முல்லைத்தீவு, உடுப்புக்குளம் கடற்கரைப் பகுதியில் நேற்று மாலை மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் போது, இராணுவத்திலிருந்து தப்பியோடி தலைமறைவாக இருந்த நபர் ஒருவரை முல்லைத்தீவு காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

முல்லைத்தீவு – துண்டை, உடுப்புக்குளம் கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் வலை இழுக்கும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக காவல்துறையினருக்குத் தகவல் கிடைத்தது.
இதனடிப்படையில் அங்கு சென்ற காவல்துறையினர் சோதனையிட்டபோது, சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த டிராக்டருடன் குறித்த நபர் பிடிபட்டார்.