நவம்பர் 1 முதல் ஷொப்பிங் பைகளின் இலவச விநியோகம் தடை!

எதிர்வரும் நவம்பர் 1 முதல் நுகர்வோருக்கு பிளாஸ்டிக் ஷொப்பிங் பைகளை இலவசமாக விநியோகிப்பதை நிறுத்தி வைக்கும் அசாதாரண வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது.

இந்த வர்த்தமானியை நுகர்வோர் விவகார அதிகார சபையின் தலைவர் ஹேமந்த சமரக்கோன் வெளியிட்டுள்ளார்.

வர்த்தமானியின்படி,

வியாபாரி எவரும் பாவனையாளர்களுக்கு பொருட்களை விற்பனை செய்யும் போது, அடர்த்தி குறைந்த பாலிஎதிலின் (Low-Density Polyethylene), அடர்த்தி குறைந்த நேர்த்தியான பாலிஎதிலின் (Linear Low-Density Polyethylene) போன்ற மூலப் பொருட்கள் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பொதிகளை இலவசமாக வழங்க முடியாது.

அத்தகைய பொதிகளுக்கு அறவிடப்படும் விலை பாவனையாளர்களுக்கு வழங்கப்படும் பற்றுச்சீட்டில் குறிப்பிடப்பட வேண்டும் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் மேற்கூறிய பொதிகளின் விலை வியாபார நிலையத்தில் தெளிவாக விளங்கக்கூடிய வகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டும் எனவும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

Related Posts