மணல் கடத்தலில் ஈடுபட்ட வாகனத்தின் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு!

கிளிநொச்சி, தர்மபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தேராவில் பகுதியில் சட்டவிரோத மணல் ஏற்றிச் சென்ற கப் வாகனத்தை பொலிஸார் நிறுத்த முற்பட்டபோது, அதனை நிறுத்தாது தப்பிச் செல்ல முயன்றதால் பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது, பொலிஸார் வாகனத்தை நோக்கி ஐந்து தடவைகள் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில், சாரதி வாகனத்தை அவ்விடத்திலேயே விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளார். இச்சம்பவம் குறித்து தர்மபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Related Posts