- Tuesday
- October 13th, 2026
2027 ஆம் கல்வி ஆண்டுக்காக நாட்டிலுள்ள 15 லட்சம் பாடசாலை மாணவர்களுக்குத் தலா 6,000 ரூபாய் வீதம் பாடசாலை உபகரணக் கொடுப்பனவு வழங்குவதற்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது இதற்கமைய, ‘அஸ்வெசும’ நலன்புரித் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ள குடும்பங்களைச் சேர்ந்த 10 லட்சம் பாடசாலை மாணவர்களுக்கான நிதி, நேரடியாக அவர்களின் வங்கி கணக்குகளில் வைப்பு செய்யப்படவுள்ளது. மேலும், கல்வி,...
இந்த ஆண்டின் முதல் ஒன்பது மாதங்களில் சிறுவர்களுக்கு எதிரான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பாக 364 முறைப்பாடுகள் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை (NCPA) தெரிவித்துள்ளது. அதே காலப்பகுதியில் கடுமையான பாலியல் துஷ்பிரயோகம் தொடர்பான 114 முறைப்பாடுகளும் தங்களுக்குக் கிடைத்துள்ளதாக அந்த அதிகாரசபை மேலும் குறிப்பிட்டுள்ளது. சிறுவர் துஷ்பிரயோகம் மற்றும் சிறுவர்கள் தொடர்பான ஏனைய...
வங்காள விரிகுடாவின் தென்கிழக்குப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை தாழமுக்கம் உருவாகக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.இதனால், இன்று முதல் அடுத்த சில நாட்களுக்கு நாட்டின் பல பகுதிகளிலும், நாட்டைச் சூழவுள்ள ஆழ்கடல் மற்றும் ஆழமற்ற கடற்பகுதிகளிலும் கடுமையான மழை பெய்யலாமென எதிர்வுகூறப்பட்டுள்ளது. இதற்கமைய, மத்திய, சப்ரகமுவ, ஊவா மற்றும் தென் மாகாணங்களின் சில இடங்களில் 100 முதல்...
வெலிக்கடை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த வைத்தியசாலையின் இருதய நோய் சிகிச்சைப் பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைவினால் கொழும்பிலுள்ள நவலோக வைத்தியசாலையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த சில நாட்களாக மஹிந்த ராஜபக்ஷ பல்வேறு வைத்தியப் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்ட நிலையில், இருதய நோய் நிலைமை தீவீரமடைந்துள்ளதால், அவர் தற்போது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், இன்று ஷிரந்தி ராஜபக்ஷ மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்...
சவூதி அரேபியாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த அனோஜன் சிவராசா சார்பாகத் தயாரிக்கப்பட்ட மேல்முறையீடு அந்நாட்டின் உயர்நீதிமன்றத்தில் நேற்றையதினம் (11) சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இலங்கை மற்றும் சவூதி சட்டத்தரணிகள் குழுவின் கூட்டு முயற்சியின் பலனாக இந்த மேன்முறையீடு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மேன்முறையீட்டைத் தயாரிப்பதற்காக இலங்கை விசேட சட்டத்தரணிகள் குழுவிற்கும் சவூதி சட்டத்தரணிகளுக்கும் இடையே பல...
தென்கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக நாளை (13) குறைந்த அழுத்தப் பிரதேசம் ஒன்று உருவாகக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இது தொடர்பான எதிர்கால முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் குறித்து கடலில் பயணம் செய்வோரும் கடற்றொழிலாளர்ளும் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். இன்று (12) காலை 05.30 க்கு வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, நாட்டைச்...
விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச, இன்று (09) தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வதற்கு பதிலாக தேசிய கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். கண் பாதிப்பு காரணமாக நேற்று (08) சிறைச்சாலை மருத்துவ நிபுணரிடம் அவர் பரிந்துரைக்கப்பட்டிருந்தார். இதன்படி, மருத்துவப் பரிந்துரையின் அடிப்படையில் தேசிய...
நாட்டில் மனநல வைத்தியர்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மனநல விசேட வைத்திய நிபுணர் பேராசிரியர் சதுரி சுரவீர தெரிவித்துள்ளார். சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்தார். மனநல வைத்தியர்களுக்கு வெளிநாடுகளில் அதிக தேவை உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இவ்வாறு வைத்தியர்கள் வெளிநாடுகளுக்குச் செல்வது,...
ஐந்து மாவட்டச் செயலகங்கள் மூலம் புதிய மோட்டார் சைக்கிள்களைப் பதிவு செய்யும் வசதியை மீண்டும் ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மோட்டார் வாகனப் போக்குவரத்துத் திணைக்களம் எடுத்துள்ளது. எதிர்வரும் 19ஆம் திகதி முதல் இந்த நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளதாக திணைக்களம் குறிப்பிட்டுள்ளது. அதன்படி, யாழ்ப்பாணம், ஹம்பாந்தோட்டை, அநுராதபுரம், குருநாகல் மற்றும் கம்பஹா ஆகிய மாவட்டச் செயலகங்களில் பதிவுப் பணிகள் மேற்கொள்ளப்படும்....
