ETF, EPF நிதிகளை மத்திய வங்கியிடம் இருந்து பிரிப்பதற்கு எதிராக தொழிற்சங்கங்கள் எதிர்ப்பு!

ஆசியாவின் மிகப்பெரிய நிதியங்களில் முக்கிய இடத்தைப் வகிக்கும் இலங்கையின் ஊழியர் சேமலாப நிதி மற்றும் ஊழியர் நம்பிக்கைப்பொறுப்பு நிதி ஆகியவற்றை இலங்கை மத்திய வங்கியின் கட்டுப்பாட்டிலிருந்து நீக்கி, மூவர் கொண்ட குழுவிடம் ஒப்படைப்பதற்கு எதிராகச் சுயாதீன தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகளின் ஒன்றியம் எதிர்ப்புப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது. இதன் ஒரு கட்டமாக நேற்று புதன்கிழமை (02)...

மீன் விலை உயர்வுக்கு எல் நினோ காரணமா??

எல் நினோ (El Niño) தாக்கத்தின் காரணமாக எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்கள், இலங்கையின் கடல் சூழலியல் அமைப்பு, மீன்வளம் மற்றும் மீன்பிடித் தொழில்துறையில் ஏற்படுத்தக்கூடிய தாக்கங்களை முன்கூட்டியே மதிப்பிடுவதற்காக, விரிவான தரவு பகுப்பாய்வுகளை உள்ளடக்கிய தொடர் ஆய்வுகளை தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி முகவர் நிறுவனம் (NARA) ஆரம்பித்துள்ளது. இந்த ஆய்வுப் பணிகள்,...
Ad Widget

எல்-நினோ தாக்கத்தினால் தொழில் இழந்தவர்களுக்கு நிவாரணம்

எல்-நினோ காலநிலை தாக்கத்திற்கு முகங்கொடுப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய்வதற்காக சுற்றாடல் அமைச்சர் வைத்தியர் தம்மிக படபெந்தி தலைமையில் நியமிக்கப்பட்ட விசேட அமைச்சரவை உபகுழு மற்றும் அதிகாரிகள் குழுவின் 4ஆவது கூட்டம் அண்மையில் ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது. எல்-நினோ தாக்கம் காரணமாக வேலைவாய்ப்புகளை இழக்கும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து இதன் போது...

பாண் விலை அதிகரிப்பு!!

இன்று நள்ளிரவு (ஆகஸ்ட் 31) முதல் 450 கிராம் எடையக்கொண்ட பாண் ஒன்றின் விலை 10 ரூபாவினால் அதிகரிக்கப்படும் என அனைத்து இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்று (ஆகஸ்ட் 30) ஒரு கிலோகிராம் கோதுமை மாவின் விலை 17 ரூபாவால் அதிகரிக்கப்பட்டதை அடுத்து இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. நுகர்வோருக்கு எவ்வித unfair (முறையற்ற)...

ஐஓசி, சினோபெக் பெற்றோல் விலைகளும் குறைப்பு!!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் பெற்றோல் விலைகளைக் குறைத்ததைத் தொடர்ந்து, லங்கா ஐ.ஓ.சி நிறுவனமும் (LIOC) தனது எரிபொருள் விலைகளைத் திருத்தியமைத்துள்ளது. இதற்கமைய, ஐ.ஓ.சி நிறுவனம் ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலையை 15 ரூபாவால் குறைத்துள்ளதுடன், அதன் புதிய விலை 399 ரூபாவாகும். ஒக்டேன் 95 ரக...

நாட்டின் விவசாய உற்பத்திகளுக்கான வெளிநாட்டுக் கேள்வி கணிசமாக அதிகரிப்பு

இலங்கையின் விவசாய உற்பத்திகளுக்கான வெளிநாட்டுக் கேள்வி கணிசமாக அதிகரித்துள்ளதாக கைத்தொழில் மற்றும் முயற்சியாண்மை அமைச்சு தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டில் மட்டும் விவசாய உற்பத்திகளின் ஏற்றுமதி வளர்ச்சி 20 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க சுட்டிக்காட்டுகின்றார். தெங்கு சார்ந்த உற்பத்திகள் 42 சதவீதமும், பழங்கள் 21 சதவீதமும், காய்கறிகள் 20 சதவீதமும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாகக்...

