
யாழ்ப்பாணம் மாநகர பொதுச் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு வருகை தந்த அவர்கள் சுயதனிமைப்படுத்தலில் இருந்த அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையிலேயே கோரோனா தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது... Read more »

மன்னார் பொது வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று உயிரிழந்தவருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மன்னார் மாவட்டத்தில் முதலாவது கோவிட் -19 நோயாளி உயிரிழந்துள்ளார். வடக்கு மாகாணத்தில் இரண்டாவது நபர் கோவிட் -19 நோயால் உயிரிழந்துள்ளார். மன்னார் உப்புக்குளத்தைச் சேர்ந்த 57... Read more »

கொரோனாவுக்கு எதிரான ஒளடத பாணியை தாம் கூறியவாறு பருகியிருந்தால், ஒருவருக்கும் கொரோனா தொற்று ஏற்படாது என கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டார தெரிவித்துள்ளார். கேகாலையைச் சேர்ந்த தம்மிக்க பண்டார என்பவரினால் கொரோனா வைரஸுக்கு எதிராக தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் ஒளடத பாணியை பருகிய சில பேருக்கும்... Read more »

யாழ். பருத்தித்துறையில் இரண்டு பேருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று (திங்கட்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் உறுதிப்படுத்தினார். மேல் மாகாணத்திலிருந்து வந்த இருவர் பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரியின் அறிவுறுத்தலில் தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர். அவர்கள் இருவரிடம்... Read more »

தமிழ் மக்களுக்கு சொந்தமான புராதன ஆதிசிவன் அய்யனார் ஆலயம் அமைந்துள்ள வயல் நிலங்கள் காணிகள், உள்ளடங்கிய குமுளமுனை தண்ணிமுறிப்பு குருந்தூர் மலை மற்றும் மணலாறு படலைக்கல்லு பகுதி ஆகிய இடங்களில் இரண்டு புராதன பௌத்த விகாரைகள் இருந்தமைக்கான தொல்லியல் சிதைவுகள் காணப்படுவதாக தெரிவித்து இராணுவத்தின்... Read more »

இலங்கையில் தற்போது பரவும் வைரஸ் பிரித்தானியாவில் பரவும் வைரஸுக்கு ஒப்பானது என பொது சுகாதார அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று மிக மோசமாக பரவிக்கொண்டுள்ள நிலையில் அரசாங்கம் நாட்டினை திறக்கும் நடவடிக்கைகள் ஆரோக்கியமானதல்லவெனவும் அந்த சங்கம் தெரிவித்துள்ளது. நாட்டின் நிலைமைகள்... Read more »

கொரோனா தொற்று சந்தேகத்தில் தனிமைப்படுத்தப்படுபவர்கள் தேவையற்ற பயம், பதற்றத்தைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர், வைத்தியர் த.சத்தியமூர்த்தி கேட்டுக்கொண்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் கொரோனா நிலைமை தொடர்பாக இன்று (வெள்ளிக்கிழமை) நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இதனைவிட, யாழ்ப்பாணத்தில் டெங்கு... Read more »

வடக்கு மாகாணத்தில் புதிய கொரோனா தொற்றாளர்கள் ஒவ்வொரு நாளும் அடையாளம் காணப்படுவதாக அம்மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் தொடர்பாக வைத்தியர் ஆ.கேதீஸ்வரன், கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும்... Read more »

இலங்கையில் கோரோனா வைரஸின் புதிய வலுவான மாறுபாட்டை வெளிநாட்டிலிருந்து வருவோரால் நாட்டுக்குள் பரவும் அபாயம் இல்லை என்று சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் பணிப்பாளர், மருத்துவ வல்லுநர் சுதத் சமரவீர தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். மருத்துவ வல்லுநர்... Read more »

வடக்கு மாகாணத்தில் நேற்றையதினம் 8 பேருக்கு கோரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. மன்னாரில் கடந்த சில நாள்களில் அடையாளம் காணப்பட்டவர்களுடன் நேரடித் தொடர்புடைய 4 பேர் நேற்று அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார். அத்துடன்,... Read more »

