நாளை முதல் கொட்டப்போகிறது மழை!

இலங்கைக்குத் தென்கிழக்காக வங்காள விரிகுடா கடற்பரப்புகளில் தற்போது நிலை கொண்டுள்ள குறைந்த அழுத்தப் பிரதேசம், தற்போது மட்டக்களப்பிலிருந்து 700 கிலோமீற்றர் தொலைவில் நிலைகொண்டுள்ளது.

இந்தத் தொகுதியானது அடுத்த சில மணித்தியாலங்களில் ஒரு தாழமுக்க மண்டலமாக வலுவடைந்து, நாளை (08) இலங்கையின் கிழக்குக் கரையோரத்தை அண்மிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் எதிர்வுகூறல் பிரிவின் பணிப்பாளர் மெரில் மெந்திஸ் தெரிவித்தார்.

இந்தத் தொகுதியின் தாக்கம் காரணமாக நாட்டில் மழையுடனான வானிலை மற்றும் காற்றின் வேகம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

விசேடமாக வடக்கு, வடமத்திய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், எதிர்வரும் சில நாட்களில் வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்படும் வானிலை முன்னறிவிப்புகள் தொடர்பில் அவதானமாக இருக்குமாறு மெரில் மெந்திஸ் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

Related Posts