காணாமல்போன பல்கலைக்கழக மாணவன் சடலமாக கண்டெடுப்பு

வவுனியா- குறிசுட்டகுளம் பகுதியில் காணாமல்போயிருந்த பல்கலைக்கழக மாணவன் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார். குறிசுட்டகுளம் காட்டிற்குள், மண் அகழப்பட்ட குழி ஒன்றிலிருந்து குறித்த இளைஞனை பொலிஸார் சடலமாக இன்று (திங்கட்கிழமை) கண்டெடுத்துள்ளனர். காட்டிலுள்ள கிரவல் வெட்டப்பட்ட கிடங்குக்குள் தண்ணீர் தேங்கிய பகுதிக்குள் வீழ்ந்து இளைஞன் உயிரிழந்திருக்கலாம் என்று... Read more »

2019 ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடு

2019 ஜனாதிபதித் தேர்தலில் தமிழர் விடுதலைக் கூட்டணியின் நிலைப்பாடு தொடர்பில் அவர்களால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள ஊடக அறிக்கை… நம் நாட்டின் தலைவிதியையும் எம் நாட்டில் வாழும் பல்வேறு இன மக்களின் தலைவிதியையும் நிர்ணயிக்கக்கூடிய ஒரு முக்கிய தேர்தலை நம்நாடு எதிர்நோக்கியுள்ள வேளையில் வட – கிழக்கு... Read more »

கடத்தியவர்களை கொன்று முதலைக்கு இரையாக போட்டோம்: வெள்ளை வான் சாரதி ‘பகீர்’ தகவல்கள்!

கோட்டாபயவின் ஆட்சிக்காலத்தில் ஆட்களை கடத்தி கொன்ற வெள்ளைவான் அணியில், வாகன சாரதியாக பணியாற்றினேன் என ஒருவர் பகிரங்கமாக அறிவித்து பரபரப்பை கிளப்பியுள்ளார். அத்துடன், வெள்ளைவான் அணி, கடத்தல்கள், கொலை பற்றி பல்வேறு அதிர்ச்சி தகவல்களையும் வெளியிட்டார். இவ்வாறு 300 பேருக்கும் அதிகமானவர்கள் கொல்லப்பட்டதாக வெளிப்படுத்தியுள்ளார்.... Read more »

நீதிமன்றங்களில் முன்னிலையாவதற்கு குருபரனுக்கு தடை!

யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரனை நீதிமன்றங்களில் முன்னிலையாவதைத் தடை செய்யும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் முடிவை யாழ்ப்பாணம் பல்கலைக்கழக பேரவை ஏற்றுக்கொண்டுள்ளதாக அறிய முடிகிறது. அத்துடன், பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் இந்த முடிவை சட்டத்துறைத் தலைவர் கலாநிதி குமாரவடிவேல் குருபரனுக்கு... Read more »

யாழிலிருந்து திருச்சிக்கு விமான சேவைகள்

யாழ்ப்பாணத்திலிருந்து சென்னை மற்றும் திருச்சிக்கு விமான சேவைகளை ஆரம்பிக்க விமான நிறுவனமொன்று முன்வந்துள்ளது. இலங்கையில் பதிவு செய்யப்பட்ட விமான நிறுவனமான பிட்ஸ் எயார் தனியார் விமான நிறுவனமே இந்த விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளது. பிட்ஸ் எயார் தனியார் விமான சேவை யாழ்ப்பாண விமான நிலையத்தில்... Read more »

தயவுசெய்து தேர்தலில் இருந்து விலகுங்கள்- சிவாஜியிடம் கூட்டமைப்பு பகிரங்க வேண்டுகோள்

ஜனாதிபதி தேர்தலில் இருந்து தமிழ் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் சிவாஜிலிங்கத்தை விலகுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். யாழில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ரவிராஜ் நினைவு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும்... Read more »

வவுனியாவில் பல்கலை மாணவர் மாயம் – பொலிஸார் தீவிர தேடுதல்

வவுனியா கனகராயன்குளம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறிசுட்டகுளம் பகுதியில் இளைஞர் ஓருவர் காணாமல்போயுள்ளார். குறித்த இளைஞர் நேற்று காலை 7.30 மணியளவில் குறிசுட்ட குளம் பகுதியில் அமைந்துள்ள அவரது வீட்டிலிருந்து தடி வெட்டுவதற்காக காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். எனினும் நீண்ட நேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை என்பதால்,... Read more »

யாழ்ப்பாணம் விமான நிலையத்திலிருந்து முதலாவது விமான சேவை இன்று பதிவாகியுள்ளது!!

