போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகையைச் செலுத்துமாறு கோரி வரும் போலிச் செய்திகளை நம்பி பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இவ்வாறான செய்திகள் போக்குவரத்துப் பிரிவினரால் அனுப்பப்படுவதில்லை என பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர்.
மேலும், இத்தகைய போலி குறுஞ்செய்திகளுக்கு எவ்விதப் பதிலும் அளிக்க வேண்டாம் என போக்குவரத்துப் பிரிவு மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரிவின் பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே. சேனதீர பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளார்.