கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் போராளி

விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இருந்து, பின்னர் இராணுவத்தினரால் புனர்வாழ்வு செய்யப்பட்ட ரமேஷ் என்பவர் நேற்றிரவு (21) கொழும்பில் துப்பாக்கியுடன் கைது செய்யப்பட்டுள்ளார். கிரிபத்கொடை புதிய வீதியில் வைத்து பேலியகொடை பொலிசார் சந்தேகத்தின் பேரில் அவரைக் கைது செய்துள்ளனர். அவரிடமிருந்து டி-56 ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டுள்ளது. குற்றச் செயல் ஒன்றை மேற்கொள்ளும் நோக்குடன் அவர் இந்தத்...

யாழில் ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்திவந்த இளைஞர் உயிரிழப்பு!

யாழ்ப்பாணத்தில் ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்த இளைஞர் கடந்த சனிக்கிழமை (19) உயிரிழந்தார். யாழ்ப்பாணம் - சிவலிங்கப் புளியடியைச் சேர்ந்த 26 வயது இளைஞரே உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக மேலும் தெரியவருகையில், இவர் கடந்த 5 வருடங்களாக ஊசி மூலம் போதைப்பொருளை உடலில் செலுத்தி வந்துள்ளார். இந்நிலையில் சனிக்கிழமை மயக்கமடைந்த நிலையில் வீட்டில்...
Ad Widget

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் நிர்வாகத் தெரிவும் கலந்துரையாடலும்

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் நிர்வாகத் தெரிவும் கலந்துரையாடலும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. வலிந்து காணப்பட்ட உறவுகள் தமது உறவுகளை தேடும் போராட்டத்தினை தொடர்ந்து முன்னெடுப்பதை நோக்கமாகக் கொண்டு எட்டு மாவட்டங்களை சேர்ந்த காணாமல் ஆக்கப்பட்ட உறவுகள் தமது சங்கங்களின் தலைவர் செயலாளர் உள்ளிட்டோரை தெரிவு செய்தனர். இதன் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட சங்கத்தின் வடக்கு...

ஜெனிவா கூட்டத்திற்கு முன்னர் பாதிக்கப்பட்டோரின் கோரிக்கைகளை முன்வைத்து சர்வதேச அழுத்தத்தை ஏற்படுத்துவதே நோக்கம் – கஜேந்திரகுமார்

ஜெனிவா கூட்டத்திற்கு முன்னர் பாதிக்கப்பட்ட தரப்பினரின் கோரிக்கைகளை முன் வைப்பதன் ஊடாக கடுமையான சர்வதேச அழுத்தத்தை கொடுக்கும் செயல் வடிவத்தை ஏற்படுத்துவதே எமது நோக்கம் என தமிழ் தேசிய மக்கள் முன்னனணியின் தலைவர் , நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் ஞாயிற்றுக்கிழமை (20) இடம்பெற்ற கலந்துரையாடல் தொடர்பில்...

தங்கள் நிலங்களிற்கு திரும்ப முடியாத நிலையில் தமிழ்மக்களை அரசாங்கம் வைத்திருப்பது பெரும் குற்றம்!!

போர் முடிந்து பதினாறு வருடங்களான பின்னரும் அதிஉயர் பாதுகாப்பு வலயம் என்ற போலியான சட்டவிரோதமான கட்டமைப்புகளை தொடர்ந்தும் தக்கவைத்து பாதிக்கப்பட்ட சாதாரண தமிழ் மக்கள் தங்களின் சொந்த காணி நிலைக்கு திரும்பி போகமுடியாத நிலைக்கு இந்த அரசும் இதற்கு முதல் இருந்த அரசுகளும் , வைத்திருப்பது உண்மையில் ஏற்றுக்கொள்ள முடியாத பாரிய குற்றம் என தமிழ்...

யாழில் சிறைச்சாலை உத்தியோகஸ்தரின் வீட்டுக்கு தீ வைப்பு!

யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகஸ்தரின் வீட்டுக்கு வன்முறை கும்பல் ஒன்று தீ வைத்து விட்டு தப்பி சென்றுள்ளது. யாழ்ப்பாண சிறைச்சாலையில் கடமையாற்றும் உத்தியோகஸ்தரின் கொழும்புத்துறையில் உள்ள வீட்டுக்குள் இன்று செவ்வாய்க்கிழமை (15) அத்துமீறி நுழைந்த வன்முறை கும்பல் ஒன்று , வீட்டார் உறக்கத்தில் இருந்த வேளை வீட்டின் முன் பகுதிக்கு பெற்றோல் ஊற்றி தீ வைத்து விட்டு...

நாடு முழுவதும் செப்டெம்பர் முதல் இணையவழியில் அபராதம் செலுத்தும் வசதி!!

