டித்வா புயல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத்தராதர உயர் தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்களுக்கான பரீட்சைகள் இன்று திங்கட்கிழமை முதல் ஜனவரி 20 வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் 2,086 பரீட்சை மையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ளதுடன், இதற்காக 325 ஒருங்கிணைப்பு மையங்களும் 32 பிரதேச மையங்களும் செயற்படுத்தப்பட்டுள்ளன.
அனர்த்தம் காரணமாக அடையாள ஆவணங்களை இழந்த பரீட்சார்த்திகள் தற்காலிக அடையாள ஆவணத்தை சமர்ப்பித்து பரீட்சைக்கு தோற்றலாம் என்றும், பரீட்சைகள் முன்கூட்டியே அறிவிக்கப்பட்ட அதே நேர அட்டவணையின்படி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பரீட்சை ஆரம்பிக்க 30 நிமிடங்களுக்கு முன்னதாகவே மையங்களுக்கு வருமாறு பரீட்சார்த்திகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.