பிரமாண்டமாகத் தொடங்கும் யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2026: இளையோருக்கு அழைப்பு!

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் மஹோற்சவக் காலத்தை முன்னிட்டு, யாழ்ப்பாண சர்வதேச புத்தகத் திருவிழா 2026 எதிர்வரும் செப்டம்பர் 5-ஆம் திகதி முதல் 9-ஆம் திகதி வரை யாழ்ப்பாணம் சங்கிலியன் பூங்காவில் மிக விமர்சையாக நடைபெறவுள்ளது. தொடர்ச்சியாக மூன்றாவது ஆண்டாக நல்லூர் கோவிலுக்கு அருகில் உள்ள சங்கிலியன் பூங்காவில் ஒழுங்குசெய்யப்பட்டுள்ள இப்புத்தகத் திருவிழாவில், 30-க்கும் மேற்பட்ட காட்சிக்கூடங்களில்...

புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில் சாதனையாளர் மதிப்பளிப்பு!!

முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு புனித சூசையப்பர் ஆலயத்தில், புதுக்குடியிருப்பு பங்கிற்ற்கு உட்பட்ட சாதனையாளர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு இடம்பெற்றது. இந்நிகழ்வில் முதன்மை விருந்தினராக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் பங்கேற்றார். அந்தவகையில் புதுக்குடியிருப்பு பங்குத்தந்தை அருட்பணி எஸ். அஜந்தன் தலைமையிலும், முல்லைத்தீவு மாவட்ட குருமுதல்வர் இராஜசிங்கம் அடிகளார் அவர்களது ஆன்மீகத் தலைமையிலும் இடம்பெற்ற இந்த மதிப்பளிப்பு...
Ad Widget

உறுப்பு தானத்தின் மகத்துவத்தை வலியுறுத்திய விழிப்புணர்வுப் பேரணி!!

யாழ்ப்பாண போதனா வைத்தியசாலை, வடக்கு உறுப்பு மாற்றுச் சிகிச்சை சங்கம் மற்றும் யாழ்ப்பாண மருத்துவச் சங்கம் ஆகியவற்றின் ஒருங்கிணைப்பில், உறுப்பு தானம் மற்றும் உறுப்பு மாற்றுச் சிகிச்சையின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வுப் பேரணி நேற்றையதினம் நடைபெற்றது. யாழ்ப்பாண போதனா வைத்தியசாலையில் ஆரம்பமான பேரணி, பலாலி வீதி, நாவலர் வீதி, கே.கே.எஸ். வீதி மற்றும் வைத்தியசாலை வீதி...

யாழில். மிக பிரமாண்டமாக நடைபெறவுள்ள உணவுத் திருவிழா!!

வட மாகாணத்தின் வளமான கலாசாரப் பாரம்பரியம், தனித்துவமான உணவுப் பாரம்பரியம் மற்றும் கலை மரபுகளை உள்நாட்டு மற்றும் சர்வதேச சுற்றுலாவிகளுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில், வட மாகாண சுற்றுலாப் பணியகத்தின் ஏற்பாட்டில் 'யாழ்ப்பாணத்துக்கு வருகை தாருங்கள் 2026 – கலாசார மற்றும் உணவுத் திருவிழா' (Visit Jaffna 2026 – Cultural and Culinary Festival) எதிர்வரும்...

வடக்கு தெங்கு முக்கோண திட்டத்தின் மற்றொரு கட்டம் ஆரம்பம்!

தெங்கு பயிர்ச்செய்கை சபையினால் நடைமுறைப்படுத்தப்படும் கற்பகத்தரு வளத்தின் கீழ் வடக்கு தெங்கு முக்கோணம் திட்டத்தின் மற்றொரு கட்டம் முல்லைத்தீவு, முள்ளியவளைப் பகுதியில் நடைபெற்றது. 2030ஆம் ஆண்டளவில் இலங்கையின் தெங்கு ஏற்றுமதி வருமானத்தை 1.5 பில்லியன் அமெரிக்க டொலர்களாகவும், வருடாந்த தெங்கு உற்பத்தியை 4,200 மில்லியன் காய்களாகவும் உயர்த்தும் தேசிய இலக்கை அடையும் நோக்கில் இது நடத்தப்படுகிறது....

