Ad Widget

ஊழியர் சேமலாப நிதியத்தின் 30 வீதத்தினை மீளப்பெறும் ஆரம்ப நிகழ்வு யாழில்

ஊழியர் சேமலாப நிதியத்தின் 30 வீதத்தினை மீளப்பெறும் செயற்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வை வடமாகாண தொழில் திணைக்களத்தில் இராஜாங்க அமைச்சர் ரவீந்தர சமரவீர நேற்று வெள்ளிக்கிழமை ஆரம்பித்து வைத்தார்.

யாழ்.பண்ணையில் அமைந்துள்ள வடமாகாண தொழில் திணைக்கள காரியாலயத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இந்த நிகழ்வு இடம்பெற்றது.

Capture

வடமாகாண தொழில் ஆணையாளர் நீலலோஜினி ஜெயகதீஸ்வரன், மற்றும், அ.பி.சி. அமரதுங்க தலைமையில் இந்தத நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், தொழில் ஆணையாளர் நாயகம் ஆ.னு.ஊ. அமரதுங்க மற்றும் அமைச்சின் செயலாளர்கள் துறைசார் அதிகாரிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.

வட மாகாணத்தில் உள்ள தொழிலாளர்களுக்கு பல்வேறு சேவைகள் செய்ய வேண்டும் என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.

ஏனென்றால் அவர்கள் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என தொழில் சங்க உறவுகள் இராஜாங்க அமைச்சர் ரவீந்திர சமரவீர தெரிவித்தார்.

எதிர்வரும் மார்ச் மாதம் தொழில் திணைக்கள ஆணையாளர் நாயகத்துடன் வந்து புதிய கட்டடங்களை திறந்து வைக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஊழியர் சேமலாப நிதியத்தில் 10 வருடங்கள் தொடர்ச்சியாக வேலை செய்து 3 இலட்சம் ரூபாவுக்கு அதிகமாக இருந்தால், அதில் இருந்து 30 வீதத்தினை பெற்றுக்கொள்ள முடியும்.

மருத்துவ காரணம் மற்றும் வீடமைப்பு காரணங்களுக்காக 30 வீதத்தினை மீளப்பெற முடியம். இத்தொகை திருப்பி செலுத்த வேண்டிய அவசியம் இல்லை என அவர தெரிவித்தார்.

Related Posts