- Tuesday
- September 17th, 2024
இளம் பெண்ணின் டிக்டொக் வீடியோக்களைப் பார்த்து ஏமாந்த 52 வயதுடைய ஒருவர் 45 லட்சம் ரூபாவைப் பறிகொடுத்த சம்பவம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த மோசடிச் சம்பவம் தொடர்பாக யாழ்ப்பாணம் விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொலிஸாரால் மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தற்போது சுவிஸ் நாட்டில் வசிக்கும் 52 வயதான நபரே இச்சம்பவத்திற்கு...
தனது நண்பிக்காக வங்கியில் இருந்து கடனாக பெற்று கொடுத்த பணத்தினை மீள பெறமுடியாமையினால் மனமுடைந்த குடும்ப பெண் தனது உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார். யாழ்ப்பாணம், அல்வாய் பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயே உயிரிழந்துள்ளார். உறவு முறையான இரு பெண்களுக்கு இடையில் நீண்ட கால நட்பு இருந்து வந்துள்ளது. அதில் ஒரு பெண் பண கஷ்டத்தில்...
நெடுந்தீவு பொலிஸாரினால் கைப்பற்றப்பட்ட மதுபானம், தேயிலை சாயமாக மாறியது தொடர்பில் ஊர்காவற்துறை நீதிமன்ற உத்தரவில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நெடுந்தீவு பகுதியில் அளவுக்கு அதிகமான மதுபான போத்தல்களை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவர் நெடுந்தீவு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு , அவருக்கு எதிராக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதன் போது, நெடுந்தீவு...
பல்கலைக்கழகத்தினால் பட்டதாரிகளுக்கு வழங்கப்படுகின்ற பட்டத்தை பிரேதப்பெட்டியில் ஏற்றி, வேலையில்லா பட்டதாரிகள் யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ். மாவட்டச் செயலகத்திற்கு முன்னாபாக நேற்று காலை இந்த கவனயீர்ப்பு போராட்டம் மேற்கொள்ளப்பட்டது. அனைத்து பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்ப்பை வழங்க வேண்டுமென இதன்போது வேலையில்லா பட்டதாரிகள் வலியுறுத்தியிருந்தனர். இதன்போது,...
போலி ஆவணங்களை உருவாக்கிக் காண்பித்து மருத்துவர் என அறிமுகப்படுத்தி கனடாவில் உள்ள ஒருவரிடம் ஒரு கோடியே 42 லட்சம் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர் யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜகத் விசாந்தவின் கீழ் இயங்கும் யாழ்ப்பாணம் மாவட்ட விசேட குற்ற விசாரணைப் பிரிவுப் பொறுப்பதிகாரி குணறோயன் தலைமையிலான பொலிஸ் குழுவால் கைது...
யாழில் 4 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மின் கட்டணத்தை செலுத்தாது இராணுவத்தினர் முகாமை விட்டு சென்றுள்ளனர் என குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. மானிப்பாய் கிறீன் வைத்தியசாலையின் ஒரு பகுதியில் 4 வருட காலமாக இராணுவத்தினர் முகாம் அமைத்து இருந்துள்ளனர் எனக் கூறப்படுகின்றது. இந்நிலையில் குறித்த காலப்பகுதிக்கான மின்சாரக் கண்டனத்தை அவர்கள் செலுத்தாமல் இருந்துள்ளனர் எனவும், நிலுவையாக...
யாழ்ப்பாணத்தில் பாண் ஒன்றுக்குள் கண்ணாடித் துண்டுகள் காணப்பட்டமையை அடுத்து, பொதுச் சுகாதார பரிசோதகரிடம் முறையிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் மருதனார்மடம் பகுதியில் உள்ள கடையொன்றில் நேற்றையதினம் ஒருவர் பாண் வாங்கியுள்ளதுடன், அதனை வீட்டில் சாப்பிட முனைந்த போது, பாணினுள் இருந்து உடைந்த போத்தலின் கண்ணாடித் துண்டுகள் காணப்பட்டுள்ளன. அது தொடர்பில் அப்பகுதி சுகாதார பரிசோதகருக்கு அறிவிக்கப்பட்டதை , அடுத்து...
யாழில் உணவு உற்பத்தி மையம் ஒன்றினுள் பொதுசுகாதார பரிசோதகர்களை அடைத்து வைத்த குற்றச்சாட்டில் இருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர். [caption id="attachment_90906" align="aligncenter" width="759"] Business crime[/caption] இது குறித்து மேலும் தெரிய வருவதாவது” பன்னாலை பகுதியில் இயங்கும் உணவு உற்பத்தி மையம் ஒன்றிற்கு சோதனை நடவடிக்கைக்காக நேற்றைய தினம் இரண்டு பொது சுகாதார பரிசோதகர்கள் சென்றுள்ளனர்....
யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தனது சகோதரியின் பெயரில் கடவுசீட்டு மற்றும் வங்கி ஆவணங்களை போலியாக பெற்ற குற்றச்சாட்டில் டென்மார்க் பிரஜையை யாழ்ப்பாண பொலிஸார் நேற்று (19) ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டு தற்போது டென்மார்க் பிராஜவுரிமை பெற்று டென்மார்க்கில் வசிக்கும் 42 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண் கடந்த 2015ஆம்...
காத்தான்குடி பகுதியில் இருந்து யாழ்ப்பாணம் வந்து , தனது மகளுக்கு சிறுநீரக சிகிச்சைக்கு பணம் வேண்டும் என பொய் கூறி யாசகம் பெற்ற தந்தை கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் , கல்வியங்காடு சந்தை பகுதியில் 4 வயது சிறுமியை சக்கர நாற்காலியில் இருத்தி , சிறுமியின் இரு சிறுநீரகங்களுக்கு பழுதடைந்துள்ளதாகவும் , அதற்கான...
குழந்தையை பிரசவித்த பாடசாலைச் சிறுமி ஒருவர் குழந்தையை வைத்தியசாலையிலேயே விட்டுவிட்டு சென்ற சம்பவம் ஒன்று யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றுள்ளது. கர்ப்பம் தரித்திருந்த 15 வயது சிறுமியொருவர் தனது தாயுடன் குழந்தை பிரசவத்துக்காக கடந்த வெள்ளிக்கிழமை (10) மாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதன்போது, வடமராட்சி துன்னாலை பகுதியை அவர்கள் விலாசமாக வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று...
வெளிநாட்டவர் ஒருவரின் பெரும் தொகை பணமடங்கிய பையை கையளித்த பருத்தித்துறை பேருந்து காப்பாளரின் செயற்பாட்டினை பலரும் பாராட்டி வருகின்றனர். பருத்தித்துறை சாலையில் காப்பாளராக கடமையாற்றும் பாலமயூரன் என்பவர் கொழும்பிலிருந்து பருத்தித்துறை நோக்கி சேவைக் கடமையில் நேற்று(07.05.2024)ஈடுபட்டிருந்தார். குறித்த பேருந்தில் வெளிநாட்டவர் ஒருவரினால் தவறவிடப்பட்ட கடவுச்சீட்டு, 120,840 இலங்கை ரூபாய் பணம் மற்றும் 300 யூரோ பணத்தினை...
வவுனியா சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் இரண்டில் கல்வி பயிலும் மாணவன் மீது ஆசிரியர் கண்மூடித்தனமாக தாக்கியதில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நான்கு நாட்களின் பின்னர் குறித்த ஆசிரியர் நேற்றையதினம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார் வவுனியா, சுந்தரபுரம் பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவன் கடந்த (03.04) அன்று பாடசாலை...
கூகுள் மேப் காட்டிய பாதையில் சென்று கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள பிரதமர் உத்தியோகபூர்வ வாசஸ்தலமான அலரிமாளிகைக்குள் அத்துமீறி நுழைந்த இருவருக்கு கோட்டை நீதவான் பிணை வழங்கியுள்ளார். இந்த இரு நபர்களும் சனிக்கிழமை கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, மென்பொருள் பொறியியலாளர் ஒருவரும் கப்பலில் பணிபுரியும் நபர் ஒருவரும் சனிக்கிழமை...
