பல வாள்வெட்டு வன்முறைகள், கொள்ளை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் தேடப்பட்டு வந்த ஆவா நீதி மன்றில் சரண்!!!

யாழ்ப்பாணத்தில் பல வாள்வெட்டு வன்முறைகள், கொள்ளை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களில் கடந்த 2 வருடங்களாக தேடப்பட்டு வந்த “ஆவா” என காவற்துறையினரால் விழிக்கப்படும் இளைஞர் மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் நேற்று சரணடைந்தார். சந்தேகநபரை வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.... Read more »

யாழில் கொலை செய்த குற்றத்துக்காக இருவருக்கு தூக்குத் தண்டனை!!

யாழ்ப்பாணம் காரைநகரில் குடும்பத்தலைவர் ஒருவரைக் கொலை செய்த குற்றத்துக்கு இருவருக்கு தூக்குத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் தீர்ப்பளித்தார். 2008ஆம் ஆண்டு ஜனவரி 3ஆம் திகதி காரைநகர் பாலாவோடையில் முருகேசு கணேசன் கூரிய ஆயுதங்களால் தாக்கிக் கொலை செய்யப்பட்டார்.... Read more »

யாழில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய முதியவர்!!

யாழ்ப்பாண மானிப்பாயில் 14 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 62 வயது முதியவர் மானிப்பாய் பொலிஸாறால் கைது செய்யப்பட்டுள்ளார். முத்துதம்பி வீதி மானிப்பாய் பகுதியில் வசிக்கும் 62 வயதுடைய நாகலிங்கம் யோகராசா என்பவரே கைது செய்யப்பட்டுள்ளார். தனது வீட்டிற்கு தனது நண்பனின் மகளான 14 வயது... Read more »

லஞ்ச ஊழல் குற்றச்சாட்டில் கைது செய்ய்ப்பட்ட அதிபருக்கு விளக்க மறியல் நீடிப்பு

கடந்த மாதம் 20ம் திகதி மாணவர் அனுமதிக்கு பெற்றோரிடம் லஞ்சம் பெறும்போது  லஞ்ச ஊழல் ஆணைக்குழுவால் நேரடியாக  கைது செய்யப்பட்ட அதிபர் நிமலன் பருத்தித்துறை நீதிமன்றினால்  இன்று ஒக்டோபர் 3ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். இது தொடர்பிலான வழக்கு இன்று கொழும்பு மஜிஸ்ரேட்... Read more »

கோப்பாய் பொலிஸாருக்கு எதிராக முறைப்பாடு!!

கொக்குவில் பகுதியில் வீடொன்றிற்குள் புகுந்த தாக்கியவர்கள் தொடர்பாக கோப்பாய் பொலிஸார் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை எனச் சுட்டிக்காட்டியும் தமக்கான நீதியைப் பெற்றுத் தருமாறும் கோரி முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர். இதற்கமைய யாழிலுள்ள மனித உரிமைகள் ஆணைக்குழு அலுவலகத்தில் நேற்று (திங்கட்கிழமை) அவர்கள் இந்த முறைப்பாட்டை... Read more »

வாள்வெட்டுக்கு இலக்கான நபர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழப்பு!

யாழில் வாள்வெட்டுக் கும்பலின் தாக்குதலுக்கு இலக்கான இரும்பக உரிமையாளர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சம்பவம் இடம்பெற்று 3 வாரங்களாக சிகிச்சைப் பெற்று வந்த அவர் நேற்று (திங்கட்கிழமை) இரவு உயிரிழந்தார். கோண்டாவில் உப்புமடச் சந்தியில் அமைந்துள்ள லக்சுமி இரும்பகத்தின் உரிமையாளர் கந்தையா கேதீஸ்வரன் (வயது... Read more »

சுன்னாகம் பிரதேச சபையின் பெண் உறுப்பினரின் வீடு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல்

வலி.தெற்கு பிரதேச சபையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர் ரவிக்குமார் யோகாதேவி வீடு மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சம்பவத்தில் வீட்டு முற்றத்திலிருந்து உரையாடிக் கொண்டிருந்த பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவர்களது உறவினர்கள் தெய்வாதீனமாக... Read more »

ஶ்ரீகஜன் தப்பியமை தொடர்பில் அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவு

புங்குடுதீவுமாணவி வித்தியா கொலை வழக்கின் முக்கிய சூத்திரதாரியான சுவிஸ்குமாரை விடுவித்து உதவிய குற்றச்சாட்டு வழக்கில் இரண்டாவது சந்தேகநபரான முன்னாள் உதவி காவல்துறை பரிசோதகர் சிறிகஜன் தலைமறைவாகியுள்ளமை தொடர்பில் உரிய விசாரணைகளை முன்னெடுத்து வரும் ஒக்டோபர் 18ஆம் திகதிக்கு முன்னர் மன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப்... Read more »

இலஞ்சம் வாங்கிய யாழ்.இந்து கல்லூரி அதிபருக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் வாங்கிய யாழ்.இந்து கல்லூரி அதிபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட அவரை வரும் ஒக்டோபர் 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் ஒக்டோபர் 3ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிவான்... Read more »

யாழ்.இந்து கல்லூரி அதிபர் கைது!!

