முல்லைத்தீவு – நாயாறு பாலத்தின் திருத்தப் பணிகள் பெரும்பாலும் நிறைவடைந்துள்ளன. தற்போது சில சிறிய பணிகள் மட்டும் மீதமுள்ளன. அவையும் நாளைய தினத்திற்குள் முழுமையாக நிறைவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதைய நிலைமைகளை கருத்தில் கொண்டு, RDA (Road Development Authority) நாயாறு பாலம் வழியாக பொதுமக்கள் பயணிப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.
அதனால், நாயாறு பாலம் வழியாக செல்லும் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பாலத்தின் எந்த இடத்திலும் வாகனங்களை நிறுத்த வேண்டாம் எனவும் பாலத்தை ஒரு வழிப் பாதையாக (One-way) மட்டும் பயன்படுத்துமாறும் மேலும், சில பணிகள் இன்னும் நடைபெற்று வருகின்றன என்பதையும் தயவுசெய்து கருத்தில் கொள்ளவும். என மாவட்ட அனர்த்த முகாமைத்துவ ஒருங்கிணைப்பு பிரிவு முல்லைத்தீவு அறிவித்துள்ளது.