ஞானசாரருக்கு எதிராக மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டும் – சி.வி.கே

நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் தேரரின் உடல் தகனம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞானசார தேரரருக்கு எதிராக மீண்டும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டுமென வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் வலியுறுத்தியுள்ளார். நீராவியடிப்பிள்ளையார் ஆலய வளாகத்துக்குட்பட்ட பகுதியில் நீதிமன்ற... Read more »

பௌத்த மத கடும்போக்கு தீவிரவாதம் இன்னொரு இன சுத்திகரிப்பிற்கு தயாராகிறது!!!

சிங்கள பௌத்த பேரினவாதத்தின் அதியுச்ச இனத்துவசத்தின் இன்னொரு பரிணாமம், மியன்மார் பாணியிலான பெளத்த மத தீவிரவாதம் சிறிலங்காவிற்கு புதியது அல்ல. கடந்த காலங்களில் மென்போக்கு அணுகுமுறையை கடைப்பிடித்த பௌத்த தீவிரவாதம் தற்போது கடும்போக்கு அணுகுமுறையை கையிலெடுத்திருப்பது என்பது சிறிலங்காவின் பெரும்பான்மை சனநாயக விழுமியங்களை முற்று... Read more »

நீதிமன்றை அவமதித்தவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும்வரை பணிப் புறக்கணிப்பு: சட்டத்தரணி சுகாஷ்

நீதிமன்ற தீர்ப்பை அவமதிக்கும் வகையில் செயற்பட்ட ஞானசார தேரர் உட்பட அனைவருக்கு எதிராகவும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படவுள்ளபோதும் சந்தேக நபர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை மேற்கொள்ளும்வரை பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவிருப்பதாக வடமாகாண சட்டத்தரணிகள் சங்கம் தீர்மானித்துள்ளது என சட்டத்தரணி சுகாஷ் தெரிவித்துள்ளார். நீராவியடிப்பிள்ளையார் ஆலய... Read more »

ஆலய வளாகத்தில் தேரரின் உடலை எரித்தமை குறித்து நாடாளுமன்றில் கேள்வியெழுப்புவேன் – டக்ளஸ்

நீராவியடிப் பிள்ளையார் ஆலய வளாகத்தில் தேரரின் பூதவுடல் தகனம் செய்யப்பட்டமை குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வியெழுப்பவுள்ளதாக ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் கே.என். டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள கட்சி அலுவலகத்தில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேலேயே அவர் இவ்வாறு... Read more »

மழையுடனான வானிலை 25ஆம் திகதி இரவு வரை தொடரும்!!

நாட்டில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலை செப்டம்பர் 25 ஆம் திகதி இரவு வரை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது. மேல், தென், சப்ரகமுவமற்றும் மத்திய மாகாணங்களில்... Read more »

வயல் கிணற்றிலிருந்து ஒருவர் சடலமாக மீட்பு

சாவகச்சேரி சரசாலைப் பகுதியில் உள்ள வயல் கிணற்றிலிருந்து இன்று காலை ஒருவர் சடலமாக மீட்கப்பட்டார். அதே இடத்தைச் சேர்ந்த 55 வயதுடைய வல்லிபுரம் திருச்செல்வம் என்ற நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவராவார். பணி நிமித்தம் நேற்றுக் காலை சென்ற அந்த நபர் இரவு வரை... Read more »

நீராவியடியில் தேரரின் உடலை தகனம் செய்த விவகாரம் – போராட்டத்திற்கு அழைப்பு

நீராவியடி பிள்ளையார் ஆலயத்தின் தீர்த்தக் கேணிக்கு அருகில், நீதிமன்ற உத்தரவையும் மீறி பௌத்த மதகுருவின் உடல் தகனம் செய்யப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முல்லைத்தீவில் போராட்டமொன்று நடத்தப்படவுள்ளது. தமிழர் மரபுரிமை பேரவை, நீராவியடி பிள்ளையார் ஆலய நிர்வாகம், பிரதேச மக்கள் இணைந்து இந்த போராட்டத்திற்கு அழைப்பு... Read more »

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 17 அமைப்புகள் பணிப்புறக்கணிப்பு!

