வடமராட்சியில் இளைஞர் ஒருவர் வெட்டிக்கொலை!

வடமராட்சி கரணவாய் பகுதியில் நேற்று (18) இரவு ஆண் ஒருவர் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த பகுதியைச் சேர்ந்த 29 வயதுடையவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

இது தொடர்பில் நெல்லியடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts