யாழில் வியாபாரி மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய இளைஞர் கைது

யாழ். கல்வியங்காடு பகுதியில் புடவை வியாபாரத்தில் ஈடுபடும் வர்த்தகர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டில் 24 வயதுடைய ஒருவர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபர் கொக்குவில் மற்றும் மானிப்பாய் ஆகிய பகுதிகளில் வன்முறைகளில் ஈடுபட்ட நிலையில் அவர் மீது... Read more »

இலங்கை கடற்பரப்பில் கைதான 43 இந்திய மீனவர்களுக்கும் டிசம்பர் 31 வரை விளக்கமறியல்

இலங்கை கடற்பரப்பில் கைதான 43 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நேற்று அதிகாலை யாழ்ப்பாணம் – நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த 43 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது... Read more »

ATM அட்டையைப் பயன்படுத்தி பணம் திருடிய இருவரைக் கைது செய்ய பொதுமக்களின் உதவியை நாடியுள்ள யாழ்ப்பாண பொலிஸார்!!

தனிநபர் ஒருவரின் தானியங்கி பணக் கொடுக்கல் வாங்கல் அட்டையை எடுத்து சுமார் 6 லட்சம் ரூபாய் பணத்தை கொள்ளையிட்ட இருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் தேடுகின்றனர். அவர்கள் இருவரது ஒளிப்படங்களை வெளியிட்டுள்ள பொலிஸார், சந்தேக நபர்கள் தொடர்பில் தகவல் வழங்குமாறு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். உரும்பிராயின்... Read more »

சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் பருத்தித்துறையில் இருவர் கைது!

15 வயதுச் சிறுமியை வன்புணர்ந்த குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் பருத்தித்துறை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை பேருந்து நிலையத்தில் நேற்று(வியாழக்கிழமை) அதிகாலை 4 மணியளவில் தனித்து நின்ற 15 வயதுச் சிறுமியை பொலிஸ் காவலில் எடுத்துப் பெறப்பட்ட வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே இரண்டு சந்தேக நபர்கள்... Read more »

யாழில் வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் 10 சிறுவர்கள் கைது!

யாழில் வாள் வெட்டுத் தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் 10 சிறுவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாணம் நாவாந்துறை பகுதியை சேர்ந்த 14 வயது சிறுவன் மீது அண்மையில் மேற்கொள்ளப்பட்ட வாள் வெட்டுத் தாக்குதலில் சிறுவன் காயமடைந்த நிலையில் யாழ். போதனா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சம்பவம்... Read more »

யாழ். நகரில் சுகாதார நடைமுறைகளை மீறி முகக்கவசம் அணியாத 25 பேர் கைது!

யாழ். நகரில் தற்பொழுது தீபாவளி பண்டிகை வியாபாரம் களைகட்டியுள்ளதால் பொதுமக்கள் அதிகளவில் ஒன்று கூடிய நிலையில், சுகாதார நடைமுறைகளை மீறி முகக்கவசம் அணியாத 25 பேர் நேற்று (02) கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாண பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான அணியினர் வீதி பரிசோதனை நடவடிக்கையினை... Read more »

விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிள் ஓடியவருக்கு 125,500 ரூபாய் தண்டம்!

மதுபோதையில் போக்குவரத்து விதிமுறைகளை மீறி மோட்டார் சைக்கிளில் பயணித்தவருக்கு ஒரு லட்சத்துக்கு 25 ஆயிரத்து 500 ரூபாய் தண்டம் விதித்து யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் நளினி சுதாகரன் உத்தரவிட்டார். யாழ்ப்பாணம் கொழும்புத்துறையைச் சேர்ந்தவர் இன்று நீதிவான் நீதிமன்றில் பொலிஸாரினால் முற்படுத்தப்பட்டார். அவர் மீது 7... Read more »

யாழில் ஆவா குழுவை சேர்ந்த நால்வர் கைது!!

ஆவா குழுவை சேர்ந்த நால்வர் போதைப்பொருளுடனும் வாளுடனும் கைது செய்யப்பட்டுள்ளனர் என யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த சந்துகநபர்கள் பயணித்த காரையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர். ஆவா குழுவின் முக்கிய உறுப்பினர்களில் ஒருவர் என பொலிஸாரினால் அடையாளப்படுத்தப்பட்டுள்ள, நல்லூர் அரசடி பகுதியை சேர்ந்த முத்து... Read more »

ஊரடங்கில் திருமணம் செய்தவர்களுக்கு எதிராக வழக்கு!

அச்சுவேலி வடக்கில் இடம்பெற்ற திருமண நிகழ்வில் சுகாதார நடைமுறைகள் மீறப்பட்டதாக பொலிஸாரினால் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அச்சுவேலி வடக்கில் இன்று இடம்பெற்ற திருமண நிகழ்வில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றிருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. அதனையடுத்து, நிகழ்வு இடம்பெற்ற வீட்டுக்குச் சென்ற பொலிஸார், திருமண நிகழ்வில் பங்கேற்றிருந்த... Read more »

கஞ்சாவை திருடி விற்றதாக பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு!

யாழ்.மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையம் ஒன்றில் கடமையாற்றும் பொலிஸ் அதிகாரி ஒருவர் மற்றும் மூன்று பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் இணைந்து கஞ்சா போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸ் உயர் அதிகாரிகளுக்கு முறைப்பாடு கிடைக்கபெற்றதன் அடிப்படையில் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும்... Read more »

தமிழர் உணர்வாழ்வு அமைப்பின் தலைவர் மோகன் பயங்கரவத தடைச் சட்டத்தில் கைது

விடுதலைப்புலிகளை மீண்டும் முகநூல் வாயிலாக புதுப்பித்த குற்றச்சாட்டில் தமிழர் உணர்வாழ்வு அமைப்பின் தலைவர் க.மோகன் நேற்று இரவு மட்டக்களப்பு செங்கலடியில் உள்ள அவரது வீட்டில் வைத்து பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர் முகநூல் வழியாக விடுதலைப்புலிகள் மீண்டும் புதிப்பித்தல் நடவடிக்கையில்... Read more »

பெற்ற குழந்தையை மண்ணுக்குள் புதைத்த தாய் கைது!!