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் மற்றும் அரச நிர்வாக அதிகாரிகளின் ஒன்றியம் உள்ளிட்ட 17 அமைப்புகள் நாடுதழுவிய பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளன. அதற்கமைய இன்று (செவ்வாய்க்கிழமை) நள்ளிரவு முதல் குறித்த அமைப்புகள் பணிப்புறக்கணிப்பில் ஈடுபடவுள்ள. சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து இந்த... Read more »

தமிழினத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையின் வெளிப்பாடே செம்மலை அத்துமீறல் – தமிழ் மக்கள் பேரவை

தமிழினத்தின் மீதான திட்டமிட்ட அடக்குமுறையின் வெளிப்பாடாகவே, நீதிமன்ற உத்தரவை பொலிஸார் துணையுடன் மீறி செம்மலையில் பௌத்த தேரரின் உடலை தகனம் செய்தமையென தமிழ் மக்கள் பேரவை தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவத்தை வண்மையாக கண்டிப்பதாக தெரிவித்து அந்த பேரவை அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில்... Read more »

சட்டத்தரணி சுகாஸ் மீது சிங்கள காடையா்கள் தாக்குதல்!!

நீதிமன்ற தீா்ப்பினை மீறி நீராவியடி பிள்ளையாா் ஆலய சூழலில் பிக்குவின் உடலம் தகனம் செய்யப்படுவதை கண்டித்த சட்டத்தரணி சுகாஸ் மீது சிங்கள காடையா்கள் தாக்குதல் நடாத்தியிருக்கின்றனா். இதனை கண்டித்து முல்லைத்தீவு சட்டத்தரணிகள் பகீஸ்காிப்பில் இறங்கினா். நீதிமன்ற தீா்ப்பினை மீறி பொலிஸாா் முன்னிலையில் பிக்குவின் உடலை... Read more »

வேலையற்ற பட்டதாரிகள் யாழ்ப்பாணத்தில் கவனயீர்ப்பு

வடக்கு மாகாண வேலையற்ற பட்டதாரிகள் இன்று கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். யாழ்ப்பாண மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்படுகிறது. வேலையற்ற பட்டதாரிகள் தமது கோரிக்கைகள் அடங்கிய மனுவை யாழ்ப்பாண மாவட்ட மேலதிக அரச அதிபரிடம் கையளித்தனர். இன மத பேதம் இல்லாமல் நல்லாச்சியை நடாத்தும்... Read more »

மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் மேலும் அதிகரிக்கும்!!

நாட்டின் தென்மேற்குப் பகுதியில் தற்போது காணப்படும் மழையுடனான வானிலையில் அடுத்த சில நாட்களில் (செப்டம்பர் 22ஆம் திகதியிலிருந்து 24ஆம் திகதி வரை) மேலும் அதிகரிப்பு ஏற்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் வடமேல் மாகாணங்களில் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன்... Read more »

அரச துறை 28 தொழிற்சங்கங்கள் சுகவீன லீவு- பொதுச் சேவை பாதிப்பு

அரச துறையின் 28 தொழிற்சங்கங்கள் சுகவீன விடுப்புப் போராட்டத்தை இன்று முன்னெடுத்துள்ளன. இதனால் கடவுச்சீட்டு, தேசிய அடையாள அட்டை ஒருநாள் சேவை உள்பட பொதுச் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அரச முகாமைத்துவ உதவியாளர் சங்கம், அபிவிருத்தி உத்தியோகத்தர் சங்கள் உள்பட 28... Read more »

