Ad Widget

கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை உறுப்பினர்கள் தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு!!

கோணேஸ்வர ஆலய பரிபாலன சபை உறுப்பினர்களை உறுப்பினர்களாக செயற்படுவதை தடைசெய்யும் வகையில் திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் இடைக்கால தடைவிதித்து கட்டாணை ஒன்றினை பிறப்பித்துள்ளது. திருகோணமலை மாவட்ட நீதிபதி மாணிக்கவாசகர் கணேசராஜா முன்னிலையில் நேற்று(21) இந்த வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது 14 நாட்களுக்கு செயற்படும் வகையில் மேற்குறித்த இடைக்கால கட்டளை பிறப்பிக்கப்பட்டுள்ளது. குறித்த வழக்கில் முன்னிலையான சட்டத்தரணி சண்முகம்...

யாழில் தேடப்பட்டு வந்த 531 பேர் கைது!

யாழ்ப்பாணத்தில் தேடப்பட்டு வந்த 531 பேர் கடந்த ஒரு மாத கால பகுதிக்குள் கைது செய்யப்பட்டுள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். ’ குற்றச் செயல்களுடன் ஈடுபட்டமை தொடர்பாக நீதிமன்றங்களினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நபர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர் படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Ad Widget

மோட்டார் சைக்கிள் விபத்தில் யாழ். பல்கலைக்கழக மாணவன் உயிரிழப்பு

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார். யாழ்.பல்கலைக்கழக கலைப்பீட முதலாம் வருட மாணவனான மானிப்பாய் பகுதியை சேர்ந்த 22 வயதான ரமேஷ் சகீந்தன் எனும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த மாணவன் யாழில் உள்ள பிரபல உதைப்பந்தாட்ட கழகங்களில் ஒன்றான ஊரெழு றோயல் கழகத்தின் பிரபல வீரருமாவார். நீர்வேலி சந்தைக்கு ,மானிப்பாயில் உள்ள தனது...

சுமந்திரனின் மனுவை நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் கோரிக்கை!

இணையவழி பாதுகாப்பு சட்டத்துக்கு எதிராக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தாக்கல் செய்த மனுவை விசாரணை செய்யாமலேயே நிராகரிக்குமாறு சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திடம் கோரியுள்ளார். குறித்த சட்டத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனு உயர் நீதிமன்றில் நேற்று பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் சஞ்சய் ராஜரத்தினம் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்....

யாழில் படகு வெள்ளோட்டம்!!

இலங்கையின் தொழிநுட்ப, தொழில்முனைவோரின் ஆற்றலை உலகிற்கு வெளிப்படுத்தும் வகையில், மஹாசென் மரைன் தனது சமீபத்திய தயாரிப்பான Eco80 பாரிய பயணிகள் படகினை காரைநகர் படகு முற்றத்தில் இருந்து யாழ்ப்பாணம் கடற்பரப்பு களப்பில் செலுத்தி அறிமுகப்படுத்தியது. 80 அடி நீளமும், 30 அடி அகலமும், சுமார் 40 டன் எடையும் கொண்ட இந்தக் கப்பல், ஒரே நேரத்தில்...

இராமநாதன் நுண்கலைப் பீட மாணவர்கள் போராட்டம்!!

யாழ்ப்பாண பல்கலைக்கழக இராமநாதன் நுண்கலைப் பீட மாணவர்கள் இன்று (20) வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழ இராமநாதன் நுண்கலைப்பீட இசைத்துறையில் 4ஆம் வருடத்தில் கல்விகற்கவேண்டிய 3ஆம் வருட 2ஆம் அரையாண்டு மாணவர்களின் விரிவுரை செயற்பாடுகளை துரிதப்படுத்தக் கோரியே இவ்வகுப்பு பகிஷ்கரிப்பு போராட்டம் மேற்கொள்ளப்படுகிறது. மாணவர்கள் வாயிற் கதவுகளை மூடி போராட்டத்தை மேற்கொண்டு...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் தேரரும் பங்கெடுப்பு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு நீதி கோரி கிளிநொச்சி கந்தசுவாமி ஆலயம் முன்பாக பொதுமக்களால் இன்று போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. இப் போராட்டத்தில் தேரர் ஒருவரும் பங்கேற்று இருந்தார். காலை 10.30 மணியளவில் ஆரம்பமான குறித்த போராட்டமானது டிப்போ சந்தி நோக்கி A 9 வீதி ஊடாக பயணிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சியில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளுக்கு...