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்திலிருந்து சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவையை FitsAir இன்று பரிட்சார்த்தமாக மேற்கொள்கின்றது. இரத்மலானையில் இருந்து புறப்பட்ட விமானம் 9.30 மணிக்கு யாழ்ப்பாணம் விமான நிலையத்தில் தரையிறங்கியது. இங்கிருந்து சென்னைக்கு தனது பயணத்தை ஆரம்பித்தது FitsAir விமானம். இதில் இந்த... Read more »

கோத்தா வந்ததும் தூக்குவேன்!!- பொது சுகாதார பரிசோதகரை அச்சுறுத்திய ஈ.பி.டி.பி உறுப்பினர் கைது!!

கோத்தாபய ஆட்சிக்கு வந்ததும் உம்மைத் தூக்குவேன் என்று கரவெட்டி பிரதேச சபையின் ஈ.பி.டி.பி உறுப்பினர், பொது சுகாதார பரிசோதகரை அச்சுறுத்தியுள்ளார். இதையடுத்து, ஈ.பி.டி.பி உறுப்பினர், கைது செய்யப்பட்டார். கொற்றவத்தை பகுதியில் டெங்கு நுளம்பு பெருக்கம் தொடர்பில் சோதனை செய்வதற்கு கரவெட்டி பிரதேச சபை பொதுச்... Read more »

TNA தன்னலம் சார்ந்தே ஜனாதிபதி வேட்பாளரிற்கு ஆதரவு வழங்கியுள்ளது

தமிழ் தேசியக் கூட்டமைப்பில் உள்ள அத்தனை கட்சிகளும் எமக்கெதிரான அத்தனை விடயங்களிற்கும் மௌனமாகவே இருந்தனர். இந்த நிலையில் தமது சுகபோக மற்றம் தன்னலம் சார்ந்தே ஜனாதிபதி வேட்பாளரிற்கு ஆதரவு வழங்கியுள்ளனர் என வடக்க கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க செயலாளர் லீலாதேவி... Read more »

தமிழ் கட்சிகளை கடுமையாகச் சாடும் யாழ்.பல்கலை மாணவர்கள்

ஜனாதிபதித் தேர்தலில் ஐந்து தமிழ்த்தேசியக் கட்சிகள் வலுவான முடிவுகளை எடுக்கவுள்ள நிலையில் முந்திக்கொண்டு அறிக்கைகளை விட்டு கூட்டை சிதறடித்தவர் முன்னாள் முதலமைச்சர் விக்கினேஸ்வரனே என குற்றம் சுமத்தியுள்ள யாழ்.பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தாங்கள் எடுத்த முயற்சியை சரியாக அணுகாது ஐந்து தமிழ் கட்சிகளும் தவறிழைத்துள்ளன... Read more »

தேர்தலை புறக்கணிக்க கோரி வடக்கில் தீவிர பிரசாரத்தில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை புறக்கணிக்க கோரி வடக்கு முழுவதும் தீவிர பிரசார பணியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஈடுபட்டுள்ளது. தமிழ் மக்களின் அபிலாசைகளை பூர்த்தி செய்யும் எண்ணம் இரு தரப்பினருக்கும் இல்லை என்பதனால் தமிழ் மக்கள் தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என இதன்போது... Read more »

ஜனாதிபதி தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்து, சிறுபான்மை சமூகத்திற்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும் -சிவாஜி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, எதிர்வரும் 16ஆம் திகதி இரவுக்கு முன்னரேனும் அரசியல் கைதிகளை விடுதலை செய்து, சிறுபான்மை சமூகத்திற்கு நன்றிக்கடன் செலுத்த வேண்டும் என தமிழ்த் தேசிய மறுமலர்ச்சி சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் எம்.கே.சிவாஜிலிங்கம் வலியுறுத்தினார். அரசியல் கைதிகளை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி ஜனாதிபதி... Read more »

