- Friday
- August 1st, 2025

கந்தரோடையில் பௌத்த மத்திய நிலையம் அமைப்பதற்கு முன்னெடுக்கப்படும் நடவடிக்கை தொடர்பில் வலிகாமம் தெற்கு பிரதேச சபையில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன. குறித்த நடவடிக்கை தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டால் அதற்கு எதிராக நீதிமன்ற நடவடிக்கைக்கு செல்வதற்கும் தயாராக இருப்பதாக வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் தவிசாளர் திராகராஜா பிரகாஸ் தெரிவித்துள்ளார். யாழ். வலிகாமம் தெற்கு பிரதேச சபையின் மாதாந்த அமர்வு...

செம்மணியில், ஒரு பெரிய எலும்பு கூட்டு தொகுதி, சிறு குழந்தையின் எலும்புக்கூட்டினை அரவணைத்தவாறு அடையாளம் காணப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் நேற்றைய தினம் புதன்கிழமை புதிதாக 04 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 03 முற்றாக அகழ்ந்து...

எதிர்வரும் சில நாட்களில் வடக்கு, வடமத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்ய சாதகமான வளிமண்டல நிலைமைகள் உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமத்திய, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்...

ரஷ்யாவின் தூர கிழக்கு பிராந்தியமான கம்சட்காவில் 8.8 ரிச்டர் அளவில் ஏற்பட்ட மிகப்பெரிய பூகம்பத்தை தொடர்ந்து ஜப்பானை சுனாமி பேரலைகள் தாக்கியுள்ளது. இந்த சுனாமி பேரலை ஜப்பானின் வடக்கு ஹொக்கைடோ தீவில் சுமார் 30 சென்டிமீட்டர் (ஒரு அடி) உயரத்திற்கு மேலெழுந்துள்ளது. அங்கு அடுத்தடுத்த அலைகள் மிக அதிகமாக தாக்கலாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஜப்பானின்...

நாவற்குழி பகுதியில் கடந்த 1996 ஆம் ஆண்டு இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 22 பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனு யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் நடைபெற்ற பகுதியானது சாவகச்சேரி நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்குள் உட்படுவதால் குறித்த வழக்கு சாவச்சேரி நீதிவான் நீதிமன்றத்தில் பாரப்படுத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்று...

இன்று (29) அதிகாலை 12:11 மணியளவில், வங்கக்கடலில் அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகில் 6.3 ரிக்டர் அளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக இந்திய தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தின் மையம் கடலுக்கு அடியே 10 கி.மீ ஆழத்தில், அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகளுக்கு அருகே அமைந்திருந்தது. இந்த நிலநடுக்கத்தால் இதுவரை...

செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் நேற்று (28) புதிதாக 03 எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் நிலையில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட மனித எலும்புக்கூட்டு தொகுதிகளில் 01 முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கடந்த 08 நாட்களாக முன்னெடுக்கப்பட்டு அகழ்வு பணியில், 31 எலும்புக்கூட்டு தொகுதிகள் முற்றாக...

கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் பயன்பாட்டில் இருந்த ஒரேயொரு மின் தூக்கி செயலிழந்த நிலையில் வைத்தியசாலையின் செயற்பாடுகள் கடும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. வைத்தியசாலையின் நோயாளர் விடுதிகள் உட்பட சத்திர சிகிச்சை கூடம் என பெரும்பாலான நடவடிக்கைகள் முதலாவது மாடியில் காணப்படுவதனால் நோயாளர்கள் படிக்கட்டு வழியாக ஏற்றி இறக்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதனால் கர்ப்பிணி தாய்மார்கள் உட்பட நோயாளர்கள்...

இலங்கை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் (உரோம்) உடன்படிக்கையில் கையெழுத்திடா விட்டாலும் இலங்கையில் இடம் பெற்ற மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் போர்க்குற்றங்கள் இன அழிப்பு ஆகியவற்றுக்காக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்துவதற்கான வழிகள் இருப்பதாக அகில இலங்கை தமிழ் காங்கிரஸன் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை (YMCA) மண்டபத்தில் சரேஷ்ட...

நேற்று (27) மாலை 7 மணியளவில் யாழ். நெல்லியடி பேருந்து நிலையத்தில் கறுப்பு ஜூலை நினைவேந்தல் நிகழ்வு இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் ஏற்பாட்டில் நடைபெற்றது. இந்நிகழ்வின் போது தீப்பந்த போராட்டம் இடம்பெற்றதுடன் கட்சியின் செயலாளர் MA.சுமந்திரன், மாநகர மற்றும் பிரதேச சபைகளின் தவிசாளர்கள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

தாவடி பகுதியில் உள்ள மதுபான சாலைக்கு அருகில் நேற்று முன்தினம் (23) மாலை இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தில் , சுதுமலை பகுதியை சேர்ந்த 51 வயதுடைய நேசராஜன் சர்வேந்திரன் என்பவர் உயிரிழந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் வந்த இரு நபர்கள் குறித்த நபர் மீது கத்திக்குத்து தாக்குதலில் ஈடுபட்டு தப்பி சென்றுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது....

