யாழில் ஒரே ஆண்டில் 612 பேர் தற்கொலை முயற்சி!- அதிர்ச்சி அறிக்கை

யாழ்ப்பாணத்தில் கடந்த 2019 ஆம் ஆண்டில் மாத்திரம் 612 பேர் தற்கொலைக்கு முயன்றுள்ளதாகவும் அவர்களில் 105 பேர் உயிாிழந்துள்ளதாகவும் யாழ்.போதனா வைத்தியசாலையில் தரவுகளில் தெரியவந்துள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் தற்கொலைக்கு முயன்றவர்களின் எண்ணிக்கையானது கடந்த நான்கு ஆண்டுகளைவிட மிகவும் உயர்வடைந்து காணப்படுவதாகவும் எனினும் உயிரிழந்தவர்களின்... Read more »

தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்பினை வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பம்!!

தொழில்வாய்ப்பற்ற பட்டதாரிகள் மற்றும் டிப்ளோமா பட்டங்களை பெற்றுள்ளவர்களுக்கு தொழில் வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாட்டுக்காக பணி செய்யும் கலாசாரமொன்றை ஏற்படுத்தும் வகையில் இளம் தலைமுறையினரை பேண்தகு அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு நம்பகமாகவும் தர்க்கபூர்வமான அடிப்படையிலும் பங்களிக்கச் செய்வது இதன் நோக்கமாகும். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின்... Read more »

அதிபர் தாக்கியதில் மூன்று சிறுவர்கள் வைத்தியசாலையில்!!

வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியிலுள்ள பாடசாலையில் மாணவர்கள் மூவரை அதிபர் கடுமையாயான தாக்கியுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று முன்தினம் நடைபெற்றுள்ளது. அதிபரின் தாக்குதலால் கடுமையான காயங்களுக்கு உள்ளன லக்ஸ்மன், லக்சன் ஆகிய இரட்டையர் உள்பட 3 சிறுவர்கள் மந்திகை ஆதார வைத்திய சாலையில் சேர்க்கப்பட்டனர்.... Read more »

யாழ். பல்கலையில் கட்டுமீறியது பாலியல் துன்புறுத்தல்கள்!!!; நேரில் வருவதாக உயர் கல்வி அமைச்சர் அறிவிப்பு!!!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் அளவுக்கதிகமாக பகிடி வதை இடம்பெறுகின்றமை மற்றும் தொலைபேசி மூலமான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்து பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கும், உயர் கல்வி அமைச்சுக்கும் கிடைத்த முறைப்பாடுகளையடுத்து, பகிடி வதைக்கெதிராக கடும் நடவடிக்கைகளை எடுக்குமாறு அமைச்சு மட்டத்திலும், வடக்கு மாகாண ஆளுநர் மட்டத்திலும் இருந்து... Read more »

பல்கலை பகிடிவதைக்கு எதிராக உடன் நடவடிக்கை எடுக்க ஆளுநர் அதிகாரிகளுக்குப் பணிப்பு!!

பகிடிவதைக்கு எதிராக காத்திரமான நடவடிக்கைகள் மேற்கொள்வதற்கு வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இதுதொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவு அனுப்பிவைத்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; இலங்கையின் கல்விப் புலத்தில் உயர் கல்வியில் சித்தியடையும் மாணவர்கள் பல்கலைக்கழகக் கல்வியைத்... Read more »

தமிழ் பொலிஸ் சார்ஜன்ட் அடித்துக்கொலை!!

மட்டக்களப்பு வவுணதீவு பகுதியில் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் அடிகாயங்களுடன் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இன்று காலை வவுணதீவில் உள்ள அரசி ஆலைக்கு அருகில் பொலிஸ் உத்தியோகத்தரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் தமிழ் பொலிஸ் சார்ஜன்டான தம்பாப்பிள்ளை சிவராசா (வயது-55)... Read more »

காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்திக்கு 50 ஏக்கர் காணி!!

காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்கு 50 ஏக்கர் நிலப்ரப்பினை இலங்கை துறைமுக அதிகார சபைக்கு பெற்றுக்கொடுக்கமாறு துறைமுகம் மற்றும் கடல் நடவடிக்கைகள் அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. காங்கேசன்துறை துறைமுகத்தை அபிவிருத்தி செய்வதற்காக துறைமுகத்துக்கு அருகில் சுமார் 50 ஏக்கர் காணியை... Read more »

அரசியல்வாதி ஒருவரின் ஆதரவாளர்களால் மாணவன் மீது தாக்குதல்

கிளிநொச்சியில் உள்ள பாடசாலை ஒன்றில் உயர்தரப் பிரிவு இறுதியாண்டில் கல்வி கற்கும் மாணவன் ஒருவருக்கு தன்னை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரின் ஆதரவாளர் என அடையாளப் படுத்திக் கொண்ட திருநகர் பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவன் தாக்குதல் மேற்கொண்டதில் குறித்த மாணவன் படுகாயமடைந்து கிளிநொச்சி... Read more »

மாங்குளத்தில் முன்னாள் போராளி சுட்டுக்கொலை!!!

முல்லைத்தீவு மாங்குளத்தில் குடும்பத்தலைவர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். புனர்வாழ்வுபெற்ற முன்னாள் போராளியே சுட்டுக்கொல்லப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டார் என்று பொலிஸார் தெரிவித்தனர். காணிப் பிரச்சினை காரணமாக அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என்று ஆரம்ப விசாரணைகளிலிருந்து தெரியவருகிறது என்று மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் இன்று வியாழக்கிழமை... Read more »

சாரதி அனுமதி பத்திரத்திற்கான மருத்துவ அறிக்கையினை அரச வைத்தியசாலைகளில் பெற்றுக்கொள்ளலாம்!

இலகு ரக வாகனங்களுக்கான சாரதி அனுமதிப்பத்திரங்களை பெற்றுக் கொள்வதற்கு தேவையான மருத்துவ அறிக்கையினை அரச வைத்தியசாலைகளினூடாக வழங்க அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது. அத்துடன் இந்த மருத்துவ அறிக்கையினை வௌியிடக் கூடிய வகையில் அரச வைத்தியசாலைகளின் வசதிகளை மேம்படுத்தவும இதன் போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. தேசிய போக்குவரத்து... Read more »

பேஸ்புக் தகவலை நம்பி உடலை கட்டுமஸ்தாக வைத்திருக்க இலைச்சாறு குடித்தவர் பலி!

பேஸ்புக்கில் பகிரப்பட்ட தகவலை நம்பி, உடலை கட்டுக்கோப்பாக வைத்திருக்க சில இலைகளை அரைத்து குடித்த இளைஞன் உயிரிழந்துள்ளார். இச் சம்பவம் கம்பஹா மொரகொட பகுதியில் இடம்பெற்றது. சாற்றை அருந்தியவர் உடனடியாக மயக்கமடைந்தார். அவரை உறவினர்கள் கம்பஹா வைத்தியசாலைக்கு கொண்டு சென்று, சிகிச்சையளித்தபோதும், சிகிச்சை பலனின்றி... Read more »

கிராம அலுவலரின் சான்றிதழ்களுக்கு பிரதேச செயலரின் ஒப்பம் தேவையில்லை!!

கிராம சேவையாளரினால் வழங்கப்படும் சான்றிதழ்களுக்கு பிரதேச செயலரின் ஒப்பம் பெறும் நடைமுறை இரத்துச் செய்யப்படுவதாக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை வரும் பெப்ரவரி 10ஆம் திகதி திங்கட்கிழமை தொடக்கம் நடைமுறைக்கு வரும் என்று அமைச்சு குறிப்பிட்டுள்ளது. கிராம சேவையாளரால் வழங்கப்படும்... Read more »

கோரோனா வைரஸ் தொற்று சந்தேகத்தில் பெண் ஒருவருக்கு யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை!

கோரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் வவுனியாவைச் சேர்ந்த பெண் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று புதன்கிழமை சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளார். கோரோனா வைரஸ் தொற்றுக்கான பெரியளவு நோய்தாக்கங்கள் இல்லை அவருக்கு இல்லை எனவும் அவருடைய குருதி மாதிரி சோதனை... Read more »

தபால் ஊழியர்களுக்கு மின்சார மோட்டார் சைக்கிள் வழங்க நடவடிக்கை

தபால் திணைக்களம் கடிதங்களை விநியோகிப்பதற்காக தபால் உழியர்களுக்கு மின்சாரத்தில் இயங்கக்கூடிய மோட்டார் சைக்கிள்களை வழங்கவுள்ளது. இதற்காக அமைச்சரவை ஆவணம் அமைச்சரவைக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தபால் சேவையை செயற்றிறன் மிக்கதாக முன்னெடுக்க முடியும் என்று தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன்... Read more »

பட்டதாரிகளுக்கு எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் அரச நிறுவனங்களில் பயற்சி!