CID எனக் கூறி யாழில் கத்திக் குத்து – 25,000 ரூபாய் பணம் கொள்ளை

யாழ்ப்பாணத்தில் வீதியில் சென்றுகொண்டிருந்த ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு, படுகாயமடைந்த நிலையில், யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அத்தோடு அவரிடமிருந்த பணமும் கொள்ளையடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருதனார் மடம் – உரும்பிராய் வீதியில் நேற்று (புதன்கிழமை) இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்தில் செல்லத்துரை... Read more »

ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் குண்டு வெடிப்பொன்று இடம்பெறும் சாத்தியம்!!!

ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் குண்டு வெடிப்பொன்று இடம்பெறும் சாத்தியமுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது. இராஜாங்க அமைச்சர் எரான் விக்ரமரத்ன இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் காலப்பகுதியில் குண்டு வெடிப்பொன்று இடம்பெறும் சாத்தியமுள்ளதாக என்ற கருத்திலான டுவிட்டர் தகவலொன்று தனக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக அவர் கூறியுள்ளார். இதுதொடர்பாக பொலிஸ்... Read more »

கொழும்பில் உள்ள மக்களுக்கு அவசர எச்சரிக்கை – முகமூடி அணியுமாறு அறிவுறுத்தல்

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களில் வளிமண்டலத்தில் தூசு துகள்களின் செறிவு அதிகரித்துள்ளமையினால், சிறுவர்களுக்கு முகமூடி அணிவிப்பது மிகவும் பாதுகாப்பானதாக இருக்கும் என சுகாதாரத் துறையினர் ஆலோசனை வழங்கியுள்ளனர். ஏனெனில் தூசு துகள்களின் செறிவு காரணமாக, சிறுவர்கள் சுவாசிப்பதில் சிக்கல் நிலைமையை எதிர்கொள்ள நேரிடலாம் என... Read more »

சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவு – தமிழ் தேசியக் கூட்டமைப்பு உத்தியோகபூர்வ அறிக்கை

எதிர்வரும் 16ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனது ஆதரவை உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாக இன்று (வியாழக்கிழமை) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. குறித்த அறிக்கையில், இலங்கைக்கு ஜனநாயக ரீதியாக... Read more »

வல்வெட்டித்துறை மக்கள் வங்கி முகாமையாளரின் வீட்டில் கைது செய்யப்பட்ட இருவருக்கும் விளக்கமறியல்!!

வல்வெட்டித்துறை மக்கள் வங்கி முகாமையாளரின் வீட்டில் அத்திமீறிச் பொலிஸார் செயற்பட்டமை தொடர்பில் முரண்பட்ட கிராம சேவையாளர் உள்பட இருவரை நாளை வெள்ளிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. வங்கி முகாமையாளரின் துணைவியாரின் சகோதரர்கள் இருவரே பொலிஸாரின் கடமைக்கு இடையூறு விளைவித்தனர்... Read more »

புலம்பெயர் தமிழர்கள் ஈழம் கனவை கைவிட்டுள்ளனர் – ஆளுநர்

புலம்பெயர் தமிழர்கள் ஈழம் கனவை கைவிட்டுள்ளதாக வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அவர்கள் தற்போது வடக்கு அபிவிருத்திக்கு ஒத்துழைக்க தயாராகவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறினார். அண்மையில்... Read more »

யாழில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய நால்வர் கைது

யாழ்ப்பாணக் குடாநாட்டில் பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய குட்டி என அழைக்கப்படும் கொள்ளையன் உள்ளிட்ட நால்வர் கோப்பாயில் வீடொன்றில் மறைந்திருந்த வேளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நவாலியில் திருமண வீடொன்றில் புகுந்து காணொலியைக் காண்பித்து 60 பவுண் தங்க நகைகளைக் கொள்ளையிட்டமை உள்ளிட்ட பத்துக்கும்... Read more »