வடக்கு தகவல் தொழில்நுட்பத் துறைக்கு ஒரு புதிய அத்தியாயம் தொடங்குகிறது!

வடமாகாண தகவல் தொழில்நுட்ப அமைப்பின் (NCIT) வருடாந்தப் பொதுக்கூட்டம் கடந்த சனிக்கிழமை (18 ஜூலை 2026) நடைபெற்றது. இக்கூட்டத்தில், வடக்கு தகவல் தொழில்நுட்பத் துறையை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் நோக்கில், உறுப்பினர்களின் முழுமையான ஆதரவு மற்றும் ஒருமித்த தீர்மானத்துடன் புதிய இயக்குநர் சபையினரும் நிர்வாகிகளும் போட்டியின்றி ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். 🏛️ NCIT இயக்குநர் சபை உறுப்பினர்கள்...

அரசியல்வாதிகள் மாறியது போன்று அதிகாரிகளும் மாறவேண்டும்!!

அரசாங்கம் மாறுவதால் மட்டும் முறைமை மாற்றம் முழுமையடையாது. அரசியல்வாதிகள் மாறியது போன்று, அதிகாரிகளும் மாறினால் மாத்திரமே மக்கள் எதிர்பார்த்த அந்த மாற்றம் மக்களின் வாசற்படியை எட்டும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் தெரிவித்தார். 'சட்டத்தை மதிக்கும் நேர்மைமிகு அரச சேவை' எனும் தொனிப்பொருளில் வடக்கு மாகாண நேர்மை வார (27 ஜூலை...

100 சேவல்கள் பலியிட்டு வழிபாடு – ஆண்களுக்கு மட்டுமே அன்னதானம்!

மதுரை மாவட்டம், கொட்டாம்பட்டி அருகேயுள்ள மங்களாம்பட்டியில், மழையை வேண்டி ஆண்கள் மட்டுமே படையல் வைத்து வழிபடும் வினோதத் திருவிழா ஆண்டுதோறும் ஆடி மாதம் நடைபெறுவது வழக்கம். அந்த மரபுப்படி, இந்த ஆண்டிற்கான 'ஆடிப் படையல்' திருவிழா நேற்று விமரிசையாக நடைபெற்றது. இத்திருவிழாவையொட்டி, கிராம மக்கள் பலரும் தங்களின் வேண்டுதல்களை நிறைவேற்றும் விதமாக, மதுரைவீரன் சுவாமிக்குச் சேவல்களைப்...

நல்லூர் பிரதேச சபையின் “ஊராட்சி முற்றம்”

நல்லூர் பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை ஒருங்கிணைப்பதற்கும், திணைக்களங்களுக்கு இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், பிரதேசத்தில் நிலவும் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஒருங்கிணைந்த தீர்வுகளை ஆராய்வதற்கும் நோக்கமாக "ஊராட்சி முற்றம்" எனும் ஒருங்கிணைப்புக் கூட்டம், நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் திரு. பத்மநாதன் மயூரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. நல்லூர் பிரதேச சபையின் பிரதான...

மாபெரும் குளிரூட்டப்பட்ட நடமாடும் கோள்மண்டலம் திறந்து வைப்பு!

யாழ்ப்பாணம் தொழிநுட்பவியல் கல்லூரி மைதானத்தில் அமைக்கப்பட்டுள்ள மாபெரும் குளிரூட்டப்பட்ட நடமாடும் கோள்மண்டலம் நேற்றைய தினம்(01.07.2026) காலை 10.00 மணியளவில் உத்தியோகபூர்வமாக யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் திரு. மருதலிங்கம் பிரதீபன் அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் சர்வமதத் தலைவர்களின் ஆசியுரை இடம்பெற்றதை தொடர்ந்து மாவட்ட அரசாங்க அதிபர் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில், யாழ்ப்பாண மாவட்டத்திலே...

