வட மாகாணத்தில் அதிகளவான சைபர் குற்றங்கள் பதிவு!

நாளொன்றுக்கு சைபர் குற்றங்கள் தொடர்பாக சுமார் 25 முறைப்பாடுகள் இலங்கையில் பதிவு செய்யப்படுவதாக பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் 2026 வரவு செலவுத் திட்டம் மீதான குழுநிலை விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் கூறினார்.

அவரது கூற்றுப்படி, இவற்றில் பெரும்பாலான முறைப்பாடுகள் வட மாகாணத்தில் பாதிவாவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

தரவுகளின்படி, 2020 ஆம் ஆண்டில் வடக்கு மாகாணத்தில் 24 சைபர் குற்றச் சம்பவங்களும், 2021 ஆம் ஆண்டில் 577 சபைர் குற்றச் சம்பவங்களும், 2022 ஆம் ஆண்டில் 654 சைபர் குற்றச் சம்பவங்களும், 2023 ஆம் ஆண்டில் 472 சைபர் குற்றச் சம்பவங்களும், 2024 ஆம் ஆண்டில் 1,539 சைபர் குற்றச் சம்பவங்களும் பதிவாகியுள்ளன.

இது தவிர, இந்த ஆண்டின் ஒக்டோபர் 1 ஆம் திகதி வரையான காலப் பகுதியில் 2,368 முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இவற்றுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, நாட்டின் பல மாவட்டங்களில் குற்றப் புலனாய்வுப் பிரிவின் கீழ் கணினி குற்றப் புலனாய்வு துணைப் பிரிவுகள் நிறுவப்பட்டுள்ளன என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.

Related Posts