யாழில் சித்திரைப் புத்தாண்டில் சிறப்பு பட்டிமன்றம்! இந்தியாவிலிருந்து பேச்சாளர்கள் வருகை!!!

யாழ். இந்தியத் துணைத் தூதரகமானது வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு அமைச்சுடன் இணைந்து பட்டிமன்றமொன்றை நடாத்த தீர்மானித்துள்ளது. சுதந்திர இந்தியாவின் சட்டம் மற்றும் நீதித்துறைக்கான முதலாவது அமைச்சர் கலாநிதி டீ.சு.அம்பேத்கார் அவர்களின் 125வது பிறந்த தின நினைவு நாளை முன்னிட்டும்,தமிழ் சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டும் எதிர்வரும் 14ம் திகதி 5.30 மணிக்கு சிறப்புப் பட்டிமன்றம் நிகழ்வு...

புனர்வாழ்வு பெறும் போராளிகளின் புத்தாண்டு நிகழ்வு!

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் போராளிகளின் புத்தாண்டு விளையாட்டு நிகழ்வு வவுனியா நகரசபை மைதானத்தில் இடம்பெற்றது. புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் புனர்வாழ்வு பெற்ற முன்னாள் போராளிகள் மற்றும் புனர்வாழ்வு பெற்றுவரும் முன்னாள் போராளிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்போது புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம், புனர்வாழ்வு நிலையத்தின்...
Ad Widget

நூறுநாள் வேலைத்திட்டத்தை இந்த ஆண்டிலும் முன்னெடுக்க வேண்டுமேன கூட்டுறவாளர்கள் அமைச்சர் ஐங்கரநேசனிடம் கோரிக்கை

கூட்டுறவு அமைச்சால் கடந்த ஆண்டு முன்னெடுக்கப்பட்ட நூறுநாள் வேலைத்திட்டத்தைப்போன்று கூட்டுறவு அமைப்புகளின் அபிவிருத்தி கருதி இந்த ஆண்டும் நூறுநாள் வேலைத்திட்டமொன்றை முன்னெடுக்குமாறு கூட்டுறவாளர்கள் வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கூட்டுறவு அமைச்சர் ஐங்கரநேசனுக்கும் வடமாகாணத்தில் உள்ள கூட்டுறவு அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்க்கிழமை (05.04.2016) கிளிநொச்சி கூட்டுறவு கலாசார மண்டபத்தில்...

வீட்டுத் தோட்டப் பயிர்ச் செய்கை ஆரம்ப நிகழ்வு!

தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் ஒரு அங்கமான வீட்டுத் தோட்ட பயிர்ச்செய்கை நடவடிக்கை நேற்று முன்தினம் பி.ப 3.00 மணியளவில் யாழ் மாவட்ட செயலகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்ச்சித்திட்டத்தை ஆரம்பித்து வைக்கும் முகமாக யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன் தலைமையில் யாழ் மாவட்ட செயலக உத்தியோகத்தர்களினால் வீட்டுத் தோட்டப்பயிர்கள் மாவட்ட...

யாழில் புதிய ஹோட்டல் திறப்பு – ஜனாதிபதி பங்கேற்பு

யாழ். நகரப் பகுதியில் புதிதாக அமைக்கப்பட்ட ஹோட்டலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று ஞாயிற்றுக்கிழமை சம்பிரதாயபூர்வமாக திறந்து வைத்தார். அத்துடன் இதன்போது, யாழ். கரைநகர் பகுதியில் உள்ள சுற்றுலா மற்றும் ஹோட்டல் கற்கை நெறியினை பூர்த்தி செய்த மாணவர்கள் ஐவருக்கு ஜனாதிபதி சான்றிதழ்களை வழங்கி வைத்ததுடன், அம் மாணவர்களுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக்கொண்டார். இந்த நிகழ்வில்...

அவுஸ்திரேலியாவில் உலக தவில் மாமேதை தெட்சணாமூர்த்தியின் ஆவணப்படம் நூல் வெளியீடு

உலக தவில் மாமேதை தெட்சணாமூர்த்தி அவர்கள் பற்றி தெட்சணாமூர்த்தி அறக்கட்டளையின் ஆதரவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த படைப்பாளி அம்ஷன்குமார் தயாரித்த ஆவணப்படமும் மற்றும் 'தெட்சணாமூர்த்தி: எட்டாவது உலக அதிசயம்'எனும் நூல் அவுஸ்திரேலியாவின் சிட்னி மாநகரில் வெளியிடப்பட்டுள்ளது. இந்நிகழ்வு மார்ச் மாதம் 25 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 9.15 மணிக்கு நூற்றுக்கணக்கான ரசிகர்கள் புடைசூழ தூங்க்காபி சமூக...

