர் மட்டமானது தற்போது 19 அடியாக காணப்படுகின்றது....

கிளிநொச்சி முகாம் விவகாரம்: சபையில் அமைச்சர் விளக்கம்!

கிளிநொச்சியின் பளையில் விடுதலைப் புலிகளின் (LTTE) பயிற்சி முகாம் ஒன்றைக் கண்டுபிடித்ததாகக் கூறி அண்மையில் ஊடகச் சந்திப்பு ஒன்றை நடத்திய நபர் குறித்த மேலதிக விவரங்களை பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று வெளியிட்டார். அக்கூற்றை உறுதிப்படுத்தும் வகையில் எந்த ஆதாரமும் விசாரணைகளில் கிடைக்கவில்லை என்றும் அவர் இதன்போது தெரிவித்தார். இது தொடர்பில் இன்று...

மரணச்சான்றிதழ் வழங்கி போராட்டத்தை முடக்காதீர்கள்!!

பிள்ளைகளைத் தேடும் போராட்டத்தை மரணச் சான்றிதழ் அல்லது நிதியுதவி மூலம் முடிவுக்குக் கொண்டுவர வேண்டாம் என்று தமிழர் தாயக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக வவுனியாவில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர்கள், காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகம் (Office on Missing Persons –...

பிரதேச சபை உப தவிசாளர் உட்பட ஐவர் ஹெரோயினுடன் கைது!!

கரைதுறைப்பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் உட்பட ஐவர் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சந்தேக நபர்களிடமிருந்து கணிசமான அளவு ஹெரோயின் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். குறித்த உப தவிசாளர் கடந்த உள்ளுராட்சி மன்ற தேர்தலின்போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின்...

பூநகரியில் மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் காற்றாலைத் திட்டம்!!

இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், பூநகரிப் பகுதியில் பொதுமக்களின் காணிகளை அபகரித்து மேற்கொள்ளப்படவுள்ள காற்றாலைத் திட்டத்திற்காகக் கிராஞ்சியில் அடையாளப்படுத்தப்பட்டுள்ள இடங்களை நேரில் சென்று பார்வையிட்டதுடன், காணி உரிமையாளர்களுடனும் கலந்துரையாடினார். பூநகரி பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் காற்றாலைத் திட்டத்தை அமைக்கும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், இத்திட்டத்தினால் பயன்தரும் நிலையிலுள்ள...

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து டிப்பர்களும் உழவு இயந்திரம் ஒன்றும் சிறப்பு அதிரடிப்படையினால் பறிமுதல்!

சட்டவிரோத மணல் அகழ்வில் ஈடுபட்ட ஐந்து டிப்பர்களும் உழவு இயந்திரம் ஒன்றும் சிறப்பு அதிரடிப்படையினால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லாறு பகுதியில் வேறு பகுதி மணல் அனுமதி பத்திரத்தை பயன்படுத்தி தொடர்ச்சியாக மணல் அகழ்வு இடம் பெறுவதாக கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமைவாக நேற்றையதினம் 12 திடீர் சுற்றி வளைப்பு மேற்கொள்ளப்பட்டது....

வடக்கு தெங்கு முக்கோண திட்டத்தின் மற்றொரு கட்டம் ஆரம்பம்!

தெங்கு பயிர்ச்செய்கை சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் கற்பகத்தரு வளத்தின் கீழ் வடக்கு தெங்கு முக்கோணம் திட்டத்தின் மற்றொரு கட்டம் முல்லைத்தீவு, முள்ளியவளைப் பகுதியில் நடைபெற்றது. 2030ஆம் ஆண்டளவில் இலங்கையின் தெங்கு ஏற்றுமதி வருமானத்தை 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், வருடாந்த தெங்கு உற்பத்தியை 4,200 மில்லியன் காய்களாகவும் உயர்த்தும் தேசிய இலக்கை அடையும் நோக்கில் இது நடத்தப்படுகிறது....

மக்களின் காணிகளை விடுவிக்க கோரி ஜனாதிபதி செயலகத்திற்கு மகஜர்!

வடக்கு கிழக்கு யுத்தத்தின் போது அரசின் இராணுவத்தினால் கைப்பற்றப்பட்ட மக்களின் காணிகளை மீட்கும் பிரச்சினைக்கு உடனடித் தீர்வுகளை வழங்குமாறு கோரி ஜனாதிபதி செயலகத்துக்கு திங்கட்கிழமை (03) மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டுள்ளதாக சம உரிமை இயக்கம் தெரிவித்துள்ளது. கேப்பாப்புலவு மற்றும் பலாலியில் காணிகளை இழந்த மக்களின் நில உரிமை தொடர்பாக உருவாக்கப்பட்ட சிவில் அமைப்புகள் மற்றும் சம...

இயக்கச்சியில் வீதி விபத்தில் படுகாயமடைந்த பெண் உயிரிழப்பு!

கிளிநொச்சி - இயக்கச்சி பகுதியில் நேற்று (03) திங்கட்கிழமை பிற்பகல் 12.00 மணியளவில் இடம்பெற்ற கோர வீதி விபத்தில் படுகாயமடைந்த குடும்பப் பெண் சிகிச்சை பலனின்றி நேற்றைய தினம் பிற்பகல் உயிரிழந்துள்ளார். வீதியில் நின்று கொண்டிருந்த குறித்த பெண் மீது, அதே திசையில் பின்னால் சென்று கொண்டிருந்த 'ஹையேஸ்' ரக வாகனம் மோதியதிலேயே விபத்து சம்பவித்துள்ளது....