வேலைவாய்ப்பற்ற பட்டதாரிகளுக்கு எதிர்வரும் மார்ச் முதலாம் திகதி முதல் அரச நிறுவனங்களில் பயற்சி வழங்குவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. இதற்கான அமைச்சரவைப் பத்திரத்திற்கு நேற்று(புதன்கிழமை) அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதற்கமைய ஒரு வருடம் பயிற்சிகள் வழங்கப்படவுள்ளதுடன் அதன்பின்னர் அரச சேவைகளில் நிரந்த நியமனங்கள் வழங்கப்படவுள்ளன.... Read more »

கொரோனா வைரஸ்: வடக்கு மக்கள் அச்சமடையத் தேவையில்லை!

சீனாவை மையமாகக் கொண்டு பரவிவரும் கொரோனா வைரஸ் தொற்றுக் குறித்து, வட மாகாண மக்கள் அச்சமடையத் தேவையில்லை என யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரான சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இதேவேளை, யாழ். போதனா வைத்தியசாலையில் கொரோனா வைரஸிற்கு உள்ளானவர்களுக்கான பிரத்யேக சிகிச்சைப் பிரிவொன்று அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா... Read more »

வவுனியாவில் இரு பிள்ளைகளின் தாயை காணவில்லை!!

வவுனியா பூந்தோட்டம் பகுதியினை சேர்ந்த 47 வயதுடைய இரு பிள்ளைகளின் தாயான மகேஸ்வரி செந்தில்செல்வன் என்பவரை காணவில்லை என தெரிவித்து அவரது கணவன் வவுனியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றினை மேற்கொண்டுள்ளார். வவுனியா மகாறம்பைக்குளம் பகுதியில் வசித்து வரும் குறித்த பெண் கடந்த 29.01.2020 அன்று... Read more »

கொரோனா வைரஸ் தொற்று – இலங்கையர்கள் மூவர் அங்கொடையில் அனுமதி

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர் என்ற சந்தேகத்தில், சீனாவிலிருந்து நாடு திரும்பிய மூன்று இலங்கையர்கள் அங்கொடை தொற்று நோய் தடுப்பு (ஐ.டி.எச்) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மூவரும் நேற்று (செவ்வாய்க்கிழமை) அங்கொடை வைத்தியசாலைக்கு சிகிச்சைகளுக்காக வந்த நிலையில், இவ்வாறு சந்தேகத்தின் பேரில் அனமதிக்கப்பட்டு, சிகிச்சைப்... Read more »

யாழ்.பல்கலை. துணைவேந்தர் பதவிக்கு மீள விண்ணப்பங்கோரத் திட்டம்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பதவிக்காக விண்ணப்பித்தவர்களின் விண்ணப்பங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டு, புதிதாகக் கோரப்படும் விண்ணப்பங்களின் அடிப்படையில் கொழும்பைச் சேர்ந்த ஒருவரைத் துணைவேந்தராகக் கொண்டுவருவதற்கான முயற்சிகள் இடம்பெறுவதாக அறியவருகிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குப் புதிதாக நியமிக்கப்பட்ட பேரவை உறுப்பினர்களைப் பயன்படுத்தி துணைவேந்தர் பதவிக்கு முன்னைய பேரவைக்... Read more »

இளைஞர் பாராளுமன்றத்துக்கான தேர்தல் எதிர்வரும் 15 ஆம் திகதி!!

இளைஞர் பாராளுமன்றத்துக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் நாடு தழுவிய ரீதியில் எதிர்வரும் 15 ஆம் திகதி நடைபெறவுள்ளது. பிரதேச செயலாளர் மட்டத்தில் இத் தேர்தல் நடைபெறும். 18 – 27 வயது வரையறைக்கு உட்பட்ட கல்வி பொது தராதர சாதாரண தர பரீட்சையில்... Read more »