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக யாழ்ப்பாணத்தில் நினைவுத்துாபி

ஸ்ரீலங்காவில் ஊடக பணியின்போது படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவாக யாழ்ப்பாணம் பிரதான வீதியில் நினைவுத்தூபி திறந்து வைக்கப்பட்டுள்ளது. 44 ஊடகவியலாளர்கள் ஊடக பணியின் போது படுகொலை செய்யப்பட்டிருக்கும் நிலையில் அவர்கள் நினைவாக குறித்த நினைவுத்தூபிஅமைக்கப்பட்டுள்ளது. குறித்த தூபியை நேற்று ஞாயிற்றுக்கிழமை மாலை ஊடகத்துறை அமைச்சர் கஜயந்த கருணாதிலக்க மற்றும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் வடக்கில்...

உடைந்து போயுள்ள மனநிலையை சீர்திருத்தம் செய்ய வேண்டும்

வடக்கு மக்களின் மனநிலையில் நல்லாட்சியினை காணமுடியவில்லை அதற்காக நாம் அனைவரும் ஒன்றினைந்து செயற்படவேண்டும் என பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார். பொது நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சினால் நிர்மானிக்கப்பட்ட பொதுமக்களுக்கான யாழ் விடுமுறை விடுதி திறப்பு நிகழ்வு நேற்று யாழ் குறிகட்டுவான் வீதி அல்லைப்பிட்டி பகுதியில் யாழ் மாவட்ட...

பிரதமர் ரணிலுக்கு இன்று பிறந்தநாள்

லேக் நிறுவனத்தை ஸ்தாபித்து இலங்கையில் ஊடகத்துறைக்கு அடித்தளமிட்ட எஸ்மண்ட் விக்கிரமசிங்க மற்றும் நாலனி விக்கிரமசிங்க ஆகியோருக்கு மகனாக 1949ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிறந்தார். ரோயல் கல்லூரியில் ஆரம்பக் கல்வியை நிறைவு செய்த அவர், கொழும்பு பல்கலைக்கழகத்தில் தனது உயர்கல்வியைப் பூர்த்தி செய்திருந்தார். பின்னர் சட்டக் கல்லூரி மூலம் சட்டத்தரணியாக...

அமைச்சர் விஜயகலாவின் புதல்விகளின் நடன அரங்கேற்றத்தில் மைத்திரி, ரணில், சம்பந்தன் பங்கேற்பு!

சிறுவர் மற்றும் மகளிர் விவகார இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் புதல்விகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பம்பலப்பிட்டி கதிரேசன் மண்டபத்தில் நடைபெற்றது. பரதநாட்டிய மாணவிகளான பவதரணி மகேஸ்வரன், பவித்ரா மகேஸ்வரன் ஆகியோரது பரதநாட்டிய அரங்கேற்றமே நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன்,...

கிளிநொச்சியில் நடைபெற்ற தமிழினியின் நூல்களின் அறிமுக விழா!

விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளீர் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி ஜெயக்குமரன் எழுதிய "ஒரு கூர்வாளின் நிழல் " (போராட்ட குறிப்புக்கள்) மற்றும் "போர்க்காலம்" (கவிதை தொகுப்பு) ஆகிய இரு நூல்களின் அறிமுக விழா கிளிநொச்சியில் நேற்று பிற்பகல் இடம்பெற்றது. கிளிநொச்சி கூட்டுறவாளர் மண்டபத்தில் நேற்று மாலை 3 மணியளவில் பொன். காந்தன் தலைமையில் இந்த நிகழ்வு...

யாழில் மத்திய கலாசார நிலையம் திறந்து வைப்பு

யாழ். ஒல்லாந்தர் கோட்டைக்குள் மத்திய கலாசார நிலையம் திறந்து வைக்கப்பட்டதுடன், புதிய கட்டிடம் அமைப்பதற்கான பெயர்ப்பலகை திரை நீக்கமும் நேற்று இடம்பெற்றது. மத்திய கலாசார நிலையத்தினை கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நேற்று வெள்ளிக்கிழமை காலை 10.30 மணியளவில் திறந்து வைத்தார். கல்வி அமைச்சு, தொல்பொருளியல் திணைக்களம் மற்றும் மத்திய கலாசார நிலையம் ஆகியனவின் ஏற்பாட்டில்...

