கொரோனா அச்சம் காரணமாக வல்வை பட்டத்திருவிழா இடைநிறுத்தம்!

வல்வெட்டித்துறை பட்டத்திருவிழா கொரோனா காரணமாக இடைநிறுத்தப்படுவதாக, ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. வல்வெட்டித்துறை உதயசூரியன் கடற்கரையில் வருடாந்திரம் தைப்பொங்கல் தினத்தன்று மாபெரும் பட்டத்திருவிழா இடம்பெறுவது வழமையாகும். அந்த வகையில் இம்முறையில் பட்டத்திருவிழாவை நடாத்த ஏற்பாட்டாளர்கள் தீர்மானித்திருந்தனர். இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் முழுமையாக நீங்காத நிலையில், பட்டத்திருவிழாவை நடாத்தும்... Read more »

வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை காலவரையின்றி ஒத்திவைக்குமாறு கோரிக்கை

பல்லாயிரக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி பங்கேற்கும் வல்வெட்டித்துறை பட்டத் திருவிழாவை, தற்போது பரவிவரும் ஒமிக்ரோன், கொவிட் 19 வைரஸ் காரணமாக காலவரையின்றி ஒத்தி வைக்க வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார். வல்வெட்டித்துறையில் உள்ள அவரது அலுவலகத்தில் நேற்று (3) இடம்பெற்ற ஊடக சந்திப்பிலே... Read more »

விளையாட்டுத்துறை அமைச்சின் ஆதரவுடன் “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022”

யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பட்டத் திருவிழா இம்முறை இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சின் பூரண ஆதரவுடன் “வல்வெட்டித்துறை சர்வதேச பட்டத் திருவிழா 2022” நடைபெறவுள்ளது. யாழ். பட்டத் திருவிழா ஏற்பாட்டுக் குழுவினருக்கும் இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பில்... Read more »

ஐபிஎல் வீரர்கள் ஏலம் பட்டியலில் யாழ்ப்பாணம் வீரர் வியாஸ்காந்த் இடம்பிடித்தார்!!

14ஆவது ஐ.பி.எல் தொடருக்கான வீரர்கள் ஏலம் நடைபெறவுள்ள நிலையில் புதிய வீரர்கள் பட்டியலில் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த விஜயகாந்த் வியாஸ்காந்தின் பெயரும் இடம்பெற்றது. இலங்கையைச் சேர்ந்த 9 வீரர்கள் இறுதிப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர். அவர்களிலேயே விஜயகாந்த் வியாஸ்காந்த் இடம்பெற்றுள்ளார். ஐபிஎல் 2021 இந்த ஆண்டு ஏப்ரல்-மே... Read more »

முதலாவது LPL கிண்ணம் ஜெப்னா ஸ்டாலியன்ஸ் அணிக்கு!!

லங்கா பிரிமியர் லீக் இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் இறுதிப் போட்டி ஹம்பாந்தோட்டை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் இடம்பெற்றது. இறுதி போட்டியில் ஜெப்னா ஸ்டாலியன்ஸ் மற்றும் கோல் கிளடியேடர்ஸ் அணிகள் மோதி இருந்தன. நாணய சுழற்சியில் ஜெப்னா ஸ்டாலியன்ஸ் அணி வெற்றிப்... Read more »

கண்கவர் மெய்நிகர் திறப்பு விழாவுடன் இன்று ஆரம்பமாகும் எல்.பி.எல். தொடர்

இலங்கை கிரிக்கெட் வரலாற்றின் புதிய அத்தியாயமான லங்கா பிரீமியர் லீக் இருபதுக்கு – 20 கிரிக்கெட் தொடரானது பல தடைகள், பல சவால்களுக்கு மத்தியில் இன்று (நவம்பர் 26) ஆரம்பமாகவுள்ளது. அதன்படி மாலை 6.50 மணிக்கு ஆரம்பமாகும் லங்கா பிரீமியர் லீக் தொடரானின் தொடக்க... Read more »

