நீடிக்கப்பட்டது ஊரடங்கு உத்தரவு!

நாடளாவிய ரீதியில் அமுலிலுள்ள முடக்க கட்டுப்பாடுகள் அடுத்த மாதம் முதலாம் திகதி அதிகாலை 4 மணிவரை வரை நீடிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி ஊடகப் பேச்சாளர் கிங்ஸ்லி ரத்நாயக்க தமது ட்விட்டர் தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ தலைமையில் கூடிய கொரோனா தடுப்பு தேசிய... Read more »

20 ஆம் திகதி தாக்குதல் நடத்தப்படலாமென வெளியான செய்தி குறித்து அதிர்ச்சி தகவல்கள்

எதிர்வரும் 20 ஆம் திகதி தாக்குதல் ஒன்று நடாத்தப்படலாம் என கிடைக்கப் பெற்றதாக கூறப்படும் தகவல் ஒன்றுக்கு அமைய, கட்டுநாயக்க – பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் மத்தளை – மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் ஆகியவற்றின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ள நிலையில்,... Read more »

காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்கு அருகில் வீழ்ந்து கிடந்தவர் உயிரிழப்பு; கொலை என உறவினர்கள் தெரிவிப்பு!!!

காங்கேசன்துறை பிரதான வீதியில் சுயநினைவற்று வீழந்து கிடந்த இளம் குடும்பத்தலைவர் தெல்லிப்பழை ஆதார மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். அவரது தலையில் காயம் காணப்படுவதாகப் பொலிஸார் கூறினர். அவர் கொலை செய்யப்பட்டுள்ளார் என்றும் விசாரணைகளை முன்னெடுத்து கொலையாளிகளைக் கைது செய்யுமாறும் உறவினர்கள் காங்கேசன்துறை... Read more »

யாழ். போதனாவில் குழந்தை பிரசவித்த தாய் கொரோனோவால் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் குழந்தை பிரசவித்த நிலையில் பெண்ணொருவர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அளவெட்டி வடக்கைச் சேர்ந்த 42 வயதுடைய சதீஸ்குமார் அபினினி என்ற தாயாரே உயிரிழந்துள்ளார். அவரது பெண் குழந்தை நலமுடம் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் மருத்துவக்... Read more »

இலங்கையில் கருப்பு பூஞ்சை தொற்றுக்கு உள்ளான கொரோனா நோயாளர்கள் அடையாளம்!!

கருப்பு பூஞ்சை தொற்றுக்கு உள்ளான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதாரப் பிரிவு தெரிவித்தது. கொரோனா தொற்றுக்கு உள்ளாகி, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த... Read more »

யாழில் கொரோனா வைரஸ் தொற்றினால் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உயிரிழப்பு

கொரோனா வைரஸ் தொற்றுக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த கர்ப்பிணிப் பெண் ஒருவர் சிகிச்சை பயனின்றி உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம்- நாவாந்துறையைச் சேர்ந்த இமானுவேல் ராஜன் மரியதெஸ்ரா (வயது-36) என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 1ஆம் திகதி காய்ச்சல் காரணமாக யாழ்.வைத்தியாலையில் அவர் அனுமதிக்கப்ப்டார்.... Read more »

இலங்கையில் கொரோனா உயிரிழப்புகளின் எண்ணிக்கை 11 ஆயிரத்தைக் கடந்தது!

இலங்கையில் கொரோனா வைரஸ் தொ்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 152ஆக அதிகரித்துள்ளது. நாட்டில் மேலும் 157 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ள நிலையில், இந்த அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இவர்களில் 30 வயதுக்கு குறைவான நால்வரும் 60 வயதுக்கு குறைவான 23 பேரும்... Read more »

காரைநகரில் திருமண நிகழ்வில் பங்கேற்ற 34 பேருக்கு கொரோனா!

யாழ்ப்பாணம் காரைநகரில் ஊரடங்கு வேளை பந்தல் அமைத்து நூறுக்கும் அதிகமானோர் பங்குகொண்டிருந்த திருமண நிகழ்வில் பங்கேற்ற 13சிறார்கள் உட்பட 34 பேருக்கு கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. யாழ்.போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனைகளில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன் அடிப்படையில்... Read more »

யாழ்ப்பாணத்தில் 1 வயது குழந்தை உயிரிழப்பு: கொரோனா வைரஸ் தொற்று உறுதி

யாழ்ப்பாணம்- தெல்லிப்பழை வைத்தியசாலையில் காய்ச்சல் காரணமாக சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட 1 வயதான குழந்தை, சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இந்த நிலையில் குறித்த குழந்தைக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தகவல்கள் தொிவிக்கின்றன. தெல்லிப்பழை பொியபுலம் பகுதியை சேர்ந்த... Read more »

623 பொருட்களுக்கு நூற்றுக்கு 100% உத்தரவாத தொகை – மத்திய வங்கி அதிரடி அறிவிப்பு

அந்நிய செலாவணி விகிதத்தைப் பாதுகாக்கும் முகமாக நாட்டுக்கு இறக்குமதி செய்யப்படும் 623 பொருட்களுக்கு நூறுவீத உத்தரவாத தொகையை செலுத்த வேண்டும் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. கைத்தொலைபேசி, தொலைக்காட்சிகள், குளிர்சாதன பெட்டிகள், மின்விசிறிகள், சலவை இயந்திரங்கள், கடிகாரங்கள் உள்ளிட்டவை இதில் அடங்கும். அத்தோடு... Read more »

எதிர்வரும் திங்கட்கிழமை நாட்டை திறப்பது குறித்து சுகாதார சேவைகள் பணிப்பாளர் எச்சரிக்கை!

நாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமை நீக்குவதாக இருந்தால் முறையான திட்டம் வகுக்கப்பட வேண்டுமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு... Read more »

வடக்கில் கடந்த 6 நாட்களில் மாத்திரம் 75 கொரோனா மரணங்கள் பதிவு!

வடக்கு மாகாணத்தில் செப்டெம்பர் மாதத்தின் முதல் 6 நாட்களில் மாத்திரம் 75 பேர் கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். அவர்களில் வவுனியா மாவட்டத்தில் 29 பேரும் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 27 பேரும் உயிரிழந்துள்ளனர் என சுகாதாரத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு, வடக்கு மாகாணத்தில்... Read more »

நிறைவேறியது அவசரகாலச் சட்டம்!!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் பிரகடனப்படுத்தப்பட்ட அவசரகால சட்டம் 81 மேலதிக வாக்குகளினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. அவசரகால சட்டத்துக்கு ஆதரவாக 132 வாக்குகளும் எதிராக 51 வாக்குகளும் அளிக்கப்பட்ட நிலையியேயே 81 மேலதிக வாக்குகளினால் அவசரகால சட்டம் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி கோட்டாபய ராஜபசவினால் கடந்த ஆகஸ்ட்... Read more »

பணம் உதவி வழங்கிய குற்றச்சாட்டில் யாழில் மூவர் கைது!

நாட்டில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறி அதிகளவானோரை அழைத்து பணம் உதவி வழங்கிய குற்றச்சாட்டில் மூவர் நெல்லியடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வதிரி, இரும்பு மதவடியில் இன்று (திங்கட்கிழமை) முற்பகல் இந்தச் சம்பவம் இடம்பெற்றது. வருமானம் குறைந்த குடும்பங்களுக்கு இந்தப் பண உதவி வழங்கப்படுவதாக... Read more »

முன்னாயத்த நடவடிக்கைக்காக ஏனைய சடலங்களை எரியூட்டும் நிலையங்களுடனும் தொடர்பிலேயே இருக்கிறோம் – யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர்

முன்னாயத்த நடவடிக்கைக்காக நாட்டிலுள்ள வேறு இடங்களில் உள்ள சடலங்களை எரியூட்டும் நிலையங்களுடனும் தொடர்பிலேயே இருக்கிறோமென யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். யாழ் போதனா வைத்தியசாலையில் இன்று மதியம் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அது தொடர்பில் அவர் மேலும்... Read more »

4 மாவட்டங்களில் 20 – 29 வயதுக்கு உட்பட்டோருக்கு நாளை முதல் தடுப்பூசி!

நாட்டில் 4 மாவட்டங்களில் உள்ள 20 முதல் 29 வயதுக்கு உட்பட்டோருக்கு தடுப்பூசி வழங்கும் திட்டம் நாளை முதல் தொடங்கும் என இராணுவத்தளபதி சவேந்திர சில்வா இன்று தெரிவித்தார். அதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை மற்றும் காலி மாவட்டங்களில் நாளை தடுப்பூசி செலுத்தப்படுமென அவர்... Read more »

ஒக்டோபர் 2 வரை முடக்கத்தை நீடிக்க வேண்டும் – இலங்கை மருத்துவ சங்கம்

நாட்டில் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள முடக்கத்தில் காணப்படுகின்ற தளர்வு நிலைமையால் முடக்கத்தின் மூலமான நேர்மறையான பிரதிபலனைப் பெற முடியாமல் போகும். எனவே தற்போதுள்ளதைப் போன்ற நிலைமையிலேனும் போக்குவரத்துக்களை கட்டுப்படுத்துவதன் மூலம் பாதுகாக்கக் கூடிய உயிர்களைக் கருத்திற் கொண்டு, தற்போதைய முடக்கத்தை இம்மாதம் 18 ஆம் திகதி... Read more »

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிப்பு!!

நாடளாவிய ரீதியில் அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல அறிவித்துள்ளார். அதன்படி குறித்த ஊரடங்கு செப்டம்பர் 13 ஆம் திகதி அதிகாலை 4 மணி வரை அமுலில் இருக்கும் என்றும் அவர் கூறியுள்ளார். தற்போதைய அதிகரிப்பைக் கட்டுப்படுத்த... Read more »

குழந்தை பிரசவித்து 10 நாட்களின் பின்னர் தாய் உயிரிழப்பு – யாழில் மேலும் 8 உயிரிழப்புகள் பதிவு!

யாழில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட நிறைமாதக் கர்ப்பிணிப் பெண் குழந்தை பிரசவித்து 10 நாட்களின் பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். பிறந்த குழந்தைக்கும் கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை வழங்கப்படுகிறது. கிளிநொச்சியைச் சேர்ந்த சண்முகராசா பிரியதர்ஷினி... Read more »

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் கைதடி முதியோர் இல்லத்தில் 72 பேர் உட்பட 106 பேர் தொற்றுடன் அடையாளம்!

சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இன்று (வியாழக்கிழமை) முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் 106 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அவர்களில் 72 பேர் கைதடி முதியோர் இல்லத்தில் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டது. சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி... Read more »