தனியார் துறையினருக்கும் மெட்ரோ பஸ் சேவையில் இணைந்துகொள்வதற்கான வாய்ப்பு வழங்கப்படும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதேஇதனைக் குறிப்பிட்ட அமைச்சர் ஒரு வருட காலப்பகுதிக்குள் இந்த வாய்ப்பு வழங்கப்படும் என சுட்டிக்காட்டினார். மெட்ரோ பஸ்களுக்குச் சேதம் விளைவிக்கும் நபர்களுக்கு எதிராகப் பொதுச் சொத்துக்களுக்குச்...
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும் பயணங்களை எளிதாக்கவும், சாதாரண கடவுச்சீட்டு வைத்திருப்பவர்களுக்கான விசா விலக்கு ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகள் ஒப்புக்கொண்டுள்ளன. முன்மொழியப்பட்ட ஒப்பந்தத்தின் கீழ், செல்லுபடியாகும் சாதாரண கடவுச்சீட்டுகளைக் கொண்ட இரு நாடுகளின் குடிமக்களும், சுற்றுலா நோக்கங்களுக்காக முன்கூட்டியே விசா பெறாமலேயே அந்தந்த நாடுகளுக்குள் நுழையவும்,...
ருஹுனு பல்கலைக்கழகத்தின் விவசாய பீடத்தின் இறுதி ஆண்டு மாணவர்களைத் தவிர ஏனைய மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளை இணையவழி முறையில் முன்னெடுப்பதற்கு பல்கலைக்கழக நிர்வாகம் தீர்மானித்துள்ளது. வேகமாக பரவிவரும் வைரஸ் காய்ச்சல் நிலைமை காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கடந்த இரண்டு வார காலப்பகுதியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களில் சுமார் 30 பேர்...
தாங்கள் எரிபொருளைக் கொள்முதல் செய்யும் விலையை விடக் குறைந்த விலைக்கு விற்பனை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதால், எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்த நேரிடும் என நாட்டில் எரிபொருள் விநியோகத்தில் ஈடுபடும் லங்கா ஐஓசி, சினோபெக் மற்றும் ஆர்.எம். பார்க் ஆகிய நிறுவனங்கள் அண்மையில் எரிபொருள் நிரப்புநிலைய உரிமையாளர்களுக்கு அறிவித்திருந்தன. இது குறித்துக் கலந்துரையாடுவதற்காகப் பெற்றோலிய விநியோகஸ்தர்கள்...
சிங்கப்பூரில் இருந்து நேற்றிரவு நாடு திரும்பிய முன்னாள் முதற்பெண்மணி ஷிராந்தி ராஜபக்ஷவுக்கு நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது. இதற்மைய எதிர்வரும் 13 ஆம் திகதி நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அவர் அழைக்கப்பட்டுள்ளார்.
மேல் மாகாண வடக்கு குற்றப் புலனாய்வுப் பிரிவினால் மேற்கொள்ளப்படும் விசாரணை ஒன்றுடன் தொடர்புடைய மூவரைத் தேடிக் கண்டுபிடித்துக் கைது செய்வதற்குப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். குறித்த மூவரும் தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேறி தற்போது தலைமறைவாக இருப்பதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் ஹிமாலி செவ்வந்தி ராஜபக்ஷ பத்திரன, தாரிந்து ஜீவந்த ராஜபக்ஷ பத்திரன மற்றும் விராஜ்...
பொதுச் சுகாதாரத் துறையின் முக்கிய பங்காளிகளான குடும்ப நல மருத்துவ உத்தியோகத்தர்களை மேலும் வலுப்படுத்தும் நடவடிக்கையாக, எதிர்வரும் டிசம்பர் மாதத்தில் 2,900 பேருக்கு மோட்டார் சைக்கிள்கள் வழங்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். புதிய குடும்ப நல மருத்துவ உத்தியோகத்தர்கள் 1,056 பேருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு நேற்று (04) அலரி மாளிகையில்...
லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் (Litro Gas Lanka Limited), தனது வீட்டுப் பாவனை எல்.பி. எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் நடப்பு ஒக்டோபர் மாதம் முழுவதும் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அறிவித்துள்ளது. இதற்கமைய, ஒக்டோபர் மாதத்திலும் தற்போதைய விற்பனை விலைகளே தொடர்ந்து நடைமுறையிலிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, விற்பனை செய்யப்படும் லிட்ரோ எரிவாயு...
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள சிவராசா அனோஜனை விடுவிப்பதற்காக அந்நாட்டு உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்வது தொடர்பான விடயங்களை ஆராய்வதற்காக இலங்கை பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் செவ்வாய்க்கிழமை சவூதி அரேபியாவுக்குப் புறப்படவுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி பைஸர் முஸ்தபா, ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் குமாரப்பெரும மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரி உள்ளிட்ட 5 பேர் கொண்ட...
இலங்கையின் தென்மேற்கு கடற்பரப்பில் இருந்து சுமார் 15 மைல் தொலைவில், ஈரானுடன் தொடர்புடைய சுமார் 20 எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் தற்போது சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடுமையான அமெரிக்காவின் கட்டுப்பாடுகள் மற்றும் கடற்போக்குவரத்துத் தடைகள் காரணமாக இக்கப்பல்கள் பெரும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதோடு, சில கப்பல்களில் உணவு, எரிபொருள் மற்றும் குடிநீர் தட்டுப்பாடும் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. சீனாவுக்கு கச்சா...
Loading posts...
All posts loaded
No more posts
