அனைத்து மாகாணங்களின் ஆளுநர்களும் பதவி விலகல்!!

அனைத்து மாகாணங்களின் ஆளுநர்களும் தமது பதவி விலகல் அறிவிப்பை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவுக்கு அனுப்பிவைத்துள்ளனர் என்று ஜனாதிபதி செயலகம் தெரிவித்தது. நாட்டின் 7ஆவது நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ச பதவியேற்று நிலையில் ஆளுநர்கள் தமது பதவி விலகலை அவருக்கு அனுப்பி வைத்துள்ளனர். ஜனாதிபதி... Read more »

ஜனாதிபதியான மறுநாளே அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ள கோட்டா!

7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக பதவியேற்றுள்ள ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சில அதிரடி முடிவுகளை அறிவித்துள்ளார். குறிப்பாக தான் பயணம் செய்யும்போது வீதிகளை மூட வேண்டாம் என்றும் தனது பாதுகாப்பிற்கு இரு வாகனங்கள் இருந்தால் மட்டும் போதும் என்றும் ஜனாதிபதி முடிவு செய்துள்ளார்.... Read more »

பாணின் விலை அதிகரிப்பு

பாணின் விலை 5 ரூபாயால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது. அதற்கமைய 450 கிராம் பாணின் விலை நள்ளிரவு முதல் 5 ரூபாயினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை பேக்கரி உரிமையாளர்கள் சங்கம் இதனை தெரிவித்துள்ளது. Read more »

வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலைக்கு கண்டியிலிருந்தே கடிதம் வந்துள்ளது!!

யாழ்ப்பாணம் வேம்படி பெண்கள் உயர்தரப் பாடசாலையின் முன்னாள் அதிபரின் பெயரிடப்பட்டு குண்டுப் புரளியை ஏற்படுத்தும் அநாமதேயக் கடிதம் தொடர்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் பி அறிக்கையைப் பொலிஸார் தாக்கல் செய்தனர். “சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெறுகின்றன. கண்டியிலிருந்தே அந்தக் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது” என்று பொலிஸார்... Read more »

உடுவிலில் டெங்கு நோய்த் தொற்றால் பாடசாலை மாணவி சாவு!!

டெங்கு நோய்த் தொற்றுக் காரணமாக பாடசாலை மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார். டெங்கு நோய்த் தொற்றுக்கு உள்ளான மாணவி தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் கடந்த 3 நாள்களாக சிகிச்சை பெற்று வந்தநிலையில் நேற்று காலை சிகிச்சை பயனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். சுன்னாகம் உடுவிலைச் சேர்ந்த... Read more »

சீ.வீ.கே. சிவஞானம் ஜனாதிபதிக்கு கடிதம்!!

துருவமயப்பட்டுள்ள சிங்கள மற்றும் தமிழ் சமூகங்களையும் மிகத்துரிதமாக ஒன்றிணைக்கும் சவாலுக்குத் தாங்கள் முகம் கொடுக்கின்றீர்கள். இந்த தேசிய அவசியத் தேவையின் முயற்சியில் தாங்கள் வெற்றியடைவீர்கள் என நம்புகின்றேன். என வடமாகாண அவைத்தலைவர் சீ.வீ.கே. சிவஞானம் ஜனாதிபதிக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் வடமாகாண அவைத்தலைவர்... Read more »

ஜனாதிபதி தமிழ் மக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பளித்து செயற்படுவார் – இரா.சம்பந்தன்

இலங்கையின் ஏழாவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ தமிழ் மக்களின் விருப்பு வெறுப்புகளுக்கு மதிப்பளித்து செயற்படுவார் என நம்புவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. கடந்த ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்து கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்... Read more »

ஜனாதிபதியாக கடமைகளை பொறுப்பேற்றார் கோட்டா!!

இலங்கையின் ஜனாதிபதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.இலங்கை ஜனநாயக சோசலிஷக் குடியரசின் 7ஆவது நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ நேற்று பதவிப் பிரமாணம் செய்து கொண்ட நிலையில் இன்று (செவ்வாய்க்கிழமை) தனது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டார். இதற்கமைய இன்று முற்பகல் ஜனாதிபதி செயலாளர்... Read more »

அமைச்சு பதவியை ஏற்பதில்லை – டக்ளஸ்

கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அமைக்கப்படவுள்ள அமைச்சரவையில் பங்கேற்பதில்லையென ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) தலைவர் டக்ளஸ் தேவானந்தா தீர்மானித்துள்ளார். ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் கோட்டாபய ராஜபக்சவிற்கு தமிழ் மக்கள் வாக்களிக்காததையடுத்து இந்த முடிவை எடுத்துள்ளார். அவரை அமைச்சு பதவியேற்கும்படி, ராஜபக்சக்கள் தரப்பிலிருந்த தொடர்ந்து... Read more »

சஜித்தை தோற்கடித்தது ரணிலும் சுமந்திரனும் மேற்கொண்ட சதியே!! 200 கோடி பரிமாற்றமும் செய்யப்பட்டது!!

ஐனாதிபதித் தேர்தலில் புதிய ஐனநாயக முன்னணியின் ஐனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவை ஆதரிப்பிதாக தமிழரசுக் கட்சியினர் அவசர அவசரமாக எடுத்த நிலைப்பாட்டிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் நரித் தந்திரமே காரணமென்று குறிப்பிட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம், ரணிலிற்கு பிரதமர் பதவி இல்லை என்றவுடன்... Read more »

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 33 வேட்பாளர்கள் கட்டுப்பணத்தை இழந்தனர்

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்ட 35 வேட்பாளர்களில் 33 வேட்பாளர்கள் கட்டுப்பணத்தை இழந்துள்ளனரென தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இந்த தேர்தலில் போட்டியிட்ட கோட்டாபய ராஜபக்ஷ (52.25%) மற்றும் சஜித் பிரேமதாச (41.99%) ஆகியோர் மட்டுமே 5% க்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றனர். எனவே ஏனைய 33... Read more »

கேகாலையில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல்!!