யாழ். துரையப்பா மைதானம் விரைவில் புனரமைக்கப்படும் – அமைச்சர் நாமல்

யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானம் வடக்கின் சிறந்த மைதானமாக விரைவில் தரமுயர்த்தப்படவுள்ளதாக இளைஞர் விவகார மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு மைதானத்தினை இன்று (திங்கட்கிழமை) காலை பார்வையிட்டதோடு குறித்த விளையாட்டு மைதானத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தி திட்டங்கள்... Read more »

உதைபந்தாட்ட அணியின் சின்னத்தில் உறுமும் புலிகள்- பொலிஸ், இராணுவம் எதிர்ப்பு

வல்வெட்டித்துறையில் இடம்பெறும் வல்வை உதைபந்தாட்ட பிரிமியர் லீக் தொடரின் நேற்றைய முதல் நாள் ஆரம்ப நிகழ்வில் அணி ஒன்றின் கொடியில் உறுமும் புலிகளின் சின்னம் இருந்தமையால் இராணுவத்தினரும் பொலிஸாரும் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். வல்வெட்டித்துறை ஊரணி மைதானத்தில் இந்த உதைபந்தாட்டத் தொடர் நேற்று ஆரம்பமாகி... Read more »

தேசிய விளையாட்டு பேரவையின் தலைவராக மஹேல ஜயவர்தன!

தேசிய விளையாட்டுப் பேரவையின் தலைவராக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான மகேல ஜயவர்த்தன நியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ச குறித்த நியமனத்தினை வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த குழுவின் உறுப்பினர்களாக இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார, இராணுவத்தளபதி ஷவேந்திர... Read more »

கடந்த 2011 ஆம் ஆண்டு உலக கிண்ணம் பணத்திற்காக விற்கப்பட்டதா??

கடந்த 2011 ஆம் ஆண்டு உலக கிண்ணம் பணத்திற்காக விற்கப்பட்டதாகவும் இறுதிப்போட்டியில் ஊழல் இடம்பெற்றதாகவும் தெரிவித்துள்ள முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே, குற்றச்சாட்டுக்கள் தொடர்பான ஆதாரங்களை விசாரணைக்காக சர்வதேச கிரிக்கெட் சபையிடம் சமர்ப்பிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த தன்னிடமுள்ள ஆதாரங்களை... Read more »

வடக்கின் பெரும் போர்: சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி வலுவான நிலையில்!

வடக்கின் பெரும் போர் என வர்ணிக்கப்படும் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் சென் ஜோன்ஸ் கல்லூரி அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி நேற்று ஆரம்பமானது. இந்தப் போட்டியில் யாழ்ப்பாணம் சென்.ஜோன்ஸ் கல்லூரி அணி முதலாவது இன்னிங்ஸில் வலுவான நிலையில் உள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி... Read more »

தேசியத்தில் சாதித்தனர் தெல்லிப்பளை மகாஜனா மங்கையர்கள்

அகில இலங்கை பாடசாலைகளுக்கு இடையிலான 20 வயது பெண்கள் உதைப்பந்தாட்ட இறுதிப்போட்டியில் மகாஜனக் கல்லூரி மற்றும் பராக்கிரமபாகு மத்திய மகாவித்தியாலய அணிகள் மோதின ஆட்ட நேரமுடிவில் தெல்லிப்பளை மகாஜனா பெண்கள் அணி 1-0 என்ற கோல்கணக்கில் வெற்றி பெற்று தேசிய சம்பியனாகியது மகாஜானாவின் வெற்றிக்கொலினை... Read more »

சொந்த மண்ணில் உலகக் கிண்ணத்தை முதன்முறையாக கைப்பற்றியது இங்கிலாந்து

உலக கிண்ண கிரிக்கெட் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான ஆட்டத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்று முதல்முறையாக உலக கிண்ணத்தை கைப்பற்றியது. உலக கிண்ண கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இறுதிப்போட்டி நடைபெற்றது. இதில் நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து அணி... Read more »

லண்டனில் உள்ள MCC இன் தலைவராக குமார் சங்கக்கார நியமிப்பு

லண்டனில் உள்ள மேரிலெபோன் கிரிக்கட் கழகத்தின் ( MARYLEBONE CRICKET CLUB) தலைவராக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்கார நியமிக்கப்பட்டுள்ளார். பிரிட்டன் குடியுரிமை இல்லாத ஒருவரை அந்தக் கழகத்தின் தலைவராக நியமிப்பது இதுவே முதன்முறையாகும் என சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.... Read more »

யாழ்ப்பாணக் கல்லூரி படுதோல்வி!!

யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரிக்கும் வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரிக்கும் இடையிலான ராஜன் கதிர்காமர் சுற்றுக் கிண்ணத்துக்கான ஆட்டத்தில் 187 ஓட்டங்களால் வென்றது சென். பற்றிக்ஸ். யாழ்ப்பாணம் சென். பற்றிக்ஸ் கல்லூரி மைதானத்தில் நேற்று இந்த ஆட்டம் இடம்பெற்றது. நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற சென். பற்றிக்ஸ்... Read more »

யாழ்.மத்தியகல்லூரி மைதானத்தில் பெரும்போர் ஆரம்பம்!

டக்கின் பெரும் சமர் என வர்ணிக்கப்படும் யாழ். மத்திய கல்லூரிக்கும், யாழ். சென். ஜோன்ஸ் கல்லூரிக்கும் இடையிலான 113 ஆவது மாபெரும் கிரிக்கெட் போட்டி ஆரம்பமாகியுள்ளது. யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியில் நாணயச் சுழற்சியில் வெற்றிபெற்ற யாழ் மத்திய கல்லூரி... Read more »

மாமனிதர் குமார் பொன்னம்பலம் ஞாபகார்த்த துடுப்பாட்டச் சுற்றுப்போட்டி ஆரம்ப நிகழ்வு

மாமனிதர் குமார் பொன்னம்பலம் அவர்களின் 19வது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் விளையாட்டுத்துறையின் ஏற்பாட்டில் மாமனிதர் குமார் பொன்னம்பலம் ஞாபகார்த்த மென்பந்து துடுப்பாட்டச் சுற்றுப் போட்டியின் ஆரம்ப நிகழ்வகடந்த சனிக்கிழமை நடைபெற்றது. அக்கராஜன் பிரதேச விளையாட்டுத் திடலில் காலை... Read more »

உலக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை தமிழர்

உலக உடற்கட்டழகர் மற்றும் உடலமைப்பு விளையாட்டு சம்மேளனத்தின் 10ஆவது உடற்கட்டழகர் போட்டியில் 100 கிலோ கிராமுக்கு மேற்பட்டோர் பிரிவில் தெற்காசியாவின் கறுப்பு சிங்கம் என வர்ணிக்கப்படுகின்ற தேசிய உடற்கட்டழகர் சம்பியனான இலங்கைத் தமிழர் லூசியன் புஷ்பராஜ் வெற்றி பெற்றுள்ளார். தாய்லாந்தில் இடம்பெற்ற 10 ஆவது... Read more »

40 ஆண்டுகளின் பின் இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ் இளைஞன்

இலங்கை கிரிக்கெட் அணிக்கு 1982-ம் ஆண்டு டெஸ்ட் அந்தஸ்து கிடைத்தது. 90-களில் வெற்றிப் பாதையில் பயணித்த இலங்கை கிரிக்கெட் அணி 1996-ம் ஆண்டு உலகக் கோப்பையை முதன்முறையாக வென்றது. அந்த சமயத்தில் கிரிக்கெட் அணியை இலங்கையின் மேற்கு, தெற்குப் பிரதேசங்களைச் சேர்ந்த வீரர்களே பிரதிநிதித்துவப்படுத்தினர்.... Read more »

இந்தியாவிற்கு எதிரான கிரிக்கெட் போட்டியில் யாழ்ப்பாண இளைஞர்கள்!!

19 வயதுக்கு உட்பட்ட இலங்கை கிரிக்கெட் அணியில் யாழ்ப்பாணம் மாவட்டத்தை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்தியாவுக்கு எதிரான தொடரில் பங்கேற்கவுள்ள இலங்கை அணியில் இவர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. யாழ். மத்திய கல்லூரியைச் சேர்ந்த மதுஷன் மற்றும் விஜயகாந் ஆகியோருக்கே அந்த இடம்... Read more »