குழந்தைகளை வைத்து பிச்சை எடுப்பவர்களை கண்டால் உடன் அழையுங்கள் 1929!

கைக்குழந்தைகளை, சிறுவர், சிறுமியரை வைத்துக்கொண்டு பிச்சை எடுப்போரை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக சிறுவர், பெண்கள் பாதுகாப்பு அதிகாரசபை அதிகார சபையின் தலைவர் சட்டத்தரணி அனோமா திஸாநாயக்க தெரிவித்துள்ளார். (more…)

வெளிச்சம் இன்றி பயணித்த நான்கு துவிச்சக்கர வண்டியை பறிமுதல் செய்த கோப்பாய் பொலிஸார்!

துவிச்சக்கர வண்டிக்கு “லைட்” போடாத காரணத்தால் நான்கு பேரின் துவிச்சக்கரவண்டிகள் கோப்பாய் பொலிஸாரினால் நேற்று இரவு 7.30 மணிக்கு இருபாலையில் வைத்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. (more…)
Ad Widget

16 இலட்சம் ரூபா பெறுமதியான தொலைத்தொடர்பு வயர்கள் திருடிய இருவர் கைது

யாழ். பண்ணை ஸ்ரீலங்கா தொலைத்தொடர்பு நிலையத்தில் தொலைத்தொடர்பு இணைப்பு வயர்களை திருடிய குற்றச்சாட்டில் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக யாழ். குற்றத்தடுப்பு பொலிஸ் பிரிவு பொறுப்பதிகாரி விக்கிரமராய்ச்சி இன்று தெரிவித்தார். (more…)

யாழில் கொலை மற்றும் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டுக்களில் 11 பேர் கைது

யாழ். கொடிகாமம் பகுதியில் வைத்தியலிங்கம் அமிர்தலிங்கம் என்பவரை பொல்லால் தாக்கி மரணம் ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 5 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார். (more…)

மானிப்பாயில் கடத்தப்பட்டவர் மீட்பு; நால்வர் கைது

மானிப்பாயில் நபர் ஒருவரை கடத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட 4 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எரிக் பெரேரா தெரிவித்தார். (more…)

வதிரி கொலை சந்தேக நபருக்கு பிணை

யாழ். வடமராட்சி வதிரி பகுதியில் நபர் ஒருவரை பொல்லால் தாக்கி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட சந்தேகநபருக்கு யாழ். மேல்நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. (more…)

காலாவதியான பொருட்கள் விற்பனை செய்த வர்த்தகர்களிடமிருந்து 1,849,500 ரூபாய் வசூல்

யாழ். மாவட்டத்தில் காலாவதியான பொருட்கள் மற்றும் நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு அதிகமாக பொருட்களை விற்பனை செய்த 392 வர்த்தகர்களுக்கு எதிராக நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு 1,849,500 ரூபா பாவணையாளர் அதிகார சபையினால் வசூலிக்கப்பட்டுள்ளதாக (more…)

யாழில் போதை பொருள் தொடர்பான வழக்குகளில் சுமார் 16 லட்சம் ரூபாய் வசூல்

யாழ். மதுவரி நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் பதிவு செய்யப்பட்ட 601 மதுபான வழக்குகளினூடாக 16,64,300 ரூபா தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதாக மதுவரி நிலைய பொறுப்பதிகாரி எஸ்.செந்தூர்செல்வன் நேற்று தெரிவித்தார். (more…)

யாழில் பெண்ணின் சடலம் மீட்பு! கொலை செய்யப்பட்ட பின்னர்தான் கிணற்றில் வீசப்பட்டது!

யாழ்.மத்தியூஸ் வீதியில் கிணற்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட ஈச்சமோட்டையைச் சேர்ந்த மேரி புஷ்பம் என்னும் வயோதிபப் பெண் கொலை செய்யப்பட்ட பின்னரே கிணற்றில் வீசப்பட்டதாக பிரேதப்பரிசோதனைகள் உறுதிப்படுத்தப்படுவதாக யாழ்.பொலிஸார் தெரிவித்துள்ளனர். (more…)

யாழில் 8 கிலோ கிராம் வெடிமருந்து இராணுவத்தினரால் மீட்பு

யாழ்ப்பாணம் குருநகர் பகுதியில், கப்பல் துறைமுகத்தில் இருந்து 8 கிலோ கிராம் வெடிமருந்து இராணுவத்தினர் இன்று அதிகாலை மீட்டுள்ளனர். (more…)

மின்கம்பங்களை சேதமாக்கியவர்களிடமிருந்து 100.000 ரூபா வசூல்

மின்கம்பங்களை சேதமாக்கிய வாகன உரிமையாளர்கள் இருவரிடமிருந்து ஒரு இலட்சம் ரூபாவை வசூலித்துள்ளதாக இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது. (more…)

டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த 6 பேருக்கு வழக்கு

யாழ். கோண்டாவில் கிழக்கு, மத்தி ஆகிய பிரதேசங்களில் டெங்கு நுளம்பு பெருகும் வகையில் சூழலை வைத்திருந்த 6 பேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கோண்டாவில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர் தெரிவித்துள்ளார். (more…)

உதயன் பத்திரிகை விநியோகப் பணியாளர் மீது தாக்குதல்! பத்திரிகைகளும் எரிப்பு

உதயன் பத்திரிகை விநியோகப் பணியாளர் ஒருவர் இனந்தெரியாத நபர்களின் தாக்கப்பட்டுள்ளதுடன் பத்திரிகைகளும் மோட்டார் சைக்கிளுடன் வைத்து எரிக்கப்பட்டுள்ள சம்பவம் இன்று காலை 5.30 மணியளவில் மாலுசந்திப் பகுதியில் நடைபெற்றுள்ளது. (more…)

ரிசானா நாபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது

சவூதி அரேபியாவிற்கு பணிப் பெண்ணாக சென்ற ரிசானா நாபீக்கிற்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு உள்ளது.இந்தத் தகவலை வெளிவிவகார அமைச்சு உறுதி செய்துள்ளது.நான்கு மாத சிசுவொன்றை கொலை செய்த குற்றத்திற்காக ரிசானாவிற்கு இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.இஸ்லாமிய சட்டத்தின் அடிப்படையில் ரிசானாவிற்கு 2007ம் ஆண்டு இந்தத் தண்டனை விதிக்கப்பட்டது. (more…)

40 இலட்சம் ரூபா மோசடி குற்றச்சாட்டில் இருவர் கைது

யாழ். வியாபாரியொருவரை ஏமாற்றி 40 இலட்சம் ரூபா பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் கைதான சந்தேக நபர் இருவரையும் எதிர்வரும் 15ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் பிரதான மஜிஸ்திராத்தும் மேலதிக மாவட்ட நீதவானுமான ருவன்னிகா மாரப்பன உத்தரவிட்டார். (more…)

புத்தூரில் வீடு புகுந்து தாக்குதல்: ஒருவர் படுகாயம்

புத்தூரியில் இனந்தெரியாத நபர்கள் மேற்கொண்ட தாக்குதலில் படுகாயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (more…)

தெல்லிப்பளை, தோதரை அம்மன் ஆலயத்தில் திருட்டு

தெல்லிப்பளை, தோதரை அம்மன் ஆலய ரிஷப வாகனம் திங்கட்கிழமை திருடப்பட்டுள்ளதாக தெல்லிப்பளை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பாடு செய்யப்பட்டுள்ளது. (more…)

பொலிஸ் சார்ஜன்ட் மீது தாக்குதல்; சந்தேகத்தில் மூவர் கைது

பொலிஸ் சார்ஜன்ட் மீது தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் 3 பேரை கைது செய்தள்ளதாக யாழ். குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் அதிகாரி விக்கிரமாரச்சி தெரிவித்தார். (more…)

காணாமல்போன மனநிலை பாதிக்கப்பட்ட யுவதி காரைநகரில் சடலமாக மீட்பு!

சுமார் ஒரு மாத காலத்திற்கு முன்னதாக காணாமல் மன நிலை பாதிக்கப்பட்ட யுவதி ஒருவர் இன்று காரைநகரின் கண்டல் காட்டுப்பகுதியில் உருக்குலைந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்டவர் சங்கானை சித்தங்கேணி பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இராசதுரை கஜேந்தினி என அடையாளம் காணப்பட்டுள்ளார். யாழ்.காரைநகரில் உள்ள பாலகாட்டுப் பகுதியில் பாழடைந்த கிணற்றில் இருந்து இந்த இளம்...

மூளாய் விபத்தில் வெளிநாட்டிலிருந்து வந்த இளைஞன் சாவு

வேகக் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் வீதியைவிட்டு விலகி பனை மரத்துடன் மோதி விபத்துக் குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.சம்பவம் மூளாய் மேற்கு சுழிபுரத்தில் நேற்று மாலை இடம்பெற்றது. இதில் அதே இடத்தைச் சேர்ந்த தம்பிராசா வைகுந்தகுமார் (வயது30) என்ற இளைஞர் உயிரிழந்தார்.வேகக்கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மோட்டார் சைக்கிள் பனை மரத்துடன் மோதியுள்ளது. (more…)
Loading posts...

All posts loaded

No more posts