நெடுந்தீவுக் கடற்பரப்பில் 12 இந்திய மீனவர்கள் கைது!!

நெடுந்தீவு கடற்பரப்புக்குள் எல்லைதாண்டி சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்டிருந்த 12 இந்திய மீனவர்கள் இரண்டு படகுகளுடன் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இன்று (19)அதிகாலை குறித்த 12 இந்திய மீனவர்கள் கைதுசெய்யப்பட்ட நிலையில் முற்பகல் யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் கடற்படையினரால் கையளிக்கப்பட்ட நிலையில் ஊர்காவற்றுறை நீதிமன்றில் குறித்த நபர்களையும் படகுகளையும் முன்னிலைப்படுத்தவுள்ளதாக யாழ் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள அதிகாரி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Posts