அடையாள அட்டை இலக்கம் பதியப்பட்ட பின் பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் வீதியால் செல்ல அனுமதிக்கப்படுவர்

கடந்த ஆண்டு (2024) இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்தில் இருந்து விடுவிக்கப்பட்ட பலாலி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோயிலுக்கு செல்லும் நிரந்தர வீதி இன்று (16) முதல் திறக்கப்பட்டுள்ளது.எதிர்வரும் 20 ஆம் திகதி அலங்கார திருவிழா ஆரம்பமாகவுள்ள நிலையில் ஆலயத்துக்கு செல்வதற்கான பாதை இராணுவத்தினரால் திறக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்து ஆண்டு ஆலய பகுதி விடுவிக்கப்பட்ட போதும் மக்கள்...

கிளிநொச்சி DCC கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்த அரச அதிகாரிகள்!

கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபரை ஊழல்வாதி என கூறிய அர்ச்சுனா எம்.பியின் கருத்தால் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் இருந்து  அரச அதிகாரிகள் வெளிநடப்பு செய்தனர். அமைச்சர் சந்திரசேகரன் மற்றுமு் எம்பிக்கும் இடையில் வாக்குவாதம் முற்றி பதற்றமான சூழல் ஏற்பட்டது .அதனை அடுத்து  கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது. ஒருங்கிணைப்பு குழுவின் இணைத்தலைவர் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம்...
Ad Widget

கொழும்பு மாநகர சபையால் பொழுதுபோக்கு வரி குறைப்பு

கொழும்பு மாநகர சபை (CMC), திரைப்படங்கள், விளையாட்டுப் போட்டிகள், இசை நிகழ்ச்சிகள் மற்றும் பிற பொழுதுபோக்கு நிகழ்வுகளுக்கான பொழுதுபோக்கு வரி விகிதங்களை குறைத்து புதிய வர்த்தமானி (Gazette) அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த புதிய வரி விகிதங்கள், கொழும்பு மாநகர சபையின் 2026ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டதுடன், வர்த்தமானி வெளியிடப்பட்டதன் மூலம் உடனடியாக அமுலுக்கு...

ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு, வவுனியா மேல் நீதிமன்றம் ஜூலை 15 ஆம் திகதி வரை இடைக்கால தடை

வவுனியா மாநகர முதல்வர் சு. காண்டீபனை பதவி நீக்கம் செய்து வடக்கு மாகாண ஆளுநர் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு, வவுனியா மேல் நீதிமன்றம் ஜூலை 15 ஆம் திகதி வரை இடைக்கால தடை விதித்துள்ளது. ஆளுநரின் இந்த முடிவை எதிர்த்து முதல்வர் காண்டீபன் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது மனுதாரர் (முதல்வர்)...

போதைப்பொருள் பயன்படுத்துவதை பெற்றோர் பரிசோதிக்க பரிசோதனைக் கருவி அறிமுகப்படுத்த அரசு பரிசீலனை

போதைப்பொருள் பயன்படுத்துகிறார்களா என்பதை பெற்றோர் வீட்டிலேயே பரிசோதிக்க புதிய பரிசோதனைக் கருவி அறிமுகப்படுத்த அரசு பரிசீலனை தேசிய போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, தங்களது பிள்ளைகள் போதைப்பொருள் பயன்படுத்தியுள்ளனரா என்பதை பெற்றோர் தனிப்பட்ட முறையில் பரிசோதிக்கக்கூடிய பரிசோதனைக் கருவிகளை (Drug Testing Kits) சந்தைக்கு அறிமுகப்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது. இந்த முன்மொழிவு,...

முன்னாள் கடற்படைத் தளபதி கைதாகி பிணையில் விடுதலை

முன்னாள் கடற்படைத் தளபதியான அட்மிரல் ஒப் த ஃப்ளீட் வசந்த கரண்ணாகொட, 2006 ஆம் ஆண்டு யோஷித ராஜபக்ஷவை இலங்கை கடற்படையில் இணைத்தமை தொடர்பான குற்றச்சாட்டின் பேரில், இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று (வெள்ளிக்கிழமை) கைது செய்யப்பட்டார். கைதுக்குப் பின்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில், அந்தப் பதவிக்குத் தேவையான தகுதிகள் இல்லாத...

