யாழில் 500 வீடுகள் நிர்மாணிக்கும் வீடமைப்புத் திட்டத்திற்கான அடிக்கல் நடும் நிகழ்வு

வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வளங்கள் அமைச்சின் கீழ் யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்நாட்டில் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு மீள்குடியேற்றத்திற்காக இவ்வாண்டு முதற்கட்டமாக 500 வீடுகள் நிர்மாணிக்கப்படவுள்ளதற்கு அமைவாக, ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் இன்று (16) காலை 9.30 மணிக்கு மீசாலை கிழக்கில் வீடமைப்புத் திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பயனாளி ஒருவருக்கான வீட்டுக்கான அடிக்கல் சம்பிரதாய பூர்வமாக நாட்டப்பட்டது.

இந் நிகழ்வில் கடற்றொழி்ல் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சரும் யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவருமான இராமலிங்கம் சந்திரசேகர், வீடமைப்பு நிர்மாணிப்பு மற்றும் நீர்வளங்கல் அமைச்சர் கலாநிதி எச். எம். சுசில் ரணசிங்ஹ, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால வட மாகாண ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், பாராளுமன்ற உறுப்பினர்களான ஜெயசந்திரமூர்த்தி றஜீவன், கருணநாதன் இளங்குமரன், சண்முகநாதன் சிறிபவானந்தராஜா, அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், சாவகச்சேரி பிரதேச செயலாளர் திரு. F.C. சத்தியசோதி ஆகியோரும் கலந்துக் கொண்டனர்.

Related Posts