வட்டுக்கோட்டை பொலிசார் தன்னை தாக்கியதாக யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் முறையிட்டது போலியான சம்பவம் என்பது உறுதியாகியுள்ளது. முறைப்பாடளித்த பலகலைக்கழக மாணவன் ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையானவர் என்பது மருத்துவ பரிசோதனையில் உறுதியானது. பொலிசார் தன்னை காலில் பிடித்து தூக்கியடித்ததாக மாணவன் முறைப்பாடளித்துள்ள போதும், மாணவன் தாக்கப்பட்டதற்கான எந்தவொரு அறிகுறியும், தடயமும் அவரில் இல்லையென்பதும் மருத்துவ பரிசோதனையில் உறுதியாகியுள்ளது....
யாழ்ப்பாணத்தில் தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரம் காணாமல் போயுள்ளது. எயிட்ஸ் தொற்றினை கட்டுப்படுத்தும் வகையில் , நாடாளாவிய ரீதியில் தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரங்கள் தெரிவு செய்யப்பட்ட சில பொது இடங்களில் பொருத்தப்பட்டது. அவ்வாறு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலை வளாகத்தில் பொருத்தப்பட்டு இருந்த தானியங்கி ஆணுறை வழங்கும் இயந்திரம் காணாமல் போயுள்ளது. இது தொடர்பில் விசாரணைகள்...
யாழ்ப்பாண நகர் பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் அண்மையில் களியாட்டம் என்னும் பெயரில் இடம்பெற்ற போதை விருந்து கொண்டாட்டம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கொழும்பைச் சேர்ந்த நிறுவனம் ஒன்றே இந்த நிகழ்வுக்கு சமூக வலைத்தளங்களின் ஊடாக அழைப்பு விடுத்துள்ளது. ஆண்களுக்கு நுழைவு சீட்டு 1,500 ரூபாய்க்கும் அவர்களுடன் வரும் பெண்களுக்கு 1,000 ரூபாய்...
அளுத்கம பகுதியில் உள்ள பிரபல உணவகம் ஒன்றில் கொள்வனவு செய்யப்பட்ட ரோல்ஸில் பிளாஸ்டிக் அல்லது இறப்பருக்கு நிகரான முட்டை இருந்ததாக வாடிக்கையாளர் ஒருவர் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த முறைப்பாடானது அளுத்கம சுகாதார பரிசோதகரிடம் கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். அளுத்கம, களுவாமோதர பிரதேசத்தில் வசிக்கும் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளாதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முறைப்பாட்டாளர் மற்றொரு...
யாழ்ப்பாணம் வரதராஜப்பெருமாள் ஆலய புனருத்தாரணப் பணிக்காக யாசகர் ஒருவர் 2 இலட்சம் ரூபாய் நிதியுதவி செய்த சம்பவம் நெகிழ்வை ஏற்படுத்தியுள்ளது. யாழ்ப்பாணம் வண்ணை ஸ்ரீ வேங்கடேச வரதராஜப்பெருமாள் தேவஸ்தானத்தில் பாலஸ்தாபனம் நிகழ்ந்து, அந்த ஆலயம் புனருத்தாரணம் செய்யப்படவுள்ளது. இக்கட்டுமானப் பணிக்காக யாசகர் ஒருவர் தன்னால் சேகரிக்கப்பட்ட நிதியில் இருந்து 2 இலட்சம் ரூபாய் பணத்தை ஆலய...
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக உள்ள சைவ உணவகத்தில் ஒரு கோப்பை பால் தேநீர் 200 ரூபாய்க்கு விற்கப்படுவதாக மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவ பெருவிழாவினை முன்னிட்டு திருநெல்வேலியில் அமைந்துள்ள சைவ உணவகம் ஒன்று நல்லூர் ஆலயத்திற்கு அருகில் தனது கிளை நிறுவனம் ஒன்றினை நேற்றைய தினம் ஆரம்பித்திருந்தது. இந்நிலையில் நேற்று...
Loading posts...
All posts loaded
No more posts