இலங்கையிலேயே தொழிற்படையில் பங்காற்றுவோர் வீதம் குறைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம்!

இலங்கை முழுவதும் மேற்கொண்ட தொழிற்படை தொடர்பான 2011 - ஆய்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதன்படி இலங்கையில் தொழிற்படையில் பங்காற்றுவோர் வீதம் குறைந்த மாவட்டமாக யாழ்ப்பாணம் (37.1%) காணப்படுவதுடன், பால் நிலை அடிப்படையில், தொழிற்படையில் பெண்களின் பங்களிப்பு குறைந்த மாவட்டமாகவும் யாழ்ப்பாணமே (16.7%) விளங்குகின்றது. (more…)

என்.ஆர்.எவ்.சி. மற்றும் ஆர்.எவ்.சி. கணக்கு விதிகளில் தளர்வு

வெளிநாட்டு நாணயங்களை சம்பாதிப்பவர்கள் வதியாதோர் வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கும் (என்.ஆர்.எவ்.சி) வதிவோர் வெளிநாட்டு நாணயக் கணக்கிற்கும் (ஆர்.எவ்.சி) இடையில் பணப்பரிமாற்றம் செய்வதற்கு அனுமதிக்கப்படுவார்கள் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.இவ்விதி திங்கட்கிழமை(9) முதல் அமுலுக்கு வருகிறது. (more…)
Ad Widget

வெளிநாட்டு நாணயங்களில் வர்த்தகம் மேற்கொள்ள சுப்பர்மார்கெட்டுகள் அனுமதிக்கப்படும்

சுப்பர்மார்கெட்டுகள், குத்தகை மற்றும் நிதி நிறுவனங்கள் உட்பட தனியார் நிறுவனங்கள் வெளிநாட்டு நாணயங்களில் கொடுக்கல் வாங்கல்களில் ஈடுபடுவதற்கு அரசாங்கம் அனுமதியளிக்கவுள்ளதாக மத்திய வங்கியின் நாணயமாற்றுக் கட்டுப்பாட்டு அதிகாரியான பி.எச்.ஓ. சந்திரவன்ஸ நேற்று கூறினார்.உள்ளூரில் மாற்றப்படும் ஸ்ரேலிங் பவுண், அமெரிக்க டொலர் உட்பட வெளிநாட்டு நாணயங்கள் மத்திய வங்கியை அடைவதை உறுதிப்படுத்துவதே இத்திட்டத்தின் நோக்கமாகும். 61 வெளிநாட்டு...

யாழில் மாம்பழ சீஷன்!

யாழ்.குடாநாட்டில் தற்போது தென்னிலங்கையிலிருந்து அப்பிள், அன்னாசி, தோடம்பழம், மங்குஸ்தான், றம்புட்டான் போன்ற பழங்கள் யாழ்ப்பாணத்திற்கு வருகின்றபோதும் யாழ்ப்பாண மாம்பழத்திற்கான மவுசு இன்னமும் குறையவில்லை.கறுத்தக் கொழும்பான், விளாட்டு, அம்பலவி ,வெள்ளைக்கொழும்பான், செம்பாட்டான் போன்ற மாம்பழ வகைகள் தற்போது திருநெல்வேலிச் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது. (more…)

சிறீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் ADSL புரோட்பாண்ட் இணைய சேவைகளில் தடங்கல்!

சிறீலங்கா ரெலிகொம் நிறுவனத்தின் ADSL புரோட்பாண்ட் இணைய சேவைகளில் நாடுமுழுவதிலும் கடந்த வாரத்தில் இருந்து தடங்கல்கள் ஏற்பட்டுள்ளது. அவர்களால் தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட இணைப்பு வகைகளில் ஒரு சில தவிர்ந்த ஏனையவற்றில் இந்தத்தடங்கல் ஏற்பட்டிருப்பதாக தெரியவருகிறது. கணக்குகளுக்கான கடவுச்சொல் பயனாளர் சொல் ஆகியவற்றினை பரிசோதிக்கும் சேவரில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக இந்தத்தடங்கல் ஏற்பட்டுள்ளதாக ரெலிகொம் இன் தொழில்நுட்பப்பிரிவில்...

சண்டெல் நிறுவனத்தை வாங்குகிறது டயலொக்

இலங்கையின் முன்னிலை செல்லிடத் தொலைபேசி நிறுவனமான டயலொக் அக்ஸியா நிறுவனம், சிடிஎம்ஏ தொலைபேசி நிறுவனமான சண்டெல் பிரைவேட் லிமிடெட்டின் 100 சதவீத பங்குகளை கொள்வனவு செய்வதற்கான பேரங்களை பூர்த்திசெய்துள்ளதாக தகவலறிந்த வட்டாரங்கள் தமிழ் மிரரின் சகோதர ஆங்கில இணையத்தளமான டெய்லி மிரருக்குத் தெரிவித்தன. (more…)