நீண்டகாலமாக தமிழ் மக்கள் மீது திட்;டமிடப்பட்டவகையில் நடாத்தப்பட்டு வரும் இன அழிப்பிற்கு சர்வதேசநீதி கோரிய போராட்டமானது வடக்குகிழக்கு சமூகஇயக்கத்தின் ஏற்பாட்டில் வடக்குகிழக்கின் 8 மாவட்டங்களிலும் எதிர்வரும் 26ம் திகதி சனிக்கிழமை காலை பத்து மணிக்கு நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மட்டக்களப்பு காந்தி பூங்கா, அம்பாறை திருக்கோயில், திருகோணமலை சிவன் கோயிலடி , முல்லைத்தீவில் மாவட்ட செயலகம்,...

செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று நான்காவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில் மேலும் 09 மனித என்புக்கூடு மீட்கப்பட்டுள்ளதுடன் புதிதாக 3 மனித எச்சங்கள் அடையாளங் காணப்பட்டுள்ளன. இந்நிலையில் செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து நேற்றுடன் மொத்தமாக 94 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழியில் நேற்று நான்காவது நாளாகவும் அகழ்வு...

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 10 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடாத்தப்படவுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே தெரிவித்துள்ளார். மேற்படி பரீட்சை நாடளாவிய ரீதியில் 2787 பரீட்சை நிலையங்களில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதற்கிணங்க முதலாவது வினாப்பத்திரம் முற்பகல் 9. 30 முதல்...

எதிர்வரும் 23 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் 'நட்புறவுப் பாலம்' என்ற பெயரில் அநுரகுமார திசாநாயக்கவின் அரசு ஒரு பாரிய சதித்திட்டத்தை முன்னெடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் எச்சரித்துள்ளார். இந்த நிகழ்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், அன்றைய தினம் கறுப்புக் கொடி கட்டி தமிழ் மக்கள் தங்கள் எதிர்ப்பையும் துக்கத்தையும் வெளிப்படுத்த...

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து, பின்னர் இராணுவத்தினரால் புனர்வாழ்வு செய்யப்பட்ட ரமேஷ் என்பவர் நேற்றிரவு (21) கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொடை புதிய வீதியில் வைத்து பேலியகொடை பொலிசார் சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து டி-56 ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. குற்றச் செயல் ஒன்றை மேற்கொள்ளும் நோக்குடன் அவர் இந்தத்...

வடக்கில் புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்ட, இலங்கையில் நான்காவது பெரிய மனித புதைகுழி வளாகத்தில் பத்து நாட்கள் இடைவேளைக்குப் பின்னர் மீண்டும் அகழ்வுப்பணிகள் ஆரம்பமாகியுள்ளன. 10 நாள் இடைவேளைக்குப் பின்னர் அகழ்வாய்வின் முதல் நாளில் மேலும் ஏழு எலும்புக்கூடுகள் புதிதாக அடையாளம் காணப்பட்டுள்ளதாக, பாதிக்கப்பட்டவர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் சட்டத்தரணி வி.எஸ். நிரஞ்சன், அகழ்வாய்வுத் தளத்தில் வைத்து திங்கட்கிழமை ( 21...

இடைநிறுத்தப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வுப் பணிகள் இன்று மீள ஆரம்பமாகியுள்ளன. செம்மணி – சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அபிவிருத்திப் பணிகளின் போது மனித என்பு எச்சங்கள் அடையாளம் காணப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றின் உத்தரவுக்கமைய கடந்த மே மாதம் 15ஆம் திகதி முதல் முதலாம் கட்ட அகழ்வுப் பணிகள் ஆரம்பமாகின....

யாழ்ப்பாணத்தில் ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த இளைஞர் கடந்த சனிக்கிழமை (19) உயிரிழந்தார். யாழ்ப்பாணம் - சிவலிங்கப் புளியடியைச் சேர்ந்த 26 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 5 வருடங்களாக ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் சனிக்கிழமை மயக்கமடைந்த நிலையில் வீட்டில்...

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் நிர்வாகத் தெரிவும் கலந்துரையாடலும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. வலிந்து காணப்பட்ட உறவுகள் தமது உறவுகளை தேடும் போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு எட்டு மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தமது சங்கங்களின் தலைவர் செயலாளர் உள்ளிட்டோரை தெரிவு செய்தனர். இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் வடக்கு...

All posts loaded
No more posts