யாழில் 15 வயது சிறுமியை கடத்திய 17 வயது சிறுவன் கைது : சிறுமி வைத்தியசாலையில் அனுமதி!!

யாழ்ப்பாணத்தில் 15 வயது சிறுமியை கடத்தி சென்று தனது வீட்டில் தங்க வைத்திருந்த 17 வயது சிறுவனை பொலிஸார் கைது செய்துள்ளனர். வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவில் உள்ள தொல்புரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காணவில்லை என நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த...

பேருந்தில் இருந்து இறங்கியபோது தவறி விழுந்த பெண் உயிரிழப்பு!!

அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். மண்கும்பான் 4ஆம் வட்டாரம் பகுதியை சேர்ந்ததங்கரத்தினம் தனஸ்வரி (வயது 46) என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த பெண் பேருந்தில் இறங்க முற்பட்ட வேளை பேருந்தின் சாரதி பேருந்தை நகர்த்தியமையால் , தவறி விழுந்துள்ளார். அதில் படுகாயமடைந்தவரை யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை...

தகாத உறவு – மூன்று பெண்கள் உட்பட 5 பேர் படுகாயம்!

தகாத உறவு காரணமாக ஏற்பட்ட வாக்குவாதம் நீண்டதில் ஏற்பட்ட தகராற்றில் மூன்று பெண்கள் உட்பட ஐவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்பவம் நேற்று (19) இரவு இராமநாதபுரம், கல்மடு நகரில் பதிவாகியுள்ளது. படுகாயமடைந்தவர்கள் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், காயமடைந்த இருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். 28 மற்றும் 30 வயதுடைய இரண்டு ஆண்களும், 28, 30...

பெண்ணொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல்!!

கோப்பாய் மத்திப் பகுதியில் பெண்ணொருவர் மீது வாள்வெட்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (19) இரவு இடம்பெற்றுள்ளது. காயமடைந்த பெண் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். குறித்த சம்பவம் தொடர்பாக நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பாக கோப்பாய் பொலிஸார்...

யாழ்ப்பாண பாதுகாப்புப்படைத் தலைமையக கட்டளைத்தளபதி வட மாகாண ஆளுநருடன் கலந்துரையாடல்!!

வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம் சார்ள்ஸ் அவர்களுக்கும் யாழ் பிராந்திய பாதுகாப்புப்படைத் தலைமையகக் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விக்கிரமசிங்கவுக்கும் இடையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று திங்கட்கிழமை (19) முற்பகல் ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றது. யாழ்ப்பாண பிராந்தியத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை உரிய வகையில் முன்னெடுத்து செல்லல், பொது மக்களின் நாளாந்த வாழ்வியல் செயற்பாடுகளின் போது...

மின்சாரத்தை சிக்கனமாக பயன்படுத்துமாறு இலங்கை மக்களுக்கு அறிவுறுத்தல்!!

இலங்கையில் தற்போது நிலவும் வறட்சியான காலநிலையுடன், நாளாந்த மின்சார தேவை 03 முதல் 04 மெகாவட் மணிநேரம் வரை அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்த நாட்களில் நீர் மின் உற்பத்தி 20 வீதமாக குறைந்துள்ளதாகவும் நீர்மின் நிலையங்களின் நீர் கொள்ளளவு 83 வீதமாக இருப்பதால் நீர் மின் உற்பத்தி மட்டுப்படுத்தப்படும் எனவும் மின்...