சிகரம் கல்வி தொழில் விசா சேவை யாழ்ப்பாணக் கல்லூரி பட்டதாரிகள் பிரிவில் ஆரம்பமானது!

15 வருடங்களுக்கு மேற்பட்ட கல்வி, தொழில், விசா சேவை அனுபவம் கொண்ட சிகரம் நிறுவனத்தின் செயற்பாடுகள், யாழ் நகர மத்தியில் யாழ்ப்பாணக் கல்லூரி பட்டதாரிகள் பிரிவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைக்கப்பட்டது. யாழ் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் பொ.பாலசுந்தரம்பிள்ளை, முன்னாள் ஆசிரிய பயிற்சி கலாசாலை அதிபர் கவிஞர் சோ.பத்மநாதன், முன்னாள் நெல்லியடி மகாவித்தியாலய அதிபர் கலாநிதி சேதுராஜா, யாழ்...

“ஜெய்ப்பூர் நிறுவனம் தொடர்ந்து இயங்க கொடையாளர்கள் உதவ வேண்டும்!” – ஆளுநர் நா.வேதநாயகன் கோரிக்கை

அவயவங்களை இழந்த எமது மக்கள் முடங்கிப்போகாமல், அவர்களுக்கு நம்பிக்கையூட்டி, அவர்களின் வழமையான செயற்பாடுகளுக்கு உதவும் ஜெய்ப்பூர் நிறுவனம் தனது சேவைகளை முற்றிலும் இலவசமாக வழங்குவது எமது மக்களுக்குக் கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இந்நிறுவனம் தொடர்ந்தும் இயங்குவதற்கு கொடையுள்ளம் கொண்டவர்கள் தங்களின் உதவிகளை வழங்க முன்வர வேண்டும், என வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள்...

வடக்கின் பெண் உற்பத்தியாளர் விழா!

சர்வதேச மகளிர் தினத்தினை முன்னிட்டு, வடக்கின் பெண் உற்பத்தியாளர் விழாவும் கலைவிழாவும் நாளைய தினம் வெள்ளிக்கிழமை காலை 09 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது. பெண் தொழில் முனைவோரின் உள்ளூர் தயாரிப்புக்கள், ஆரோக்கியமான சிற்றுண்டி வகைகள், ஆடை , ஆபரணங்கள், கைவேலை அலங்கார பொருட்கள் என்பன காட்சிப்படுத்தப்படவுள்ளன. அத்துடன் வடக்கு, கிழக்கு கலாச்சாரங்களை பிரதிபலிக்கும் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள்,...

யாழில் ஏ.ஆர்.ரகுமானின் இசை நிகழ்ச்சி!!

யாழ்.நகரில் இந்திய அரசின் நிதியுதவியுடன் கட்டப்பட்டுள்ள இந்திய கலாசார நிலையத்தை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியே திறந்து வைப்பாரென எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த கலாசார நிலையம் ஒரு வருடத்திற்கு முன்னர் கட்டிமுடிக்கப்பட்ட நிலையில் அது திறப்பு விழாவிற்காக காத்திருக்கிறது. இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி 2015 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் வந்திருந்த போது, 160 கோடி ரூபா...

யாழ் இந்துவின் பொங்கல் திருவிழா 2020

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி சமூகம் நடாத்தும் பொங்கல் திருவிழா 2020 எதிர்வரும் 15.01.2020 புதன்கிழமை அன்று கோலாகலமாக இடம்பெறவுள்ளது. யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவர்களின் ஏற்பாட்டில், காலை 9.30 மணிமுதல் பொங்கல் நிகழ்வுகளுடன் கூடிய பண்பாடு அம்சங்களை உள்ளடக்கிய நிகழ்வுகள் நடைபெறவுள்ளது. காலை 10.00 மணிக்கு யாழ் இந்துக் கல்லூரியில் இருந்து சிலம்பாட்டம், பொய்க்...