2026/2027 கல்வியாண்டிற்கான தொழிற்கல்வி உயர்தர (Advanced Level Vocational Stream) – தரம் 12 சேர்க்கைக்கு விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, 2026/2027 கல்வியாண்டிற்கான தொழிற்கல்வி உயர்தரப் பிரிவு (Advanced Level Vocational Stream) தரம் 12 இற்கான மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை தற்போது கோரியுள்ளது. 2025 (2026) ஆம் ஆண்டு அல்லது அதற்கு முந்தைய 3 ஆண்டுகளுக்குள் க.பொ.த. (சாதாரண தரம்) பரீட்சைக்கு தோற்றிய எந்த மாணவரும், தமது பிரதேசத்தில்...

2027 முதல் தரம் 1 மாணவர் சேர்க்கைக்கு புதிய சுற்றறிக்கை – அமைச்சரவை ஒப்புதல்

பாடசாலைகளில் தரம் 1 மாணவர் சேர்க்கையை ஒழுங்குபடுத்தும் புதிய சுற்றறிக்கையை 2027 ஆம் ஆண்டு முதல் அமல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மாணவர் சேர்க்கை தொடர்பாக வெளியிடப்படும் சுற்றறிக்கைகள், கல்வியில் சம வாய்ப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் முறைகேடுகளை குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. புதிய வடிவமைப்பு, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு,...

அருச்சுனா இராமநாதனின் பதாகைக்கு மர்ம நபர்கள் செருப்பு மாலை

யாழ்ப்பாணத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனின் 10 அடி உயர பதாகைக்கு (Banner) மர்ம நபர்கள் செருப்பு மாலை அணிவித்த சம்பவம் ஜூன் 19, 2026 அன்று நிகழ்ந்துள்ளது யாழ்ப்பாணத்தில் அண்மையில் நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் (குறிப்பாக தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில்), நாடாளுமன்ற உறுப்பினர் அருச்சுனா இராமநாதனுக்கும் அகில இலங்கை தமிழ்க்...

வீடியோக்களை உடனே தூக்க டாக்டர் அர்ச்சுனாவுக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு!

தெல்லிப்பழை ஆதார வைத்தியசாலையின் புற்றுநோய் விசேட பெண் வைத்தியர் டாக்டர் கிருசாந்திக்கு எதிராக, எவ்வித ஆதாரமும் இன்றி அர்ச்சுனா பரப்பிய அவதூறு வீடியோக்கள் அனைத்தையும் இணையத்தில் இருந்து உடனடியாக நீக்குமாறு யாழ் நீதிவான் நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. பாராளுமன்ற உறுப்பினராக இருந்தாலும் எவருக்கும் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சிதைக்க பேச்சு சுதந்திரம் கிடையாது என...

காங்கேசன்துறையில் தங்கம் கடத்தல் : 26 பயணிகள் தடுப்பு 8 பேர் இது வரை கைது

இலங்கையில் இருந்து இந்தியாவுக்கு தங்கம் கடத்த முற்பட்டனர் என்ற சந்தேகத்தில் காங்கேசன்துறையில் இருந்து புதன் கிழமை நாகைபட்டினம் பயணிக்கவிருந்த 26 பயணிகள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர் காங்கேசன்துறை - நாகப்பட்டினம் இடையே இடம்பெறும் சிவகங்கை பயணிகள் கப்பல் சேவையில் நேற்று காலை நாகைபட்டினத்தில் இருந்து 117 பயணிகள் காங்கேசன்துறையை வந்தடைந்தனர். இவ்வாறு வந்த கப்பலில் காங்கேசன்துறை துறைமுகத்தில்...

யாழில் பயங்கரவாத தடுப்பு பிரிவு(TID) பொலிசாரினால் இளைஞன் ஒருவர் கைது

யாழ்ப்பாணத்தில்  பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.முகநூல் பதிவொன்று தொடர்பிலான விசாரணைக்காகவே குறித்த இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இணுவில் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்., கைது செய்யப்பட்டவர்  யாழ்ப்பாணத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது

முன்னாள் பராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமாரின் பாராளுமன்ற உரைகள் நுாலாக வெளியிடப்பட்டுள்ளது

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் முன்னாள் பராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமாரின் 2020-2-24 காலப்பகுதி பாராளுமன்ற உரைகள் நுாலாக வெளியிடப்பட்டுள்ளது அதனை இங்கே தரவிறக்கம் செய்யலாம் Gajenthirakumar-Final-1

கடவுச்சீட்டு – இனி புதிய நடைமுறை

ரூபா மூன்றரைக்கோடி செலவில் யாழ் போதனா வைத்தியசாலை கருவளச்சிகிச்சை நிலையத்திற்கு இயந்திரம் அன்பளிப்பு

சிவபூமி அறக்கட்டளையின் ஏற்பாட்டில் ,லண்டன் அபயம் அறக்கட்டளையூடாக இப்பெறுமதி மிக்க ஸ்கானர் இயந்திரம் பெறப்பட்டது. யாழ் போதனா வைத்தியசாலை கருவளச்சிகிச்சை நிலையத்தின் பயன்பாட்டுக்காக ,ரூபா மூன்றரைக்கோடி செலவில் இவ்வியந்திரத்தை யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரிப் பழையமாணவன் சதா.மங்களேஸ்வரன் குடும்பம் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்கள்.

