மலசல கூடத்துடன் இணைந்த குளியறைக்குள் கோழி இறைச்சி விற்பனை!!

வவுனியா, வைரவபுளியங்குளம் பகுதியில் மலசல கூடத்துடன் இணைந்த குளியலறைப் பகுதியில் வைத்து கோழி இறைச்சி உரிக்கப்பட்டு விற்பனை செய்யும் சம்பவம் நீண்ட நாட்களாக இடம்பெற்றமை தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

வவுனியா, வைரவபுளியங்குளம், புகையிரத வீதியில் கதிரேசு வீதிக்கு திரும்பும் சந்தியில் உள்ள கோழி இறைச்சி விற்பனை கடை ஒன்றில் அக்கடைக்குரிய கோழிகள் மலசலகூடம் மற்றும் அதனுடன் இணைந்த பகுதிகளில் தங்க வைக்கப்பட்டு, அப் பகுதியில் வைத்து உரிக்கப்பட்டு சுகாதார சீர்கேட்டுடன் கடையில் இறைச்சியாக நீண்டகாலமாக விற்பனை செய்யப்படடு வந்துள்ளது.

இது தொடர்பில் பொது சுகாதார பரிசோதகர்கள் கடந்த காலங்களில் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் அது இயங்கி வந்துள்ளது. விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கையின் போது கிராம அபிவிருத்திச் சங்கத்தினர் மற்றும் பொலிசார் இணைந்து டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டத்தை முன்னெடுத்த போது சுகாதார சீர்கேட்டுடன் குறித்த கோழி இறைச்சிக் கடை இயங்கி வைத்தமை தெரிய வந்துள்ளது.

சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய குறித்த இறைச்சிக் கடை தொடர்பில் சுகாதார பரிசோதகர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அக் கடையின் வாடிக்கையாளர்கள் மற்றும் பாவனையாளர்களின் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Posts