
யாழ்ப்பாணம் செம்மணி இந்து மயானத்தில் அபாத்தான வெடிமருந்து உள்ளதாகத் தெரிவித்து அங்கு பாதுகாப்புக்காக சிறப்பு அதிரடிப் படை மற்றும் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர். நல்லூர் – செம்மணி வீதியின் வடக்கே உள்ள இந்து மயானம் இன்று அதிகாலை சிறப்பு அதிரடிப் படையினரால் தேடுதலுக்கு உள்படுத்தப்பட்டது. இன்று... Read more »

இராணுவச் சிப்பாய் தாக்கியதாகத் தெரிவித்து இளைஞர் ஒருவர் தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். சுன்னாகம் பொலிஸ் பிரிவில் இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றதாக பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. உடுவில் ஆலடியைச் சேர்ந்த சிவலிங்கம் கமில்தாஸ் (வயது-22) என்ற இளைஞரே இவ்வாறு சிகிச்சைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில்... Read more »

யாழ்.மாநகர சபையை கலைத்து மத்திய அரசிற்கு தாரை வார்ப்பதற்காக 50 இலட்ச ரூபாய்க்கு மேல் செலவழித்துள்ளார்கள் என யாழ். மாநகர முதல்வர் சட்டத்தரணி வி. மணிவண்ணன் தெரிவித்துள்ளார். யாழ்.மாநகர சபையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்த அவர், எனக்கு எதிராகவும் எனக்கு ஆதரவளித்தவர்களுக்கு... Read more »

கொவெக்ஸ் திட்டத்தின் கீழ், நேற்று கிடைத்துள்ள தடுப்பூசி 60 வயதிற்கு மேற்பட்டோருக்கு இன்று முதல் வழங்கப்படவிருப்பதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார். உலக சுகாதார ஸ்தாபனத்தின் கொவெக்ஸ் திட்டத்தின் கீழ் நாட்டிற்கு வழங்கப்படும் 20 சதவீதமான தடுப்பூசிகள் நேற்று நாட்டை வந்தடைந்தன. ´கொவெக்ஸ்´... Read more »

நாட்டில் மேலும் 359 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, இலங்கையில் இதுவரையான மொத்த கொரோனா பாதிப்புக்களின் எண்ணிக்கை 85 ஆயிரத்து 695 ஆக அதிகரித்துள்ளது. இதேவேளை, கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்து நேற்று 290... Read more »

கொரோனா தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை இரணைதீவுப் பகுதியில் புதைப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் உள்ள பல தேவாலயங்களில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) எதிர்ப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதன்படி, யாழ்ப்பாணம் பொஸ்கோ புனித திரேசா தேவாலயத்தில் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.... Read more »

‘கொரோனா’ தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணை தீவு பகுதியில் புதைப்பதற்கு எதிர்பு தெரிவித்து இரணை தீவு மக்கள் முன்னெடுத்து வருகின்ற போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று (வெள்ளிக்கிழமை) இடம் பெற்றது. ‘கொரோனா’ தொற்றால் உயிர் இழந்தவர்களின் உடல்களை இரணை தீவு பகுதியில் புதைப்பதற்கு... Read more »

இரணைதீவில் ஜனசாக்களை அடக்கம் செய்யும் தீர்மானத்தை உடனே திரும்பப் பெறவேண்டும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இலங்கையிலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து தீவிரமடைந்து பரவி வருகிறது. இதனிடையே கொரோனா வைரஸ் நோயினால் மரணமடைந்த... Read more »

விவசாய போதனாசிரியர்களுக்கான நியமனக்கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்றையதினம் மாலை 4.00 மணிக்கு ஆளுநர் செயலகத்தில் வடமாகாண ஆளுநர் திருமதி பி. எஸ். எம். சாள்ஸ் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதமசெயலாளர், வடமாகாண விவசாய அமைச்சின் செயலாளர், விவசாயத்துறையின் மாகாணப் பணிப்பாளர், விவசாயத்துறை அதிகாரிகள்... Read more »

யாழ்ப்பாணம் கோயில் வீதியில் நாவலர் வீதி தொடக்கம் நல்லூர் ஆலயம் வரையான பகுதி போக்குவரத்து ஒரு மாதகாலத்துக்கு இடைநிறுத்தப்படுவதாக மாநகர முதல்வர், சட்டத்தரணி வி.மணிவண்ணன் அறிவித்துள்ளார். நல்லூரான் வளைவு கட்டுமானப் பணிக்கு வசதியாக நாளைமறுதினம் மார்ச் 7ஆம் திகதி மணி தொடக்கம் ஒரு மாத... Read more »

