யாழில் இளைஞர் படுகொலை: அம்பாறை இளைஞர்கள் கைது!!

பிரான்ஸிலிருந்து நாடு திரும்பி யாழ்ப்பாணத்தில் வசித்து வந்த இளைஞரை வெட்டிக் கொலை செய்த குற்றச்சாட்டில், அம்பாறையைச் சேர்ந்த இரு இளைஞர்கள் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வடமராட்சிப் பகுதியைச் சேர்ந்த 29 வயதான இளைஞரே கடந்த செவ்வாய்க்கிழமை படுகொலை செய்யப்பட்டிருந்தார்.

இச்சம்பவம் தொடர்பில் நெல்லியடி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், சந்தேக நபர்கள் அம்பாறைப் பகுதியில் வைத்து ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்துடன், அவர்களிடமிருந்து கொலைக்குப் பயன்படுத்தப்பட்ட மோட்டார் சைக்கிள்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட இருவரும் வெளிநாட்டிற்குத் தப்பிச் செல்லத் தயாராகியிருந்தமை பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

தற்போது இருவரும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு, மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

Related Posts