வடக்கில் அதிகரித்துள்ள வீதி விபத்துக்கள்: வீதி ஒழுங்கு பாதுகாப்பு வாரம் பிரகடனம்

வட மாகாணத்தில் அதிகரித்துச் செல்லும் வீதி விபத்துக்களை கட்டுப்படுத்துவதற்காக வீதிப்பாதுகாப்பு வாரம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 7ஆம் திகதி தொடக்கம் 13 ஆம் திகதி வரை இந்த வீதிப் பாதுகாப்பு வாரம் அனுஷ்டிக்கப்படவுள்ளது. இப்பாதுகாப்பு வாரத்தில் பொதுமக்களுக்கு அறிவூட்டும் வேலைத்திட்டங்கள் பல மேற்கொள்ளப்படவுள்ளதோடு,... Read more »

தமிழ் மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும் – தமிழ் மக்கள் பேரவை ஆராய்வு

எதிர்வரும் நவம்பர் மாதம் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை தமிழ் மக்கள் எவ்வாறு கையாளவேண்டும் என்பது குறித்து தமிழ் மக்கள் பேரவையின் மத்திய குழு கூடி ஆராய்ந்துள்ளது. தேர்தல் தொடர்பாக பொதுக் கலந்துரையாடலை நடத்துவதற்கான ஏற்பாடுகள் தொடர்பாக ஆராயும் பொருட்டு நேற்று... Read more »

சுகயீன விடுமுறை போராட்டத்திற்கு தயாராகும் ஆசிரியர்கள்!!

ஆசிரியர் அதிபர் போராட்டத்த்திற்கு மார்ச் 13 நடவடிக்கைக்கு இதுவரை தீர்வு இல்லை. எனவே 6 கோரிக்கைகளை முன்வைத்து எதிர்வரும் 26, 27 ஆகிய இரு தினங்கள் ஆசிரியர்கள் அதிபர்கள் சுகயீன விடுமுறை தொழில் சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் 26 ஆம் திகதி கொழும்பு கோட்... Read more »

இராணுவத்தளபதி மேஐர் ஜெனரல் சவேந்திர சில்வா யாழின் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம்!

இராணுவத் தளபதி மேஐர் ஜெனரல் சவேந்திர சில்வா யாழ்ப்பாணத்திற்கு நேற்று(வெள்ளிக்கிழமை) விஐயம் செய்திருந்தார். இந்த விஐயத்தின் போது வரலாற்று பிரசித்தி பெற்ற நல்லூர்க்கந்தன் ஆலயத்தில் அவர் விசேட பூஜைவழிபாடுகளிலும் ஈடுபட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து நல்லை ஆதீனத்திற்கும் சென்ற அவர், ஆதீன குருமுதல்வர் ஞானதேசிக பராமாச்சாரிய... Read more »

போலி நகைகளை அடகு வைத்து மோசடி – வங்கி ஊழியர்கள் உட்பட நால்வருக்கு விளக்கமறியல்!

தனியார் வங்கி ஒன்றின் சங்கானை கிளையில் போலி நகைகளை அடகு வைத்து 10 மில்லியன் (ஒரு கோடி) ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் வங்கியின் உத்தியோகத்தர் ஒருவர் மற்றும் வாடிக்கையாளர்கள் மூவர் உள்ளிட்ட நால்வர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அத்துடன், தலைமறைவாகியுள்ள முகாமையாளரை கைது... Read more »

வடக்கில் இராணுவத்தினர் வசமுள்ள காணிகளை விடுவிக்குமாறு இராணுவத்தளபதியிடம் வலியுறுத்தல்!

இராணுவத்தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வாவிற்கும், வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. ஆளுநர் செயலகத்தில் நேற்று (வெள்ளிக்கிழமை) இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. போருக்கு பின்னரான வடமாகாணத்தில் இராணுவத்தினர் மேற்கொள்ளும் பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான நடவடிக்கைககள் குறித்து இராணுவ தளபதி,... Read more »

இலஞ்சம் வாங்கிய யாழ்.இந்து கல்லூரி அதிபருக்கு விளக்கமறியல்!

இலஞ்சம் வாங்கிய யாழ்.இந்து கல்லூரி அதிபருக்கு விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்ட அவரை வரும் ஒக்டோபர் 3ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன் ஒக்டோபர் 3ஆம் திகதி கொழும்பு பிரதான நீதிவான்... Read more »