யாழ் நகர மத்தியில் அமைந்துள்ள பிரபல ஆண்கள் பாடசாலையில் ஆசிரியர் ஒருவர் மாணவர்களை கதிரையால் தாக்கியதில் ஐந்து மாணவர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
பாடசாலையில் தரம் 08 கல்வி கற்கும் மாணவர்கள் பாடசாலை நேரம் வகுப்பறையில் அமைதியின்றி காணப்பட்டுள்ளனர். அதனை அடுத்து அங்கு வந்த ஆசிரியர் வகுப்பறையில் இருந்த மாணவர்களின் கதிரையை தூக்கி மாணவர்கள் மீது மூர்க்கத்தனமாக தாக்குதலை மேற்கொண்டுள்ள்ளார்.
இதனால் ஐந்து மாணவர்கள் காயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். சம்பவம் தொடர்பில் கேள்வியுற்ற அதிபர் ஆசிரியர் மீது நிர்வாக ரீதியான விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.