யாழில் செஞ்சொற்செல்வர் ஆறு. திருமுருகனுக்கு அதியுயர் மரியாதைகளுடன் மகத்தான கெளரவம்!!

தென்மராட்சி இலக்கிய அணி நடாத்திய கம்பன் விழாவின் இறுதிநாள் நிகழ்வுகள் நேற்று ஞாயிற்றுக்கிழமை(22) பிற்பகல்-05.45 மணி முதல் யாழ். சாவகச்சேரி சங்கத்தானை தமிழ்க் கோட்டத்தில் இடம்பெற்றது. குறித்த விழாவில் சிவபூமி அறக்கட்டளையின் தலைவரும், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளரும், தெல்லிப்பழை ஸ்ரீதுர்க்காதேவி தேவஸ்தானத் தலைவருமான செஞ்சொற்செல்வர் கலாநிதி ஆறு. திருமுருகன் ‘அருட்செல்வர்’ எனும் விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டுள்ளார்....

Climathon Jaffna நிகழ்வின் ஊடக அறிக்கை

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள இளையோர் அணிதிரளும் பெருநிகழ்வு “கிளைமத்தோன் யாழ்ப்பாணம் 2019” ஒக்டோபர் 24, 25 ,26 ஆம் திகதிகளில் உலகம் முழுவதும் காலநிலை மாற்றத்திற்கான தீர்வுகளை வலியுறுத்தி நூற்றைம்பதுக்கும் மேற்பட்ட நகரங்களில் இளையோர் அணிதிரள உள்ளார்கள். தென்னாசியாவில் டாக்கா, கராச்சி, ஐதரபாத், மும்பை போன்ற பெருநகரங்களின் வரிசையில் யாழ்ப்பாணமும் கிளைமத்தோனில் இணைகிறது. இலங்கையில் இருந்து...

யாழில் நான்கு நாட்கள் விவசாயக் கண்காட்சி!

யாழ்ப்பாணம், திருநெல்வேலியில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையம் மற்றும் விவசாய ஆராய்ச்சி நிலையம் என்பன இணைந்த வளாகத்தில் இன்று முதல் எதிர்வரும் வெள்ளி வரையிலான காலப்பகுதியில் விவசாயக் கண்காட்சி இடம்பெறவுள்ளது. ‘காலநிலை மாற்றத்தை எதிர்கொண்டு நஞ்சற்ற உணவு உற்பத்தியில் தன்னிறைவு நோக்கி’ என்னும் தொனிப்பொருளில் இந்தக் கண்காட்சி இடம்பெறவுள்ளது. வடமாகாண விவசாய அமைச்சின் வழிகாட்டலின்...

“நெருப்பில் குளித்த நினைவலையா பத்தாண்டுகள்” கவிதைத் தொகுப்பு வெளியீடு!!

மண்ணின் வளங்களைக் காப்பாற்றுகின்ற மாணவர்கள் போராளிகளுக்கு நிகரான பசுமைக் காவலர்கள் – பொ. ஐங்கரநேசன

மண்ணின் எல்லைகளைக் காப்பாற்றப் போராடிய மறவர்களை விடுதலைப் போராளிகள் என்று கொண்டாடுகின்றோம். அதேபோன்றுதான் மண்ணின் வளங்களைக் காப்பாற்றுகின்ற மாணவர்களும் போற்றப்படவேண்டியவர்கள். இவர்கள் விடுதலைப் போராளிகளுக்கு நிகரான பசுமைக் காவலர்கள் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவரும் முன்னாள் விவசாய அமைச்சருமான பொ. ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். சிறுப்பிட்டி அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலை மாணவர்களால் உற்பத்தி செய்யப்பட்ட...
Loading posts...

All posts loaded

No more posts