முல்லைத்தீவு ஓய்வு பெற்ற அதிபருக்கு எதிரான முறைப்பாடு – பிரதமர் செயலகம் பணிப்புரை!

முல்லைத்தீவு வலயப் பாடசாலை ஒன்றின் அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள அதிபர் ஒருவரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்குமாறு அவரின் முறைகேடான மற்றும் ஊழல் மிக்க செயற்பாடுகளை முன்னிலைப்படுத்தி பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்த முறைப்பாட்டை கல்வி அமைச்சிற்கு பாரப்படுத்தி நடவடிக்கை எடுக்க பிரதமர் செயலகம் பணிப்புரை வழங்கியுள்ளது.

பிரதமர் செயலகத்தின் மூத்த உதவிச் செயலாளர் T. ஸ்ரீமன்ன மேற்கண்ட முறைப்பாட்டை 12.12.2025 ஆம் இலக்க கடிதம் மூலம் கல்வி அமைச்சுக்கு பாரப்படுத்தி உள்ளார்.

மேற்குறித்த அதிபர் அரச சட்டதிட்டங்களை மீறி சமூக ஊடகங்கள் வாயிலாக நிதி திரட்டியதும் மற்றும் பாடசாலையுடன் தொடர்பு இல்லாத பாடசாலையின் பெயரில் இயங்கும் நிதியம் ஒன்றிற்கு நிதி அனுசரணை வழங்குமாறு கோரிய கடிதம் போன்றன குற்றச்சாட்டுகளாக பிரதமர் அலுவலகத்தில் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related Posts