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் சதா நிமலன், கையூட்டுப் பெற்ற குற்றச்சாட்டில் இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய புலன் விசாரணைகளை முன்னெடுக்கும் ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டார். கையூட்டுப் பெற்றுக்கொண்ட போதிய ஆதாரங்களுடன் இன்று நண்பகல் அவர் கைது செய்யப்பட்டார் என்று ஆணைக்குழுவால் வடக்கு மாகாண... Read more »

யாழில் திறக்கப்பட்ட பிரமிட் நிறுவனத்தை மூட யாழ்.மாநகர சபையில் பிரேரணை

குளோபல் லைவ் ஸடரைல் லங்கா நிறுவனத்தினை உடனடியாக மூடுமாறும் அவ்வாறு மூடமறுக்கும் பட்சத்தில் தங்கள் மீது சட்ட நவடிக்கை எடுக்கப்படும் என்றும் குறித்த நிறுவனத்தற்கு அடுத்த மூன்று வேலை நாட்களுக்குள் கடிதம் அனுப்பப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை... Read more »

பொலிஸ் உத்தியோகத்தர் மீது தாக்குதல்: சந்தேகநபருக்கு எதிராக நடவடிக்கை!!!

யாழ்ப்பாணம் நீதிமன்றக் கட்டடத்துக்குள் வைத்து பொலிஸ் உத்தியோகத்தரைத் தாக்கிய திருட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபருக்கு மீது மற்றொரு வழக்கைத் தாக்கல் செய்ய கோப்பாய் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்காக நீதிமன்றக் கட்டடத்துக்கு அழைத்து வரப்பட்ட சந்தேகநபர், பொலிஸ் உத்தியோகத்தரின் கன்னத்தில்... Read more »

யாழில் பாடசாலை அதிபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை – கல்வி அமைச்சு

யாழிலுள்ள பிரபல பாடசாலைகளின் அதிபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை என வடக்கு மாகாண கல்வி அமைச்சின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். பாடசாலைகளில் மாணவர்களை இணைப்பதற்கு பணம் கோரினார்கள் எனும் குற்றச்சாட்டில் பாடசாலை அதிபர்கள் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்கள் என நேற்றைய தினம் மாலை... Read more »

இணுவில் கொள்ளை ; இராணுவப் பணியாளருக்கும் பெண்ணுக்கும் விளக்கமறியல்

இணுவிலில் வீடு புகுந்து கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இராணுவ உத்தியோகத்தரையும் குடும்பப் பெண்ணையும் வரும் செப்ரெம்பர் 30ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், கொள்ளையிடப்பட்ட நகைகள், மடி கணினி, 4 தொலைபேசிகள் உள்ளிட்ட சான்றுப்பொருட்களையும்... Read more »

இணுவிலில் கொள்ளை – இராணுவத்தில் பணியாற்றுபவர் கைது!!

இணுவில் பகுதியில் இடம்பெற்ற கொள்ளை சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில், இராணுவத்தில் கடமையாற்றும் ஒருவரை, கைது செய்துள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். புன்னாளைக்கட்டுவான் பகுதியை சேர்ந்த இராணுவத்தில் பணியாற்றுபவரையே பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 1 மணியளவில் முகங்களை மறைத்து, கூரிய ஆயுதங்களுடன்... Read more »

நீதிமன்றில் தற்கொலைக்கு முயன்ற சந்தேகநபர்!!

2 கிராம் 400 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் தொடர்ச்சியாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் ஒருவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்ற மறியல் கூடத்துக்குள் வைத்து தனது கழுத்தை பிளேட்டால் கீறி உயிர் துறப்புக்கு முயற்சித்தார். இந்தச் சம்பவம் இன்று முற்பகல் 10... Read more »

கோண்டாவிலில் வீடு புகுந்து வாள்வெட்டுக் கும்பல் அடாவடி!!

கோண்டாவில் அன்னங்கை பகுதியில் உள்ள வீடொன்றினுள் புகுந்த வன்முறைக் கும்பல் அங்கிருந்தவர்களை அச்சுறுத்தும் வகையில் வீட்டில் இருந்த பொருள்களை அடித்து நொறுக்கியதுடன் வீட்டின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியையும் அடித்து உடைத்து சேதமாக்கி விட்டு தப்பி சென்றுள்ளது. கோண்டாவில் உடும்பிராய் மேற்கு வீட்டிற்குள்... Read more »

கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் இருவர் மீது வாள்வெட்டு

கொக்குவில் பிடாரி அம்மன் கோவிலடியில் நின்ற இளைஞர் இருவர் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சம்பவத்தில் படுகாயமடைந்த இருவரும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளனர். 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பலே இந்தத் தாக்குதலை நடத்தியதாக விசாரணையில் தெரிவிக்கப்பட்டது. இந்தச்... Read more »

இளம் பெண்ணின் அலைபேசியை அபகரித்துச் சென்றவர் சிக்கினார்!!

யாழ்ப்பாணம் நகரில் துவிச்சக்கர வண்டியில் பயணித்த இளம் பெண்ணிடமிருந்து பெறுமதி வாய்ந்த அலைபேசியுடன் கைப்பையைப் பறித்துச் சென்ற நபர் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளையிடப்பட்ட அலைபேசி மற்றும் கைப்பை என்பன அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. இந்த வழிப்பறிக் கொள்ளைச் சம்பவம் நேற்று முன்தினம்... Read more »

கிளிநொச்சியில் ATM இயந்திரத்தை உடைத்து திருட முயற்சித்த 6 போ் கைது!

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் உள்ள வங்கி இயந்திரத்தில் களவாட முற்பட்ட 6 பேர் நேற்றைய தினம் பொலிசாரால் கைது செய்யப்பட்டனர். முழங்காவில் பகுதியில் நாச்சிக்குடா சந்தியில் இலங்கை வங்கிக்கு சொந்தமான தன்னியக்க பணப்பரிமாற்ற இயந்திரத்தை உடைத்து களவாட முயன்றனர் என்ற சந்தேகத்தின் பேரிலேயே குறித்த... Read more »