வட்டுவாகல், கேப்பாபிலவு காணிகள் விரைவில் விடுவிப்பு!!

முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல், கேப்பாபிலவு மற்றும் கிளிநொச்சி மாவட்டத்தின் சில காணிகளை விரைவில் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கௌரவ பாதுகாப்பு பிரதியமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்தார். முல்லைத்தீவு மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் இராணுவப் பயன்பாட்டில் உள்ள காணிகளைச் சிவில் நிறுவனங்கள் மற்றும் பொதுமக்களுக்கு விடுவிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பான விசேட கலந்துரையாடல், முல்லைத்தீவு...

கனகராயன்குளத்தில் கப் ரக வாகனம் விபத்து!! இருவர் பலி!!

தம்புள்ளையில் இருந்து பருத்தித்துறைக்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்ற கப் ரக வாகனம் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்த இருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக கனகராயன்குளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த கோர விபத்து இன்று (30) ஏ-9 வீதியின் கனகராயன்குளம் பகுதியில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் பலத்த காயமடைந்த இருவரும் உடனடியாக மீட்கப்பட்டு மாங்குளம்...

ஊஞ்சல் தடி முறிந்து விழுந்து 5 மாதக் குழந்தை உயிரிழப்பு!

வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குளவிசுட்டான் கிராமத்தில் ஊஞ்சல் தடி முறிந்து விழுந்ததில் ஐந்து மாதக் குழந்தை ஒன்று சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது, நேற்றயதினம் குறித்த குழந்தை தனது தாயுடன் ஊஞ்சலில் அமர்ந்திருந்தது. இதன்போது எதிர்பாராதவிதமாக ஊஞ்சல் தடி சரிந்து விழுந்துள்ளது. இதில் படுகாயமடைந்த ஐந்து மாதக் குழந்தை சம்பவ...

7 மாதங்களாக ஆசிரியர் இல்லை ; பெற்றோர்கள் போராட்டம்!

முல்லைத்தீவு மாவட்டத்தின் முல்லை கல்வி வலயத்தின் கீழ் உள்ள புதுக்குடியிருப்பு மூங்கிலாறு தெற்கு ஆரம்ப பாடசாலையில் தரம் 3 மாணவர்களுக்கான ஆசிரியர் கடந்த 7 மாதங்களாக இல்லாத நிலையில் பெற்றோர்கள் இன்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை முன்னெடுத்துள்ளார்கள். முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மூங்கிலாறு ஆரம்ப பாடசாலையில் தரம் 3 வகுப்புக்கான ஆசிரியர் பற்றாக்குறை கடந்த ஏழு...

ஆரம்பமானது தேசிய நேர்மை வாரம்!!

“நேர்மையான கலாசாரம் – கிளீன் ஶ்ரீலங்கா” என்ற தொனிப்பொருளின் கீழ் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள *தேசிய நேர்மை வாரம் இன்று (27) முதல் ஜூலை 31 வரை* முன்னெடுக்கப்படவுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக குமாரநாயக்கவின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின் மூலம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், ஜனாதிபதி அலுவலகம் மற்றும் கிளீன் ஸ்ரீ லங்கா நிகழ்ச்சித் திட்டம் இணைந்து நடைமுறைப்படுத்துகின்றன....

அரசாங்க அதிபர் தலைமையில் கிளிநொச்சி மாவட்ட விவசாய குழுக் கூட்டம் !

கிளிநொச்சி மாவட்ட விவசாய குழுக் கூட்டம் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் தலைமையில், மாவட்ட செயலக மாநாடு மண்டபத்தில் நடைபெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தின் விவசாயத் துறைசார்ந்த பல்வேறு விடயங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன. குறிப்பாக எல்நினோ காலநிலையை எதிர்கொள்வது தொடர்பாகவும் கிளிநொச்சி மாவட்டத்தில் எதிர்வரும் பெரும்போக நெற்ச்செய்கையின் போது மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கிய தீர்மானங்கள் பற்றி இங்கு...

மலசல கூடத்துடன் இணைந்த குளியறைக்குள் கோழி இறைச்சி விற்பனை!!

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் மலசல கூடத்துடன் இணைந்த குளியலறைப் பகுதியில் வைத்து கோழி இறைச்சி உரிக்கப்பட்டு விற்பனை செய்யும் சம்பவம் நீண்ட நாட்களாக இடம்பெற்றமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. வவுனியா, வைரவபுளியங்குளம், புகையிரத வீதியில் கதிரேசு வீதிக்கு திரும்பும் சந்தியில் உள்ள கோழி இறைச்சி விற்பனை கடை ஒன்றில் அக்கடைக்குரிய கோழிகள் மலசலகூடம் மற்றும் அதனுடன்...

சில மாவட்டங்களுக்கு வெப்பமான வானிலை தொடர்பில் எச்சரிக்கை!!

நாட்டின் முல்லைத்தீவு, வவுனியா, மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களில் இன்று (13) திங்கட்கிழமை வெப்பமான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதன்படி, மனித உடலால் உணரப்படும் வெப்பத்தின் அளவான 'வெப்பச் சுட்டெண்' இன்றைய தினம் பகல் வேளையில் இந்த மாவட்டங்களின் சில இடங்களில் 'எச்சரிக்கை மட்டத்தை' எட்டக்கூடும்...
Loading posts...

All posts loaded

No more posts