அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வோருக்கு எச்சரிக்கை!

அரிசிக்கு அதிகபட்ச சில்லறை விலை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்க சோதனைகள் நடத்தப்படும் என்று நுகர்வோர் விவகார அதிகாரசபை (CAA) தெரிவித்துள்ளது.

வர்த்தமானி அறிவிப்பின் மூலம் அரிசிக்கு கட்டுப்பாட்டு விலை விதிக்கப்பட்டுள்ளதால், சம்பந்தப்பட்ட விலையை விட அதிக விலைக்கு அரிசியை விற்பனை செய்வது சட்டத்தால் தடைசெய்யப்பட்டுள்ளது என்றும் CAA மேலும் கூறியது.

அதன்படி, அதிக விலைக்கு அரிசி விற்பனை செய்பவர்களை அடையாளம் காண சோதனைகளை நடத்தப்போவதாகவும், அத்தகைய மீறுபவர்கள் குறித்து நுகர்வோர் CAA-விலும் முறைப்பாடு அளிக்கலாம் என்றும் அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.

அலுவலக நேரங்களில் 1977 என்ற துரத இலக்கம் மூலமாகவும் பொதுமக்கள் முறைப்பாடுகளை தெரிவிக்கலாம் என்று அதிகாரசபை தெரிவித்துள்ளது.

அதிகபட்ச விலை

வெள்ளை மற்றும் சிவப்பு பச்சை அரிசி – ஒரு கிலோ 220 ரூபா
வெள்ளை மற்றும் சிவப்பு நாட்டரிசி – ஒரு கிலோ 230 ரூபா
வேகவைத்த வெள்ளை மற்றும் சிவப்பு சம்பா – ஒரு கிலோ 240 ரூபா
கீரி சம்பா – ஒரு கிலோ 260 ரூபா

Related Posts