கொக்குவில், நல்லூர், கொடிகாமம் மற்றும் நகர்கோவில் மக்களுக்கான எச்சரிக்கை!!

இன்று (ஆகஸ்ட் 28) நண்பகல் 12:11 மணிக்கு கொக்குவில், நல்லூர், கொடிகாமம் மற்றும் நகர்கோவில் ஆகிய இடங்களுக்கு மேலாகச் சூரியன் நேரடியாக உச்சம் கொடுக்கவுள்ளது. சூரியனின் தெற்கு நோக்கிய நகர்வின் காரணமாக ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 07 வரை இலங்கையின் அட்சரேகைகளுக்கு நேரே சூரியன் உச்சம் கொடுக்கவுள்ள நிலையில், பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இதேவேளை மேல், சபரகமுவ, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களில் 75 மி.மீ-க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும். ஊவா மாகாணம், அம்பாறை, மட்டக்களப்பில் பிற்பகல் 2.00 மணிக்கு மேல் இடிமின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகள், வடக்கு, வடமத்திய, வடமேல் மாகாணங்கள் மற்றும் திருகோணமலை, மொணராகலை, ஹம்பாந்தோட்டை, மாத்தளை மாவட்டங்களில் மணிக்கு 40-50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும்.

பாதுகாப்பு அறிவுறுத்தல்: இடிமின்னல் மற்றும் தற்காலிகப் பலத்த காற்றினால் ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க பொதுமக்கள் விழிப்புடன் செயல்பட அறிவுறுத்தப்படுகிறார்கள். ஏனைய பகுதிகளில் பிரதானமாக வறட்சியான வானிலை நிலவும்.

Related Posts