பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கான விலைகள் அதிகரிப்பு?

பாண் மற்றும் பேக்கரி உற்பத்திப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையொன்று இல்லாத காரணத்தினால், அவற்றின் விலை அதிகரிப்பதை கட்டுப்படுத்த முடியாது என நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது. அத்துடன், இறக்குமதி செய்யப்படுகின்ற மாஜரின் மற்றும் மரக்கறி எண்ணெய்க்கான வரியை அதிகரிப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ள நிலையில்,... Read more »

யாழ்ப்பாணத்திலிருந்து வடக்குக்கு வெளியே பஸ் சேவைகள் ஆரம்பம்!!

யாழ்ப்பாணத்திலிருந்து வடக்கு மாகாணத்துக்கு வெளியே மாவட்டங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டன. கொழும்பு, கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கிடையிலான பயணிகள் போக்குவரத்து சேவை இன்றைய தினம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையத்திலிருந்து வடபிராந்திய போக்குவரத்துச் சபையின் பேருந்து சேவைகள்... Read more »

சுகாதார நடைமுறைப் பின்பற்ற யாழ்.நகரில் பொலிஸார் விழிப்பூட்டல்

“நாட்டில் கோரோனா தொற்று முற்றாக நீங்கிவிடவில்லை. எனவே யாழ்ப்பாணம் மக்கள் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றி அவதானமாக செயற்பட வேண்டியது அவசியம்” என்று யாழ்ப்பாணம் தலைமையகப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் பிரசாத் பெர்னான்டோ தெரிவித்தார். கோரோனா தொற்றிலிருந்து பாதுகாப்பதற்கான சுகாதார நடைமுறைகளை... Read more »

சமூக இடைவெளி விதிமுறைகளை மீறுவோர் கைது செய்யப்படுவார்கள்!!

இன்றையதினம் நாடுமுழுவதிலும் ஊரடங்கு சட்டம் பகல் வேளையில் தளர்த்தப்படுகிறது. இக்காலப்பகுதிக்குள் ஊரடங்கு சட்டம் அமுலில் இல்லாத போதிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்கத் தவறுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண நாட்டு மக்களுக்கு அறிவித்தார் .... Read more »

கொரோனா தொற்றால் இலங்கையில் 10வதாக உயிரிழந்த பெண்ணின் உடல் இழுபறிக்கு மத்தியில் தகனம்!!

கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் நேற்றைய தினம் உயிரிழந்த 10 ஆவது நபரின் உடல் நேற்று இரவு சுகாதார முறைப்படி தகனம் செய்யப்பட்டது. குவைத்தில் இருந்து நாடு திரும்பி திருகோணமலை மங்கி பிரிட்ஜ் இராணுவ முகாம் தனிமைப்படுத்தல் நிலையத்தில் இருந்த 51 வயதுடைய கம்பஹா, பயாகலையை... Read more »

சிறப்பு அனுமதியுள்ளவர்கள் ரயில்களில் கொழும்புக்குள் வர முடியும் – போக்குவரத்து அமைச்சர்

அத்தியாவசிய சேவைகள் காரணமாக சிறப்பு அனுமதியுள்ள நபர்கள் மட்டுமே தொடருந்து ஊடாக கொழும்புக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்றும் போக்குவரத்து முகாமைத்துவ அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். இன்று முதல் கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்படும் என்றாலும், சுகாதார அமைச்சின் அனுமதியின்... Read more »

சுன்னாகம் பகுதியில் தாக்குதலுக்கு தயாராகவிருந்த சிலர் கூரிய ஆயுதங்களுடன் கைது

யாழில் வாள்கள் உள்ளிட்ட கூரிய ஆயுதங்களுடன் தாக்குதல் ஒன்றுக்கு தயாராகவிருந்த வன்முறைக் கும்பல் ஒன்றைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். உடுவில் அம்பலவாணர் வீதி, காலி கோவிலடியில் வைத்து நேற்று (திங்கட்கிழமை) மாலை மூவரும் கைது செய்யப்பட்டனர் என்றும்... Read more »

மந்திகையில் இராணுவ சிப்பாயைத் தாக்கியவர் கைது!

யாழ். மந்திகை பகுதியில் இராணுவத்தினர் மீது தாக்குதல் நடத்திய சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என்று யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத் தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர். பருத்தித்துறை மற்றும் சாவகச்சேரி ஆகிய பகுதிகளில் 3 கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய புத்தளத்தைச் சேர்ந்தவரே இராணுவச் சிப்பாய் மீது... Read more »

நாடளாவிய ரீதியில் தளர்த்தப்பட்டது ஊரடங்கு

நாடளாவிய ரீதியில் கடந்த இரண்டு நாட்களாக அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 5 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது. அதேநேரம் இரண்டு மாதங்களுக்கும் அதிக காலம், கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அமுலாக்கப்பட்ட ஊரடங்கு சட்டம் இன்று முதல் தற்காலிகமாக தளர்த்தப்படுகிறது. இதன்படி, இன்று... Read more »

இன்று முதல் மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் ஆரம்பம்!!

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய மாகாணங்களுக்கு இடையிலான பேருந்து சேவைகள் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அதன்படி அதிகாலை 4.30 மணி முதல் மாலை 6 மணி வரையில் சுகாதார ஆலோசனைகளுக்கு உட்பட்டு இவ்வாறு போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. மேலும்... Read more »

ஊரடங்கு தொடர்பில் சற்று முன்னர் வெளியான செய்தி!!

கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள ஊரடங்கு சட்டம் மீள் அறிவித்தல் வரை தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக பிரிவு இதனை தெரிவித்துள்ளது. இந்நிலையில் எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நாடு பூராகவும் ஊரடங்கு சட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. கொழும்பு... Read more »

யாழ்.போதனா வைத்தியசாலை பணிப்பாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை??

யாழ்.மாவட்டத்தில் கொரோனாவுக்கு பின்னர் தற்போது டெங்கு காய்ச்சலின் தாக்கம் மக்கள் மத்தியில் பீதியை உண்டாக்கியிருக்கும் நிலையில் யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்திற்குள் 7 இடங்களில் டெங்கு நுளம்பு பெருகும் வாய்ப்புக்கள் காணப்படுவதாக வடமாகாண ஆளுநரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. வடமாகாணத்திலுள்ள சுகாதார வைத்திய அதிகாரிகளை சந்தித்த... Read more »

யாழ்ப்பாணத்தில் வழிப்பறிக் கொள்ளையில் ஈடுபட்ட இருவர் பொலிஸாரிடம் மாட்டினர்

யாழ்ப்பாணத்தில் பல்வேறு இடங்களில் வீதியில் செல்லும் பெண்களின் தங்க ஆபரணங்களை அபகரித்த மோட்டார் சைக்கிள் வழிப்பறி சந்தேக நபர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட கொள்ளைச் சந்தேக நபர்களிடமிருந்து வழிப்பறிகளுக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள் ஒன்றும், 9 தங்கச் சங்கிலிகளும் கைப்பற்றப்பட்டுள்ளன.அத்துடன் 2... Read more »

இளம் பெண் சட்டத்தரணியிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட இராணுவம்!!

யாழ்ப்பாணத்தில் இளம் பெண் சட்டத்தரணி ஒருவருடன் இராணுவத்தினர் அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் நகரை அண்மித்த பகுதியில் இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த இளம் பெண் சட்டத்தரணி ஒருவர் தனது மூத்த சட்டத்தரணியின் அலுவலகத்தில் கடமைகளை முடித்துக்கொண்டு இரவு 7... Read more »

யாழ்.வல்வெட்டித்துறையில் பாரிய கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடைய கொள்ளையர்கள் கைது

யாழ்.வல்வெட்டித்துறை பகுதியில் பல கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் 3 பேரை வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்துள்ளதுடன், அவர்களிடமிருந்த 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பெறுமதியான நகைகளை மீட்டிருக்கின்றனர். 23, 24 மற்றும் 26 வயதுடைய கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகிய... Read more »

யாழில் கடும் காற்றினால் வாழைத்தோட்டங்கள் சேதம் – விவசாயிகள் கவலை

யாழில் நேற்று மாலை முதல் கடும் காற்று வீசி வருகின்ற நிலையில் நீர்வேலி, கோப்பாய், புன்னாலைக்கட்டுவன் உள்ளிட்ட பல இடங்களில் உள்ள வாழைத் தோட்டங்கள் அழிவடைந்துள்ளன. பல வாழைகள் குலைகளுடன் முறிந்து விழுந்துள்ளன. வாழை குலைகள் முற்ற முதல் மரங்கள் முறிந்து விழுந்துள்ளதால் விவசாயிகள்... Read more »

க.பொ.த சாதாரண தர, உயர்தர பரீட்சைகளைப் பிற்போடும் தீர்மானம் எதுவும் இல்லை – கல்வி அமைச்சு

இதுவரை இவ்வாண்டுக்குரிய க.பொ.த சாதாரண தரப் பரீட்சை மற்றும், உயர் தரப் பரீட்சை ஆகியவற்றை பிற்போடுவதற்கு தீர்மானிக்கவில்லை என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. எந்தவொரு பரீட்சார்த்திக்கும் அநீதி இழைக்கப்படாத வகையில் பரீட்சைகள் நடத்தப்படுமென அமைச்சின் செயலாளர் என்.எச்.எம். சித்ரானந்த தெரிவித்தார். கண்டி குருதெனிய கல்வி... Read more »

வானிலை முன்னறிவிப்பு!!

நாட்டின் வானிலையில் ‘AMPHAN’ சூறாவளியின் தாக்கம் இன்றிலிருந்து குறைவடையும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ‘AMPHAN’ என்ற சூறாவளியானது நேற்று (2020 மே 20ஆம் திகதி) முற்பகல் 08.30 மணிக்கு திருகோணமலைக்கு வடகிழக்காக ஏறத்தாழ 1420 கி.மீ தூரத்தில் வட அகலாங்கு 19.80 N இற்கும் கிழக்கு... Read more »

விமானப் படையின் அம்புலன்ஸ் மோதி குடும்பத்தலைவர் சாவு!

விமானப் படையின் அம்புலன்ஸ் வாகனம் மோதி குடும்பத்தலைவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அவரது மனைவி படுகாயமடைந்தார். பளையில் இன்று காலை இந்தத் துயரச் சம்பவம் இடம்பெற்றது. பளை – தம்பகாமம் சந்தியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த குடும்பத் தலைவரும் அவருடைய மனைவியும் வந்து... Read more »

ஜூன் மாதம் 5,000 ரூபா வழங்கப்படாது!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகளால் வருமானத்தை இழந்த குடும்பங்களிற்கு வழங்கப்பட்டு வந்த 5,000 ரூபா கொடுப்பனவை ஜூன் மாதத்தில் வழங்குவதில்லையென அமைச்சரவை நேற்றையதினம் (20) முடிவு செய்துள்ளது. பொதுத் தேர்தல் வரவுள்ளதால் இந்த கொடுப்பனவை நிறுத்தும்படி தேர்தல்கள் ஆணைக்குழு விடுத்த அறிவிப்பை ஏற்று இந்த முடிவு... Read more »