மின்சார வாகன கொள்வனவு பாரியளவில் அதிகரிப்பு!!

கடந்த ஜூலை மாதத்தில் ஐரோப்பாவின் பெரும்பாலான பகுதிகளில் மின்சார வாகன விற்பனை வேகமெடுத்துள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி வௌியிட்டுள்ளது. எரிபொருள் விலைகள் அதிகரிப்பு, மானியங்கள் மற்றும் பல்வேறு வகைகள் கிடைப்பதால் நுகர்வோர் அதிகளவில் மின்சாரத்தில் இயங்கும் கார்களை கொள்வனவு செய்து வருவதாக கூறப்படுகின்றது. பெப்ரவரியில் ஈரான் போர் தொடங்கியதில் இருந்து, எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருள் விலையுயர்வு...

தரமற்ற தலைக்கவசம் விற்பனை!! 200,000/- அபராதம்!!

தரமற்ற மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்களை விற்பனைக்காகக் காட்சிப்படுத்தியிருந்த கொழும்புப் பகுதியிலுள்ள வர்த்தக நிறுவனம் ஒன்றிற்கு 200,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. புதுக்கடை இலக்கம் 05 பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையின் கொழும்பு மாவட்ட செயலகத்தின் விசாரணை அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, கொழும்பு...

கோண்டாவிலில் இயங்கிய இலங்கையின் பிரபல பல்பொருள் அங்காடியின் வியாபார உரிமம் இரத்து!!

இலங்கையின் பிரபல பல்பொருள் அங்காடியின் கோண்டாவில் கிளையின் வியாபார உரிமத்தை இரத்து செய்யுமாறு யாழ்ப்பாண மேலதிக நீதவான் நீதிமன்ற நீதவான் உத்தரவிட்டுள்ளார். காலாவதியான பொருட்களை விற்பனைக்கு காட்சிப்படுத்தி இருந்த நிலையில் பொது சுகாதார பரிசோதகரால் அது கண்டறியப்பட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. குறித்த வழக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுக்கப்பட்ட போது, காலாவதியான...

2028க்குப் பின்னர் இலங்கைக்கு ‘மூன்றாவது பொருளாதாரப் போர்’ – ரணில் எச்சரிக்கை!

2028 ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து இலங்கை மீண்டும் பாரிய பொருளாதார சவாலை எதிர்கொள்ள நேரிடலாம் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எச்சரித்துள்ளார். கொழும்பில் முன்னாள் அமைச்சர் ரஞ்சித் சியம்பலாப்பிட்டிய எழுதிய “Yudha Dekakata Ura Dee” என்ற நூல் வெளியீட்டு நிகழ்வில் உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். 2028 ஆம் ஆண்டுக்குப் பின்னர்...

வங்கி அதிகாரிகளால் $1 பில்லியன் நிதி வௌியேற்றப்பட்ட விதம் வௌியானது!!

சுமார் ஒரு பில்லியன் அமெரிக்க டொலர் நிதியை 'உண்டியல்' முறை மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பிய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, நாட்டின் பிரதான 4 தனியார் வங்கிகளின் முகாமையாளர்கள் நால்வரும் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று (17) பிற்பகல் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து, வரும் ஓகஸ்ட் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். நாட்டிற்கு எந்தவொரு பொருளையும்...

ட்ரம்ப்பின் எச்சரிக்கையை அடுத்து மீண்டும் அதிகரித்த கச்சா எண்ணெய் விலை!!

ஓமான் மீது குண்டுவீச்சு நடத்தப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தலையடுத்து, உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை இன்று (18) மீண்டும் அதிகரித்துள்ளது. இதன்படி, ப்ரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 90 அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளதுடன், அது 91.24 டொலர்களாகப் பதிவாகியுள்ளது.

இணையம் மூலம் வருமானம் ஈட்டுபவர்களிடமிருந்து வரிகளை வசூலிப்பது குறித்து அறிவித்தல்!

2025/2026 மதிப்பீட்டு ஆண்டு முதல் சேவை ஏற்றுமதி மூலம் ஈட்டப்படும் வருமானத்திற்கு வரி விதிக்கப்படும் என உள்நாட்டு வருவாய்த் திணைக்களம் அறிவித்துள்ளது. இருப்பினும், அந்த வருமானத்திற்கு 18, 24, 30 மற்றும் 36 சதவிகிதம் என்ற வழக்கமான வருமான வரி விகிதங்களில் வரி விதிக்கப்படாது என உள்நாட்டு வருவாய்த் திணைக்களத்தின் சிரேஷ்ட பிரதி ஆணையர் ஹிரான்...