எதிர்வரும் செப்டெம்பர் மாதம் முதல் நாடு முழுவதும் இணைவழியில் நேரடியாக அபராதம் செலுத்தும் வசதி செயல்படுத்தப்படும் என்று ICTA பணிப்பாளர் சபை உறுப்பினர் ஹர்ஷ புரசிங்க தெரிவித்தார். அபராதம் செலுத்துவது தொடர்பாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

ஒவ்வொரு சம்பவத்தையும் சரியாக விசாரணை செய்யவேண்டும்!!

1948 ஆம் ஆண்டிலிருந்து தமிழ் தேசத்திற்கு நடைபெற்ற முழு அநியாயமும் இனப்படுகொலையும் செயற்பாடுகளையும் ஒரு சந்தர்ப்பத்திலே விசாரிக்கப்பட்டால் மட்டுமே உண்மையான யதார்த்தத்தை விளங்கிக் கொள்ளலாம் என பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழில் இடம்பெற்ற ஊடகசந்திப்பில் கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், 2021 ஜனவரி மாதம் அனைத்து தமிழ் தேசிய...

மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் சுகாதார சேவைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் – சுகாதார அமைச்சர்

மிகக் குறுகிய காலத்தில் வட மாகாணத்தின் சுகாதார சேவைகளை வலுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். யாழ். போதனா வைத்தியசாலையின் சிகிச்சை சேவைகள் தொடர்பில் முழுமையான ஆய்வொன்றை நடத்தி எதிர்வரும் காலங்களில் அவை நெறிப்படுத்தப்பட்ட வேண்டும் என சுகாதார அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ வலியுறுத்தியுள்ளார். வட மாகாணத்தில் அமைந்துள்ள பிரதான வைத்தியசாலையான யாழ்.போதனா...

பொதுமக்களுக்கு முக்கிய அறிவித்தல் – பொலிஸ் ஊடகப் பிரிவு!!

நாட்டில் இடம்பெறும் பல்வேறு குற்றச் செயல்கள் தொடர்பில் முறைப்பாடு அளிப்பதற்கு பொதுமக்கள், பொலிஸ் ஊடகப் பிரிவுடன் தொடர்பு கொள்ள பல எளிமையான வழிமுறைகள் காணப்படுவதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. பொலிஸ் ஊடகப் பிரிவுடன் தொடர்பு கொள்ள எளிமையான வழிமுறைகள்; பொலிஸ் ஊடகப் பேச்சாளர் - 071 8591882 பொலிஸ் ஊடகப் பிரிவின் பொறுப்பதிகாரி -...

முன்னாள் அரசியல் கைதி அரவிந்தன் பிணையில் விடுவிப்பு!

முன்னாள் அரசியல் கைதியும், போராளிகள் நலன்புரிச் சங்கத்தின் வவுனியா மாவட்டத் தலைவருமான ஆனந்தவர்மன் எனப்படும் அரவிந்தன், கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், நேற்று (07) பிணையில் விடுவிக்கப்பட்டார். 2024 மார்ச் மாதம், விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் முகநூலில் பதிவுகள் இட்டதாகக் கூறி அவர் கைது...

IMF ஆலோசனையுடன் சொத்து வரியை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டம்!

2027 ஆம் ஆண்டின் முதல் பாதியில் நாடு தழுவிய சொத்து வரி முறையை அறிமுகப்படுத்த இலங்கை தயாராகி வருவதாக சர்வதேச நாணய நிதியம் (IMF) வெளியிட்டுள்ள அண்மைய பணியாளர் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் பரந்த வருவாய் திரட்டல் உத்தியின் ஒரு பகுதியாக இருக்கும் இந்த முயற்சி, வரி சமத்துவத்தை அதிகரிக்கும் மற்றும் பொதுத்துறை நிதியுதவியை மேம்படுத்தும்...

ஐ.நா. உயர்ஸ்தானிகரின் நம்பகத்தன்மை சீர்குலையும்; அமைச்சர் விஜித்த ஹேரத்தின் கருத்துக்கு கஜேந்திரகுமார் எச்சரிக்கை

ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர்மாதக் கூட்டத்தொடர் அரசாங்கத்துக்கு சாதகமானதாக அமையும் என்ற அமைச்சர் விஜித்த ஹேரத்தின் கருத்தை உண்மையாக்கும் வகையில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் செயற்படுவாராயின், அது ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் மீது பாதிக்கப்பட்ட தரப்பினர் கொண்டிருக்கும் நம்பிக்கையை முற்றுமுழுதாக சீர்குலைக்கும் என தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், பாராளுமன்ற...

வாகன வருமான அனுமதிப் பத்திர விநியோகம் தொடர்பான அறிவிப்பு!