வவுனியா – பம்பைமடுவில் பெற்ற குழந்தையை மண்ணுக்குள் புதைத்த தாயொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். பம்பைமடுவில் வசிக்கும் 4 பிள்ளைகளின் (36 வயது) தாயொருவர் கடந்த திங்கட்கிழமை குழந்தையொன்றை பிரசவித்துள்ளார். கடந்த காலத்தில் அவரின் உடல் மாற்றத்தினை அவதானித்த சிலர்... Read more »

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஹெரோயின் விநியோகம் செய்பவர் சிக்கினார்; பெண் ஒருவரும் தெல்லிப்பழையில் கைது

ஹெரோயின் போதைப்பொருளை கொழும்பிலிருந்து எடுத்து வந்து யாழ்ப்பாணத்தில் விநியோகிக்கும் நபர் காங்கேசன்துறை பிராந்திய மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யபட்டுள்ளார் 200 கிராம் ஹெரோயின் போதைப் பொருளுடன் அவர் இன்று காலை நெல்லியடியில் வைத்துக் கைது செய்யப்பட்டார். தெல்லிப்பழை கட்டுவனில் ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபடும்... Read more »

பொய்யான முறைப்பாடு செய்த பெண்ணை பிறிதொரு வழக்கில் கைது செய்ய நீதிவான் அறிவுறுத்தல்!!

பொய் முறைப்பாடு வழங்கியதுடன் , குறித்த முறைப்பாடு தொடர்பில் பொலிஸார் பக்க சார்பாக நடந்து கொண்டார்கள் என குற்றம் சாட்டிய பெண் , நீதிமன்றில் வழக்கு விசாரணை நடந்த போது, தனது முறைப்பாட்டை மீள பெறுவதாக மன்றில் கூறியதை அடுத்து குறித்த பெண்ணை மற்றொரு... Read more »

பிரபாகரனுக்கு பிறந்தநாள் வாழ்த்து பதிவிட்டதாக 23 பேர் கைது!! மேலும் 55 பேரை கைது செய்ய நடவடிக்கை!!

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளெ பிரபாகரனுக்கு முகநூலில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்ததாக நான்கு பேரை ஏறாவூர் பொலிஸார் கைது செய்துள்ளனர். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 66ஆவது பிறந்தநாள் நேற்றைய தினம் கொண்டாடப்பட்டது. அவரை வாழ்த்தியும் அவரது பெருமைகளைக் குறிப்பிட்டு... Read more »

ஊடகவியலாளர் மீது தாக்குதல் நடத்திய மூவர் கைது!!

யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் மீது தாக்குதல் மேற்கொண்டனர் என்ற குற்றசாட்டில் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். யாழ்ப்பாணம் மாநகர் பகுதியில் வசிக்கும் ஊடகவியலாளரான எஸ். முகுந்தன் என்பவர் மீது நேற்றைய தினம் புதன்கிழமை, வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தி, அவரது அலைபேசியும்... Read more »

தாக்குதலுக்கு தயாராகவிருந்ததாக இளைஞர் ஒருவர் வாளுடன் கைது

தாக்குதல் நடத்தத் திட்டமிட்டு வீட்டில் வாள் ஒன்றை மறைத்து வைத்திருந்த இளைஞர் ஒருவர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் மாவட்ட சிறப்புக் குற்றத்தடுப்பு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். கோப்பாய் ஜிபிஎஸ் வீதியைச் சேர்ந்த 24 வயதுடைய இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். வன்முறைகளுடன் தொடர்புடைய... Read more »

மேல்நீதிமன்ற நீதிபதியின் இல்லத்தின் முன்னுள்ள வேகத்தடை அருகில் தங்கச்சங்கிலி வழிப்பறிக்கொள்ளை

யாழ் கச்சேரி நல்லுார் வீதியில் அமைந்துள்ள மேல்நீதிமன்ற நீதிபதியின் உத்தியோக பூர்வ இல்லத்திற்கு முன்னுள்ள வேகத்தடை அருகில் வழிப்பறிக்கொள்ளை ஒன்று நேற்று(21)  மாலை இடம்பெற்றுள்ளது , வீதியால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த தாயும் மகளும் மேல்நீதிமன்ற நீதிபதியின் இல்லத்திற்கு முன் வீதியில் போடப்பட்டிருந்த... Read more »

யாழில் கைக்குண்டுடன் இளைஞர் கைது!!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்னால் கைக்குண்டு ஒன்றுடன் இளைஞர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி- பரந்தன் பகுதியைச் சேர்ந்த 22வயதுடைய இளைஞரையே பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள இளைஞன், யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக மோட்டார் சைக்கிளுடன்... Read more »

முல்லைத்தீவில் ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட விவகாரம் – இருவர் கைது!

முல்லைத்தீவு – முறிப்பு பகுதியில் இரண்டு ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். முறிப்பு பகுதியில் மரக்கடத்தல் இடம்பெறுவதாகக் கிடைத்த தகவலுக்கமைய செய்தி சேகரிக்கச் சென்ற ஊடகவியலாளர்கள் இருவர் மீது கடந்த திங்கட்கிழமை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதன்போது... Read more »