Ad Widget

தேர்தல் மீண்டும் ஒத்திவைப்பு!

2023 ஆம் ஆண்டு ஏப்ரல் 25 ஆம் திகதி நடைபெறவிருந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இரண்டாவது தடவையாக ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. தேர்தலை திட்டமிட்டபடி நடத்த பல்வேறு தடைகள் இருந்தபோதிலும், தேவையான நிதி ஒதுக்கீடுகள் கிடைக்காததாலும், ஆணைக்குழுவின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களாலும் தேர்தலை ஒத்திவைக்க நேரிட்டதாக ஆணைக்குழு வெளியிட்டுள்ள சிறப்பு அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. உள்ளூராட்சி...

மீண்டும் ஒத்திவைக்கப்படுகின்றது தேர்தல்? நாளை வெளியாகிறது அறிவிப்பு?

தற்போதைய நிலவரத்தை கருத்திற் கொண்டு தேர்தலை திட்டமிட்ட திகதியில் நடத்துவதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளது என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பில் அரசியல் கட்சிகளுடன் கலந்துரையாடியதன் பின்னரே இறுதி தீர்மானம் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை நாளை(வியாழக்கிழமை) தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு அழைத்து...
Ad Widget

உள்ளூராட்சித் தேர்தல் மீண்டும் தாமதமாகும் சாத்தியம்?

உள்ளூராட்சித் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு திட்டமிட்ட திகதிகளில் இடம்பெறுவது மீண்டும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. தேர்தல் இடம்பெறவேண்டும் என்றால் தபால் வாக்குச் சீட்டுகளை மார்ச் 21 ஆம் திகதிக்குள் தமக்கு கிடைக்க வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. எவ்வாறாயினும் இன்றைய தினத்திற்குள் உரிய நிதி ஒதுக்கீடுகள் கிடைத்தால் குறிப்பிட்ட திகதிக்குள் அவற்றை அச்சிட முடியாது...

உள்ளூராட்சித் தேர்தல் ஏப்ரல் 25ம் திகதி : தேர்தல் ஆணைக்குழு

உள்ளூராட்சித் தேர்தலை எதிர்வரும் ஏப்ரல் 25ம் திகதி நடத்த தீர்மானித்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. அதன்படி, இது தொடர்பான அறிவிப்பை வெளியிட மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு தேர்தல்கள் ஆணைக்குழு உத்தரவிட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் அதற்கான நிதி மற்றும் வாக்குச்சீட்டு அச்சிடுதல் உள்ளிட்ட விடயங்கள் தொடர்பாக தீர்மானம் எடுப்பதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு இன்று செவ்வாய்க்கிழமை கூடியது....

நடைபெறாத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது – ஜனாதிபதி

நடைபெறாத தேர்தலை எவ்வாறு பிற்போடுவது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். நாடாளுமன்றில் இன்று(வியாழக்கிழமை) விசேட உரையாற்றிய அவர் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், தற்போதை சூழ்நிலையில் தேர்தலொன்றை நடத்துவதற்கு நாட்டின் பொருளாதாரம் சீராக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தலுக்கான நிதி இல்லையென கடந்த டிசம்பர் 14ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழுவுக்கு அறிவித்ததாகவும்...

உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது – தேர்தல்கள் ஆணைக்குழு

திட்டமிட்டபடி மார்ச் மாதம் 9ஆம் திகதி உள்ளூராட்சித் தேர்தலை நடத்த முடியாது என தேர்தல்கள் ஆணைக்குழு உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

உள்ளூராட்சி தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு ஒத்திவைப்பு!

023 உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பு மறு அறிவித்தல் வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று அறிவித்துள்ளது.

தேர்தல்கள் பிற்போடப்படலாம் ?