வைத்தியர் அர்ச்சுனாவுக்கு எதிராக சாவகச்சேரி நீதிமன்றில் ஐந்து வழக்குகள்! பிணையில் விடுதலை!

சாவகச்சேரி வைத்தியர்களுக்கு எதிரான அவதூறு உள்ளிட்ட விவகாரங்களில் சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டிருந்ததன் அடிப்படையில் பொலிசாரால் தொடரப்பட்டது. இது தொடர்பான 3 முறைப்பாடுகளில் இன்றையதினம் (16.07.2024) வைத்தியர் அர்ச்சுனாவை நீதிமன்றத்தில் முன்னிலையாக நீதவான் உத்தரவிட்டிருந்தார்.  வழக்குகளின் அடிப்படையில் பிணை வழங்கி, சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை அலுவலகங்களுக்குள் நுழைய தடை விதித்து வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு ...

யாழ் சுண்டுக்குழியில் விபச்சார விடுதி முற்றுகை! உரிமையாளர் கைது!

நீண்டகாலமாக AT தங்கும் விடுதி எனும் பெயரில் யாழ்ப்பாணத்தில் இயங்கி வந்த விபச்சார விடுதி பொலிசாரால் முற்றுகையிடப்பட்டுள்ளது.சுண்டுக்குளி மகளிர் பாடசாலைக்கு அருகில் தங்கும் விடுதி எனும் பெயரில் இயங்கி வந்த விபச்சார விடுதியே நேற்று (24) புதன்கிழமை இரவு சுற்றி வளைக்கப்பட்டது. இதன்போது, விபச்சாரத்தில் ஈடுபட்ட நான்கு பெண்களும், விபச்சார விடுதி உரிமையாளரும் கைது செய்யப்பட்டனர்....

தமிழரசுக்கட்சியின் தேசிய மாநாடு தொடர்பிலான வழக்குகள் மீள ஒத்திவைப்பு

இலங்கைத் தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டுக்கு எதிராக யாழ்.நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் ஜூன் 20ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் நீதிமன்றத்தில்,  இலங்கை தமிழரசு கட்சியின் மாநாட்டுக்கு எதிராக பிறப்பிக்கப்பட்ட இடைக்கால தடை உத்தரவு தொடர்பான வழக்கு இன்று (25.04.2024) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.இதன்போது, ஐந்தாவது எதிராளியான சண்முகம் குகதாசன்  இன்றும் நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. முதலாம் மற்றும் மூன்றாம்...

ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மை குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கண்டணம்

ஊடகங்களின் பொறுப்பற்ற தன்மை குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் யாழ்ப்பாண கிளை  கண்டணம் வெளியிட்டுள்ளது. அவர்களது கண்டன அறிக்கை வருமாறு ” முன்பெல்லாம் சில ஊடகங்களில் வரும் செய்திகளை பெரும்பாலும் நம்புவதற்கும, பார்த்துவிட்டு சிரித்து விடவும் பழகி இருந்தோம். அப்போது பெரும்பாலான ஊடகங்களின் உரிமையாளர்கள், பத்திரிகை ஆசிரியர்கள் உண்மை செய்திகளை தெரிவு செய்து போடுவதற்கும்,...

கொக்குவில் தொடருந்து நிலையம் நிதி மோசடி தொடர்பில் தற்காலிகமாக மூடப்பட்டது

கடந்த செவ்வாய்க்கிழமை (23) முதல் யாழ்ப்பாணம் கொக்குவில் தொடருந்து நிலையம் மூடப்பட்டுள்ளது. காங்கேசன்துறையிலிருந்து புறப்படும் தொடருந்துகள் கொக்குவில் தொடருந்து நிலையத்தை அடைந்து மீண்டும் புறப்படுகின்றன. இருப்பினும் குறித்த தொடருந்து நிலையத்தில் வழமையான செயற்பாடுகள் எதையும் மேற்கொள்ள முடியாமல் மக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். குறித்த தொடருந்து நிலையத்தில் இடம்பெற்ற சுமார் 20000 ரூபா கையாடல்...
Loading posts...

All posts loaded

No more posts