சிவராத்திரி நாளை முன்னிட்டு அகில இலங்கை சைவ மகா சபை வருடா வருடம் கடைப்பிடிக்கும் சிவ வாரம் இன்று (வெள்ளிக்கிழமை) முதல் எதிர்வரும் வியாழக்கிழமை வரை முன்னெடுக்கப்படுகிறது. இதுதொடர்பில் சைவ மகா சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தொண்டு பணிகளுக்கு சிவதொண்டர்களையும் சிவமங்கையர்களையும் இணைத்து... Read more »

பேருந்தில் தவறவிடப்பட்ட பணம் மற்றும் அலைபேசியை உரியவரிடம் ஒப்படைத்த பருத்தித்துறை சாலையின் காப்பாளர் பாலமயூரனுக்கு பலரும் பாராட்டுகளைத் தெரிவித்துள்ளனர். கொழும்பு – பருத்தித்துறை சேவையில் ஈடுபட்ட பேருந்தில் தவறவிடப்பட்ட 2 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் பணத்தையும் சுமார் 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியான... Read more »

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) ஏற்பாடுகள் மறுபரிசீலனை செய்யப்படவுள்ளதாக, மனித உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திற்கு அரசாங்கத்தால் பதிலளிக்கப்பட்டுள்ளது. ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் ஆட்சேபனை தெரிவித்து வெளியிட்ட பதில் அறிக்கை தற்போது வெளியிட்டுள்ளது. இலங்கையின் முழுமையான பதிலை,... Read more »

வடக்கு மாகாணத்தில் மேலும் 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் அதிகரித்துள்ள கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது... Read more »

வடக்கு மாகாண சுகாதார தொண்டர்கள் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் தொடர்ந்து நான்காவது நாளாக இன்றும் (வியாழக்கிழமை) கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தமக்கு வழங்கப்பட்ட நியமனத்தை மீள பெற்று தருமாறு கோரிக்கை விடுத்து இந்த கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டத்தை முன்னெடுத்துள்ளனர். கடந்த... Read more »

இலங்கையில் ரஷ்யாவின் ஸ்புட்னிக் வி கொரோனா தடுப்பூசிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவசர பயன்பாட்டிற்காக இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக, இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். Read more »

கிளிநொச்சியில் மூன்று பிள்ளைகளின் தாயார் கிணற்றிற்குள் குதித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தில், 3 பிள்ளைகளும் உயிரிழந்துள்ளனர். ஒரு பிள்ளையின் சடலம் மீட்கப்பட்டுள்ள நிலையில், நீதிமன்ற அனுமதியை பெற்று இன்று மற்ற இரண்டு சடலங்களும் மீட்கப்படவுள்ளது. கிளிநொச்சி வட்டக்கச்சியிலுள்ள மாணிக்கப்பிள்ளையார் ஆலய கிணற்றிற்குள், நேற்று (3)... Read more »

வடக்கு மாகாண காணி ஆவணங்களை அநுராதபுரத்திலுள்ள காணி சீர்திருத்த ஆணைக்குழு அலுவலகத்துக்கு மாற்றுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழ்ப்பாணம் மாவட்ட செயலக வாயிலை மறித்து போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது. தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கவனயீர்ப்புப் போராட்டம் இன்று காலை ஆரம்பமானது. நாடாளுமன்ற... Read more »

யாழ்ப்பாணத்தில் பெண் ஒருவரின் தலைமையில் நூதன கொள்ளையில் ஈடுபடும் கொள்ளையர்கள் தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த கொள்ளை கும்பல் முச்சக்கர வண்டி சாரதிகளை இலக்கு வைத்தே கொள்ளையில் ஈடுபட்டு வருகின்றது. இது குறித்து தெரிய வருவதாவது , யாழ்ப்பாணம் புறநகர் பகுதிகளான காக்கை தீவு... Read more »

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு இலவசமாக மின்சாரத்தை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதுவரை மின்சார வசதியில்லாத குறைந்த வருமானம் பெறுபவர்கள் மற்றும் சமுர்த்தி பெறுநர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும் என மின்சக்தி அமைச்சர் டலஸ் அலகப்பெரும தெரிவித்தார். அந்தவகையில் இந்த மாதம் 6 ஆம்... Read more »