போதைப் பொருளை கொடுத்து நண்பனின் உயிரை பறித்த இளைஞன் கைது!

போதை பாவனையில் இருந்து மீண்ட இளைஞனுக்கு மீண்டும் போதைப்பொருள் கொடுத்த உயிர் நண்பனால் , இளைஞனின் உயிர் பிரிந்துள்ளது. யாழ்ப்பாணம் தெல்லிப்பளை பகுதியில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, உயிரிழந்த இளைஞன் போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான நிலையில் கடந்த 06 மாத கால பகுதிக்கு முன்னர் ,அவற்றில் இருந்து மீண்டு...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பம்!!

எதிர்வரும் வாரங்களில் நாகப்பட்டினம் - காங்கேசன்துறை கப்பல் சேவை ஆரம்பமாகும் என்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஸ் ஜா நம்பிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், தலைமன்னார் மற்றும் ராமேஸ்வரம் இடையே பயணிகள் கப்பல் சேவையை மீண்டும் தொடங்குவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். இந்திய உயர்ஸ்தானிகர் காங்கேசன்துறை துறைமுகம் மற்றும் தலைமன்னார் கடற்பகுதிக்கு விஜயம் செய்த போது,...

மன்னாரில் 10 வயது சிறுமி துஷ்பிரயோகத்திற்கு பின் கொலை!

மன்னார் - தலை மன்னார் கிராமத்தில் 10 வயதான சிறுமி ஒருவர் நேற்று (15) இரவு பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், மன்னார் - தலை மன்னார் கிராமம் பகுதியில் தோட்டம் ஒன்றை பராமரிப்பதற்காக பணியமர்த்தப்பட்ட நபர் ஒருவராலேயே குறித்த சிறுமி...

தேசிய மாநாட்டுக்கான தடைக்கும் எனக்கும் சம்பந்தமில்லை – எம்.ஏ சுமந்திரன்

”தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டிற்கு தடை கோரி நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளுக்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை” என தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர், எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழரசு கட்சியின் தேசிய மாநாட்டிற்குத் தடை கோரி யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்ட நீதிமன்றங்களில் தொடரப்பட்ட வழக்குகள் , சுமந்திரனின் ஆதரவாளர்களால் தொடரப்பட்டது...

சிறிதரனுக்கும் ஜீவனுக்கும் இடையில் விசேட சந்திப்பு!

இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் சிவஞானம் சிறீதரனுக்கும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமானுக்கும் இடையில் இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது. சிறீதரனின் இல்லத்தில் இடம்பெற்ற இக்கலந்துரையாடலின் போது, இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவராக சிறீதரன் தெரிவுசெய்யப்பட்டமை குறித்து, ஜீவன் தொண்டமான் தனது வாழ்த்துகளைத் தெரிவித்து கொண்டார். அத்துடன் ”நீர் வழங்கல் தொடர்பில் யாழ்ப்பாணம்...

யாழ் – சென்னைக்கு இடையில் மற்றுமொரு விமானசேவை!

யாழ்ப்பாணம் பலாலி விமான நிலையத்தின் ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவையை ஆரம்பிப்பது தொடர்பில் இண்டிகோ விமான சேவை நிறுவனத்துடன் பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக துறைமுகங்கள், கப்பற்றுறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றும் போது இதனை தெரிவித்திருந்தார்....

கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட அறிவிப்பு!

புதிய பாடசாலை தவணை தொடர்பான அறிவிப்பை கல்வி அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் மூன்றாம் தவணை இன்று 16ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைகிறது. அத்துடன் 2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதலாம் தவணை பெப்ரவரி மாதம் 19 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் கல்வியமைச்சு தெரிவித்துள்ளது.
Loading posts...

All posts loaded

No more posts