சுகாதார நடைமுறைகளை மீறியதாக யாழ்ப்பாணம் நகரில் திரையரங்கு ஒன்று சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை வீதியில் உள்ள திரையரங்கே இன்று நண்பகல் முதல் சுகாதாரத் துறையினரால் மூடப்பட்டது. நாட்டின் திரையரங்குகளை இருக்கைகளின் எண்ணிக்கையில் 50 சதவீத பார்வையாளர்களை மட்டுமே அனுமதித்து இயங்க... Read more »

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை வழக்கில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அல்லது பிள்ளையான் உள்ளிட்ட 5 பேரையும் விடுவித்து விடுதலை செய்து ( Acquitted and Released) மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் இன்று கட்டளையிட்டது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின்... Read more »

வவுனியா நகரப் பகுதிகளைச் சேர்ந்த மேலும் 16 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை இன்றையதினம் (புதன்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனையடுத்து, வவுனியா நகர்ப் பகுதியில் கடந்த ஒருவாரத்தில் மாத்திரம் 146 நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். வவுனியா பட்டாணிசூர் பகுதியில் கோரோனா தொற்றாளர்கள் அடையாளம்... Read more »

பிரித்தானியாவில் இருந்து நாட்டிற்கு வந்த ஒருவர் புதிய கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்ட நபராக அடையாளம் காணப்பட்டுள்ளார் என சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு அறிவித்துள்ளது. குறித்த நபருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் பிரித்தானியா மற்றும் பல நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸின் புதிய மாறுபாடு... Read more »

அடுத்த மாதம் ஒக்ஸ்போர்ட் மற்றும் பைசர் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொள்ளவுள்ளதாக இலங்கை அரசாங்கம் தெரிவித்துள்ளது. அந்தவகையில் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை இந்தியா மூலமாகவும், பைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியை உலக சுகாதார அமைப்பின் மூலமாகவும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே தெரிவித்துள்ளார். அதன்பிரகாரம் ஒக்ஸ்போர்ட்-அஸ்ட்ராஜெனெகா... Read more »

வவுனியா நகர கோரோனா தொற்று கொத்தணியுடன் தொடர்புடையோரிடம் முன்னெடுக்கப்பட்ட பிசிஆர் பரிசோதனையில் மேலும் 25 பேருக்கு தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன் வடக்கு மாகாணத்தில் இன்று 31 பேருக்கு கோரோனா வைரஸ் தோற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலை வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்,... Read more »

முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி இடித்து அழிக்கப்பட்ட அதே இடத்தில் மீளவும் கட்டப்படுவதற்கான அடிக்கல் இன்று (திங்கட்கிழமை) காலை நாட்டப்பட்டுள்ளது. யாழ். பல்கலைக்கழக துணைவேந்தர் சி.சிறிசற்குணராஜா தலைமையில் இன்று காலை முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீண்டும் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்த... Read more »

“மாணவர்களின் உணர்வுடன் இசைந்தே துணைவேந்தரும் பயணிக்கின்றார். அவ்வகையில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை ஒரு அங்கீகரிக்கப்பட்ட நினைவுத் தூபியாக கட்டியெழுப்ப தயாராக உள்ளேன்” யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், மூத்த பேராசிரியர் சிவக்கொழுந்து சிறீசற்குணராசா தெரிவித்தார். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்துக்குள் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியை மீள அமைப்பது... Read more »

யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், நிர்வாகத்தால் இரவோடு இரவாக இடித்தழிக்கப்பட்டமைக்கு கண்டனம் வெளியிட்டும் கோரிக்கைகளை முன்வைத்துப் 9 மாணவர்கள் உணவு தவிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான வாயிலுக்கு வெளிப்புறத்தில் இந்த உணவு தவிர்ப்புப் போராட்டத்தை மாணவர்கள் முன்னெடுத்துள்ளனர். இடிக்கப்பட்ட முள்ளிவாய்க்கால்... Read more »

யாழ்ப்பாண பல்கலைகழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அகற்ற பல்கலைகழக நிர்வாகம் எடுத்த முடிவிற்கு எதிராக ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் இரவிரவாக நீடித்து, இன்று காலையும் நீடிக்கிறது. விடிகாலையில் சற்று அமைதியான நிலைமை காணப்பட்டாலும், மீண்டும் தற்போது களம் சூடு பிடிக்கிறது. பொலிசார், விசேட அதிரடிப்படையினர் தற்போது... Read more »