எரிபொருள் விலையை மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது!!

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை உயர்வு, காப்புறுதி, போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதன் காரணமாக, இலங்கையில் எரிபொருள் விலையை மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் அநுர கருணாதிலக தெரிவித்துள்ளார். இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்படும் தற்போதைய செலவுகளை ஆய்வு செய்த பின்னர், அரசாங்கத்திடம் புதிய மானியத்தை கோருவதற்கோ அல்லது...

இப்படியும் ஒரு மோசடியா? வௌியான அதிர்ச்சி தகவல்!!

கட்டுமானத் துறை சார்ந்த பொருட்களை இணையத்தளம் வாயிலாக விற்பனை செய்து பண மோசடியில் ஈடுபடும் கும்பலொன்று இயங்கி வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். சமூக வலைத்தளங்கள் ஊடாகப் பொருட்களை விற்பனை செய்வதாகக் கூறி இந்த மோசடி இடம்பெறுவதாகப் பொலிஸார் சுட்டிக்காட்டுகின்றனர். அஸ்பெஸ்டாஸ், சீமெந்து அல்லது பிற பொருட்களைச் சந்தை விலையை விடக் குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக...

உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு!!

2026 ஜூலை மாதத்திற்கான பெறப்பட்ட பெறுமதி சேர் வரியை (VAT) ஓகஸ்ட் 20 ஆம் திகதிக்கு முன்னர் செலுத்த வேண்டும் என உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. வரி செலுத்தத் தவறுதல் அல்லது தாமதித்து செலுத்துதலுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்தத் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. காசோலை (Cheque), வங்கி வரைவோலை (Bank draft) அல்லது கொடுப்பனவு...

உத்தியோகபூர்வ வறுமைக்கோடு 17,592 ரூபாவாக அதிகரிப்பு!!

தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புதிய தரவுகளின்படி, ஜூன் மாதத்திற்கான உத்தியோகபூர்வ வறுமைக்கோடு 17,592 ரூபாவாக அதிகரித்துள்ளது. இது கடந்த மே மாதத்துடன் ஒப்பிடுகையில் 277 ரூபா உயர்வாகும் எனத் தெரிவிக்கப்படுகிறது. ஒரு நபர் தனது அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக ஒரு மாதத்திற்குத் தேவைப்படும் குறைந்தபட்சத் தொகையே உத்தியோகபூர்வ வறுமைக்கோடு மூலம்...

அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள் விற்பனை செய்த நிலையங்களுக்கு அபராதம்!

அதிகாரப்பூர்வ விநியோகஸ்தர் விலையை விட அதிக விலைக்கு மோட்டார் சைக்கிள்களை விற்பனை செய்த மற்றும் விலைக் காட்சிப்படுத்தாத ஹெட்டிபொல பகுதியிலுள்ள 03 மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்களுக்கு நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது. நுகர்வோர் விவகார அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதன்போது, குறித்த நிறுவனங்களுக்கு நீதிமன்றத்தால் தலா 25,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக...

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பு!! கச்சா எண்ணெய் விலை சரிவு!!

ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறப்பதற்கான உடன்பாடு இன்றோ அல்லது நாளையோ எட்டப்படலாம் என அமெரிக்க உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் சரிவடைந்துள்ளன. அதன்படி, ப்ரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 78 அமெரிக்க டொலராகவும், WTI...

கச்சா எண்ணெய் விலையில் திடீர் வீழ்ச்சி!!

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் இன்று (3)சடுதியாக வீழ்ச்சியடைந்துள்ளன. ​இதற்கமைய, ப்ரெண்ட் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 83.67 அமெரிக்க டொலராகவும், டபிள்யூ.டி.ஐ ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 80.27 அமெரிக்க டொலராகவும் விற்பனை செய்யப்படுகின்றன. ​ஈரானுடன் புதிய பேச்சுவார்த்தைகள் இன்று தொடங்கும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்...
Loading posts...

All posts loaded

No more posts