கோகாலையில் சிறுபான்மை மக்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது, இந்த சம்பம் நேற்று (திங்கட்கிழமை) இரவு கேகாலை மாவட்டம் யட்டியன்தோட்டை கனேபொல தோட்டத்தில் இடம்பெற்றுள்ளது. ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களித்தீர்கள் என கேட்டு, சிறுபான்மை மக்களாகிய மலையக பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்கள் மீதே இவ்வாறு... Read more »

எனது படங்களை காட்சிப்படுத்த வேண்டாம் ! அதிகாரபூர்வ இலச்சினையை வெளியிட்டார் ஜனாதிபதி கோத்தாபய

அரச அலுவலகங்களில் எனது படங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்றும் தனது அதிகாரபூர்வ இலச்சினையை பயன்படுத்துமாறும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இன்று பதியேற்றுக்கொண்ட கோத்தாபய ராஜபக்ஷ தனது அதிகாரபூர்வ இலச்சினையை வெளியிட்டுள்ளார். இதன்போதே அவர் அரச... Read more »

கமால் குணரத்ன பாதுகாப்பு செயலாளராக நியமனம்!!

பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். இன்று மாலை அவர் உத்தியோகப்பூர்வமாக பதவியேற்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை சோஷலிச குடியரசின் 7 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ நியமிக்கப்பட்டுள்ள நிலையில் முதலாவதாக இந்த... Read more »

“உண்மையான இலங்கையர்களாக எம்முடன் இணைந்து பயணியுங்கள்” சிறுபான்மையினருக்கு ஜனாதிபதி அழைப்பு!!

நாட்டின் நிறைவேற்று அதிகாரமுடைய 7ஆவது ஜனாதிபதியாக நந்தசேன கோத்தாபய ராஜபக்ச பதவியேற்றுக் கொண்டார். அனுராதபுர ருவன்வெலி மகா தூபி முன்பாக, பிரதம நீதியரசர் ஜெயந்த ஜெயசூர்ய முன்னிலையில் கோத்தாபய ராஜபக்ச சத்தியப்பிரமாணம் செய்து பதவியேற்றார். இந்த பதவியேற்று சுபவேளையில் முற்பகல் 11.45 மணிக்கு ஆரம்பமானது.... Read more »

சந்தர்ப்பவாத தமிழ் அரசியல்வாதிகளினால் நீங்கள் அடைந்த நன்மைகள் எதுவும் இல்லை – நாமல்

சந்தர்ப்பவாத தமிழ் அரசியல்வாதிகளினால் நீங்கள் அடைந்த நன்மைகள் எதுவும் இல்லை என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பற்றியும், பொதுஜன பெரமுன பற்றியும் அச்சமோ, ஐயமோ, கவலையோ கொள்ளத் தேவையில்லை என நாமல் ராஜபக்ஷ கூறினார்.... Read more »

அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து பரிசீலனை செய்யவுள்ளதாக சுமந்திரன் அறிவிப்பு!!

எதிர்காலத்தில் அரசில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்வது குறித்து பரிசீலனை செய்யவுள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தனியார் தொலைக்காட்சியொன்றின் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இரவு இடம்பெற்ற நிகழ்ச்சியில் அக்கட்சியின் ஊடகப் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் இதனை தெரிவித்திருந்தார். கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணைந்து அமைச்சு பதவிகளை பெற்று,... Read more »

யாழ்ப்பாணத்திலிருந்து முல்லைத்தீவில் தாக்குதல் நடத்தச் சென்ற ஆவா குழுவைச் சேர்ந்த 14 பேர் கைது!!

முல்லைத்தீவில் வாள்வெட்டு வன்முறையில் ஈடுபடுவதற்காக யாழ்ப்பாணத்திலிருந்து சென்ற ஆவா குழுவைச் சேர்ந்த 14 பேர் தருமபுரம் மற்றும் புதுக்குடியிருப்பில் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் தாக்குதல் நடத்தச் சென்ற இருவர் சுதந்திரபுரத்தில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டு பொலிஸில் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் இருவரும்... Read more »

கோத்தாபய பொறுப்புக்களை உணர்ந்து சிறந்த ஆட்சிக்கு வித்திடுவார் – சி.வி.விக்கினேஸ்வரன்

பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற்று வந்த ஒரு சிங்களத் தலைவர் என்ற முறையில் தமிழ் மக்களின் நீண்டகால அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினைகளைத் துணிச்சலான முறையில் அணுகி அவர்களுக்கு சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தீர்வு ஒன்றைப் பெற்றுத் தருவதன் ஊடாக இந் நாட்டின்... Read more »

புதிய ஜனாதிபதியாக கோட்டா அறிவிப்பு – வர்த்தமானி வெளியீடு

இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசின் 7ஆவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ஷ தெரிவு செய்யப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு விசேட வர்த்தமானி மூலம் அறிவித்துள்ளது. இலங்கை சோசலிஷ குடியரசின் 7ஆவது ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான 8ஆவது ஜனாதிபதி தேர்தல் நேற்று முன்தினம் இடம்பெற்றது. இந்த தேர்தலில் பொதுஜன... Read more »