முக்கியமான தொழில்நுட்ப உள்கட்டமைப்பு சிக்கல் காரணமாக, ஆன்லைன் வாகன வருமான அனுமதிப் பத்திர (eRL) அமைப்பு எதிர்வரும் ஜூலை 9 ஆஃப்லைனில் இருக்கும் என்று தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனம் (ICTA) அறிவித்துள்ளது. ஜூலை 3 ஆம் திகதி தொடங்கிய இந்த இடையூறு, வாகன வருமான உரிமங்களை ஆன்லைனில் வழங்குதல் மற்றும் புதுப்பித்தல் ஆகியவற்றை...

அரச மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சைப்பெறும் நோயாளிகளுக்காக விசேட உணவு!!!

அரச மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்கு தரமான மற்றும் சுவையான உணவை வழங்குவதற்கான சிறப்பு திட்டமொன்றை ஆரம்பிப்பது தொடர்பில் சுகாதார மற்றும் ஊடக அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். நோயாளர்களுக்கான விசேட உணவு வேலைத்திட்டம் தொடர்பாக சுகாதார மற்றும் ஊடக அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ...

ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் காலமானார்!!

கிளிநொச்சியை சேர்ந்த ஊடகவியலாளர் நடராசா கிருஸ்ணகுமார் சுகயீனம் காரணமாக வியாழக்கிழமை (03) காலை உயிரிழந்துள்ளார். கிளிநொச்சியை சேர்ந்த நடராசா கிருஸ்ணகுமார் கடந்த 1999ஆம் ஆண்டு முதல் 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தம் வரையும் புலிகளின் குரல் வானொலி வர்த்தக சேவையான தமிழீழ வானொலி ஆகியவற்றின் அலுவலக செய்தியாளராகவும் நிகழ்சிகள் பலவற்றுக்கு குரல் வழங்குபவராகவும் பல்வேறு...

செம்மணியில் அடையாளம் காணப்பட்ட 38 எலும்பு தொகுதிகள்!!

செம்மணி மனிதப் புதைகுழியின் அகழ்வின்போது நேற்று (02) மொத்தமாக 38 எலும்பு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இதில் 34 மனித என்புத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன மேலும் 04 என்புத் தொகுதிகள் நேற்றைய தினம் மாத்திரம் மீட்டெடுக்கப்பட்டுள்ளன. மேலும் 04 என்பு தொகுதிகள் சிதைவடைந்த நிலையில் காணப்படுகின்றன அவற்றை மீட்பதற்கான நடவடிக்கைகள் யாழ்ப்பாண மாவட்ட நீதிமன்ற...

இன்று முதல் இலங்கையில் ஸ்டார்லிங்க் இணைய சேவை!!

இன்று முதல் ஸ்டார்லிங்க் (Starlink) இணைய சேவையை இலங்கையில் பெற்றுக்கொள்ளலாம் என ஸ்பேஸ் எக்ஸ் உரிமையாளர் இலோன் மாஸ்க் தெரிவித்துள்ளார். ஸ்டார்லிங்க் இணைய சேவை அதிவேகமாக செய்படக்கூடியது. இலங்கையில் உள்ளவர்கள் இந்த சேவையை பெற்றுக் கொள்வதற்கான கட்டணமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்டார்லிங்க் என்பது எலான் மஸ்க்கின் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தால் வழங்கப்படும் ஒரு செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவையாகும்....

வாட்ஸ்அப் மோசடி குறித்து பொலிஸார் அறிவிப்பு!

தனிப்பட்ட வாட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்யும் நபர்களால் மேற்கொள்ளப்படும் நிதி மோசடி குறித்து இலங்கை பொலிஸார் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர். வாட்ஸ்அப் கணக்குகள் திருடப்பட்டவர்கள் தங்கள் கணக்குகளை மீட்டெடுக்க support@whatsapp.com என்ற மின்னஞ்சல் முகவரியைத் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் குறித்து பொதுமக்கள் https://telligp.police.lk வழியாக காவல்துறை சைபர் குற்றப்பிரிவிலும் முறைப்பாடு அளிக்கலாம்.

ஒன்லைன் முறையில் அபராதம் செலுத்த அமைச்சரவை அனுமதி

நாடு முழுவதும் ஆன்லைன் போக்குவரத்து அபராதம் செலுத்தும் முறையை செயல்படுத்த அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். அதிவேக நெடுஞ்சாலைகளில் பயணிக்கும் வாகனங்களுக்கு கட்டாய சீட் பெல்ட் பயன்பாடு குறித்த பொது விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டத்தைத் தொடர்ந்து, கொட்டாவை அதிவேக நெடுஞ்சாலை நுழைவாயிலுக்கு அருகில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே...
Loading posts...

All posts loaded

No more posts