பிரபாகரனின் 72 ஆவது பிறந்தநாள் நிகழ்வை ட்ரோன் மூலம் பதிவு செய்ய முற்பட்ட இளைஞர் வல்வெட்டித்துறையில் கைது!

வல்வெட்டித்துறையில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட குற்றச்சாட்டில் இளைஞனை நேற்றைய தினம் வியாழக்கிழமை கைது செய்ததுடன் ட்ரோன் உள்ளிட்ட உபகரணங்களை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுத்துள்ள பொலிஸார்.

ட்ரோன் உள்ளிட்ட உபகரணங்களை சான்று பொருளாக பொலிஸ் நிலையத்தில் வைத்துள்ளதுடன் எதிர்வரும் 2ஆம் திகதி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடர நடவடிக்கை எடுத்துள்ளனர்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் வே.பிரபாகரனின் 72 ஆவது பிறந்தநாள் கொண்டாட்டம் வல்வெட்டித்துறை ஆலடி வீதியில் அவரது பூர்வீக வீடு அமைந்திருந்த காணியில் கொண்டாடப்பட்டது.

நிகழ்வினை ட்ரோன் மூலம் காணொளி பதிவு செய்யப்பட்ட முற்பட்ட இளைஞனை அங்கிருந்த வல்வெட்டித்துறை பொலிஸார் கைது செய்து அவரது ட்ரோன் அதற்கு பயன்படுத்திய கையடக்க தொலைபேசி உள்ளிட்ட உபகரணங்களையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட இளைஞனை வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் அவரை பொலிஸ் பிணையில் விடுவித்ததுடன் பறிமுதல் செய்யப்பட்ட ட்ரோன் உள்ளிட்ட உபகரணங்களை சான்று பொருளாக பொலிஸ் நிலையத்தில் வைத்துள்ளனர்.

இளைஞனுக்கு எதிரான வழக்கு விசாரணை எதிர்வரும் 2ஆம் திகதி பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் நடைபெறும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்

Related Posts