லிட்ரோ அதிரடி அறிவிப்பு

லிட்ரோ கேஸ் லங்கா நிறுவனம் (Litro Gas Lanka Limited), தனது வீட்டுப் பாவனை எல்.பி. எரிவாயு சிலிண்டர்களின் விலைகளில் நடப்பு ஒக்டோபர் மாதம் முழுவதும் எவ்வித மாற்றமும் மேற்கொள்ளப்பட மாட்டாது என அறிவித்துள்ளது.

இதற்கமைய, ஒக்டோபர் மாதத்திலும் தற்போதைய விற்பனை விலைகளே தொடர்ந்து நடைமுறையிலிருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, விற்பனை செய்யப்படும் லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களின் விலைகள் வருமாறு:

12.5 கிலோகிராம் சிலிண்டர்: ரூ. 4,365

5 கிலோகிராம் சிலிண்டர்: ரூ. 1,750

2.3 கிலோகிராம் சிலிண்டர்: ரூ. 815

Related Posts