யாழ். சர்வதேச கிரிக்கெட் மைதான நிர்மாண பணிகள் நிறுத்தம்!!

மண்டைதீவு பகுதியில் நடைபெற்று வந்த சர்வதேச கிரிக்கெட் மைதான மற்றும் விளையாட்டு வளாகம் நிர்மாணப் பணிகளை மத்திய சுற்றாடல் அதிகார சபை உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது.

48 ஏக்கர் பகுதியை உள்ளடக்கிய இந்த திட்டம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதிக்குள் வரவில்லை என்றாலும், சுற்றுச்சூழல் அனுமதியின்றி நிலத்தை சமப்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டதாக மைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் முறையான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கையை சமர்ப்பிக்கும் வரை எந்தவொரு பணியையும் தொடர முடியாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த உத்தரவு 1980 ஆம் ஆண்டு தேசிய சுற்றுச்சூழல் சட்டத்தின் விதிகளின் அடிப்படையில் அமல்படுத்தப்பட்டுள்ளது.

Related Posts