Ad Widget

யாழில் அருள்நெறி விருது வழங்கும் நிகழ்வு

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அருள்நெறி விழா எனும் விருது வழங்கும் நிகழ்வு நேற்று (27) யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.

arul-nery-2015

இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கடந்த நல்லூர் கந்தசுவாமி ஆயலத்தின் திருவிழா உற்சவ காலத்தின் போது யாழ் மாவட்டத்திலுள்ள அறநெறி பாடசாலை மாணவர்களிடையே சமயம் சார்ந்த போட்டிகள் நடாத்தப்பட்டன.

இவ்வாறு யாழ் மாவட்டத்திலுள்ள ஒவ்வொரு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட அறநெறிப் பாடசாலைகளின் மாணவர்களுக்கிடையே நடைபெற்ற சித்திரம், நடனம், வில்லிசை, பண்ணிசை, பேச்சு, கட்டுரை, நாடகம் ஆகிய போட்டிகளில் பிரதேச மட்டத்தில் முதலாவது இடத்தை பெற்ற மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அவர்களிடையே மாவட்ட மட்ட ரீதியில் போட்டிகளை நடாத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு நேற்று(27) விருதுகள் வழங்கப்பட்டது.

இவ்வாறு வெற்றி பெற்ற 307 மாணவர்கள் நேற்றைய தினம் விருதுகளை பெற்றுக் கொண்டனர்.

யாழ் இலங்கை வேந்தன் மண்டபத்தில் இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் அ.உமாமகேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் திரு நா.வேதநாயகன், நல்லை ஆதீன குரு முதல்வர் சோமசுந்தர தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள், கொழும்பு இராமகிருஸ்ண மிஷன் தலைவர் சுவாமிஜி சர்வ ரூபானந்த மகராஜ், கல்வி அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் தில்லை நடராஜா, யாழ்.பல்கலைக்கழக இந்துநாகரீகத்துறை தலைவர் பேராசிரியர் மா.வேதநாதன் மற்றும் பிரதேச செயலர்கள் ஆகியோர் கலந்து கொண்டு மாணவர்களிற்கு விருதுகளை வழங்கி கௌரவித்தனர்.

மேலும் இதன்போது போட்டிகளில் வெற்றியீட்டிய ஆக்கங்கள் பேச்சுக்கள் நாடகங்கள் மேடையேற்றப்பட்டன.

Related Posts