தபால் வாக்குசீட்டுகளை விநியோகிக்க முடியாது என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் கட்சி தலைவர்களுக்கு அறிவித்துள்ளமை உள்ளுராட்சி தேர்தல்கள் பிற்போடப்படலாம் என்பதற்கான அறிகுறி என ஆங்கில செய்தி இணையத்தளமொன்று தெரிவித்துள்ளது. நாளை இடம்பெறவிருந்த தபால்வாக்குசீட்டுகளை விநியோகிக்கும் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுசெயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்....

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டவாறு நடாத்துமாறு நீதிமன்றம் அனுமதி!

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை திட்டமிட்டவாறு நடாத்துமாறு தேர்தல் ஆணைக்குழுவுக்கு உயர்நீதிமன்றம் அனுமதியை வழங்கியுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் இன்று(வெள்ளிக்கிழமை) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதன்போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதாக தேர்தல் ஆணைக்குழு ஏற்கனவே உறுதிமொழி அளித்துள்ள நிலையில், உள்ளூராட்சித் தேர்தலை நடத்துவதற்கு...

உள்ளூராட்சி தேர்தல் : இன்று முதல் வேட்புமனு

இந்த ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளும் பணி இன்று (18) ஆரம்பமாகவுள்ளது. இன்று முதல் எதிர்வரும் 21 ஆம் திகதி நண்பகல் 12.00 மணி வரை வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான கட்டுப்பணம் செலுத்தும் பணிகள் கடந்த 4ஆம் திகதி ஆரம்பமான நிலையில்...

உள்ளூராட்சி சபைத் தேர்தல் – தனித்து களமிறங்குகின்றது தமிழரசு கட்சி!

நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலில் தனித்து போட்டியிட இலங்கை தமிழரசு கட்சி தீர்மானித்துள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சித் தலைவர்களுக்கிடையிலான சந்திப்பு இன்று(செவ்வாய்கிழமை) காலை கொழும்பிலுள்ள இரா.சம்பந்தனின் இல்லத்தில் இடம்பெற்றிருந்தது. இந்த கலந்துரையாடலில் இரா.சம்பந்தன், மாவை சேனாதிராஜா, செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், ஹென்ரி மகேந்திரன், எம்.ஏ சுமந்திரன், ஆர்.ராகவன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதன்போது...

தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை ஆரம்பம்!

உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை இன்று(வியாழக்கிழமை) முதல் ஆரம்பமாகவுள்ளது. தபால் மூல வாக்களிப்பிற்கான விண்ணப்பங்களை ஏற்கும் நடவடிக்கை எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதேவேளை, எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தல் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும்...

18 ஆம் திகதி முதல் வேட்புமனு கோரல்!!

உள்ளூராட்சி மன்றத் தேர்தல் தொடர்பான வேட்புமனுக்களை எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை கோருவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. அதன்படி வேட்புமனுக்கள் 21 ஆம் திகதி நண்பகல் 12 மணிவரை ஏற்றுக்கொள்ளப்படும்.

எதிர்வரும் வருடம் மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னதாக தேர்தல்!!

எதிர்வரும் 2023ஆம் ஆண்டு மார்ச் 20ஆம் திகதிக்கு முன்னதாக வாக்கெடுப்பு நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. உள்ளூராட்சி மன்ற தேர்தல் ஓராண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் ஜி.புஞ்சிஹேவா தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி மன்ற கட்டளைச் சட்டத்தின் பிரகாரம் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு பின்னர் தேர்தலை நடத்துவதற்கான அதிகாரம் ஆணைக்குழுவுக்கு இருப்பதாகவும் அவர்...

டலஸை ஆதரிப்பதற்கு எழுத்துமூலமான உறுதிப்பாட்டைப் பெற்றது கூட்டமைப்பு

புதிய இடைக்கால ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அகழப்பெருமவுக்கு இன்றைதினம் ஆதரவாக வாக்களிப்பதற்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு டலஸ் அகழப்பெரும மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச ஆகியோரிடமிருந்து எழுத்துமூலமான ஆவணம் பெறப்பட்டமை உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு புதிய இடைக்கால ஜனாதிபதி வேட்பாளர் டலஸ் அகழப்பெருவை ஆதரிப்பதற்காக நிபந்தனைகளை விதித்து எழுத்துமூலமான ஆவணத்தினைப் பெற்றுக்கொண்டதா இல்லையா...

பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட பின்னரே தேர்தல்!- பிரதமர்

தற்பொழுது நாடு எதிர்நோக்கியுள்ள பொருளாதார பின்னடைவுக்கு மத்தியில், அரசாங்கம் உறுதியான பொருளாதார அடித்தளத்தை ஏற்படுத்தினால் மட்டுமே புதிய தேர்தலை நடத்த முடியும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். முதலில் பொருளாதாரம் ஸ்திரப்படுத்தப்பட வேண்டும் எனவும் அதன் பின்னரே தேர்தலை நடத்த முடியும் எனவும் குறிப்பிட்டுள்ளார். நேற்று விசேட அறிக்கையை வெளியிட்டு பிரதமர் இதனை தெரிவித்தார்....

இந்த வருட இறுதிக்குள் மாகாணசபை தேர்தல்!!

சட்டதிருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இந்த வருட இறுதிக்குள் மாகாணசபை தேர்தலை நடாத்துவதற்கு நடவடிக்கை முன்னெடுக்கப்படுமென அமைச்சர் ரமேஸ் பத்திரன குறிப்பிட்டுள்ளார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். உள்ளுராட்சி மன்ற தேர்தல் ஒரு வருடத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. சுகாதார நிலைமையை கருத்தில் கொண்டு இந்த நிலைமை எடுக்கப்பட்டுள்ளது. உள்ளுராட்சி மன்றங்களின் இரண்டு வருடங்கள் கடந்த...

தமிழ் கட்சிகள் உட்பட மூன்று புதிய அரசியல் கட்சிகள் பதிவு – தேர்தல்கள் ஆணையகம்

2021 ஆம் ஆண்டுக்காக மூன்று புதிய அரசியல் கட்சிகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என தேர்தல்கள் ஆணையகம் தெரிவித்துள்ளது. இந்தக் கட்சிகள் தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக பதிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார். அதன்படி, தமிழ் மக்கள் கூட்டணி, புதிய லங்கா சுதந்திரக் கட்சி, தமிழ் முற்போக்கு கூட்டணி என்பன பதிவு செய்யப்பட்டுள்ளதாக...

யாழ். மாவட்டதிற்கு இருந்த நாடாளுமன்ற ஆசனங்களின் எண்ணிக்கை குறைப்பு

2020 ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலின் அடிப்படையில், கம்பஹா மாவட்டத்திற்கு மேலதிகமாக ஒரு ஆசனம் ஒதுக்கப்பட்டுள்ள அதேவேளை யாழ். மாவட்டதிற்கு இருந்த ஆசனங்களில் ஒன்று குறைக்கப்பட்டுள்ளது. அதன்படி கம்பஹா மாவட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட ஆசனங்களின் எண்ணிக்கை 18 ல் இருந்து 19 ஆகவும், யாழ். மாவட்ட இட ஒதுக்கீடு 7 இல் இருந்து 6 ஆகவும் குறைந்துள்ளது....

மாகாண சபைத் தேர்தலினை நடத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானம்!!

மாகாண சபைத் தேர்தலினை விரைவில் நடத்தாதிருக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது,பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தலைமையில் இடம்பெற்ற அரசாங்கத்தின் கட்சித் தலைவர்கள் கூட்டத்தின் போதே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவி வரும் தற்போதைய சூழ்நிலையில் மாகாண சபைத் தேர்தலை நடத்துவது சிறந்த விடயமல்லவென இதன் போது ஆளுந்தரப்பின் கட்சித் தலைவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர், அத்துடன் நாட்டில் தற்போதைய...
Loading posts...

All posts loaded

No more posts