இணையத்தள அங்குரார்ப்பணம்

தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் இணையத்தள அங்குரார்ப்பணம் நேற்று(15) செவ்வாய்கிழமை கொழும்பு தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் இடம்பெற்றது. எழுத்தாளர் உமா வரதராஜன், ஜே.வி.பி. பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத், புரவலர் ஹாசிம், தமிழ்ச் சங்கத் தலைவர் ராஜகுலேந்திரா, லயன் நோபேர்ட் பொர்னான்டோஆகியோர் கலந்து கொண்டனர்.

’96’ கொண்டாடுவோம் நிகழ்வு : யாழ் மாவட்ட கிரிக்கெட் அணி கொழும்புக்கு சுற்று பயணம்

உலக கிண்ணத்தை வெற்றிக்கொண்டு 20 ஆண்டுகள் பூர்த்தியை முன்னிட்டு '96 கொண்டாடுவோம்' எனும் தலைப்பின் கீழ் பல்வேறுப்பட்ட நிகழ்வுகளை இலங்கை துறைமுக அதிகாரசபையின் விளையாட்டுப்பிரிவு சேவ் த ஸ்போர்ட் இயக்கத்துடன் இணைந்து ஏற்பாடு செய்துள்ளது. இதனை முன்னிட்டு '96 கொண்டாடுவோம் - கிரிக்கெட் பயிற்சி முகாம்' நாளை மறுநாள் (18) தெஹிவல கவுடானந்த சாஸ்திரானந்த மகா...

வடமாகாண விவசாயக் கண்காட்சி மன்னாரில் ஆரம்பம்

வடமாகாண விவசாயக் கண்காட்சி மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை (14.03.2016) ஆரம்பமாகியுள்ளது. தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறவுள்ள இக்கண்காட்சியை வடமாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் திறந்து வைத்துள்ளார். வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இக்கண்காட்சியின் தொடக்க நிகழ்ச்சி இடம்பெற்றது. இதில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிவசக்தி ஆனந்தன், ஸ்ரீ.சாந்தி, வடமாகாண...

மருத்துவ தேவைகளுக்காக ஆளுநர் நிதிய நிதியுதவி

மருத்துவ தேவைகளுக்காக ஆளுநர் நிதிய நிதியுதவி வழங்கும் வைபவம் வட மாகாண ஆளுநர் மற்றும் முதலமைச்சர் தலைமையில் நேற்று (01) யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநர் அலுவலகத்தில் நடைபெற்றது. இதன்போது மருத்துவ தேவைகளுக்காக 76 பயனாளிகளுக்கு நிதியுதவி வழங்கப்பட்டது. இதன்போது பிரதம செயலாளர், ஆளுநரின் செயலாளர், மற்றும் மாகாண செயலாளர்கள் அரசாங்க அதிபர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டார்கள்.

முதியோருக்கான உடற்பயிற்சி நிகழ்வு

உடல்நல மேம்பாட்டு வாரத்தினை முன்னிட்டு முதியோருக்கான உடற்பயிற்சி நிகழ்வு நேற்று முன்தினம்(29) யாழ் மாவட்டச்செயலகத்துக்கு எதிரே உள்ள பழைய பூங்காவில் காலை 9.30 மணி தொடக்கம் காலை 11 மணிவரை நடைபெற்றது. முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் யாழ் மாவட்ட அலுவலகத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு நடைபெற்றது. இந்த உடற்பயிற்சி நிகழ்வில் யாழ் மாவட்ட மட்ட மற்றும் பிரதேச...

யாழ் சாரணர் ஜம்பொறியில் விசேட கண்காட்சி

சாமாதானத்திற்கான செய்தி என்ற தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் 9வது தேசிய சாரணர் ஜம்பொறியை முன்னிட்டு சாரணர்களுக்கான விசேட கணட்காட்சியொன்றும் இடம்பெறுகின்றது. இலங்கை சாரணர் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள 9வது தேசிய சாரணர் ஜம்பொறியானது உள்நாட்டுவெளிநாட்டு சாரணர்ககள் 10.000 பேரின் பங்குபற்றலுடன் மாசி மாதம் 20 திகதி முதல் 26 வரை யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்றது. இதற்கு இணைவாக...

மாற்றத்துக்கான கருவியாய் பறை ஓங்கி ஒலிக்கட்டும்- பொ.ஐங்கரநேசன்

பறை தமிழினத்தின் தொன்மையான அடையாளம். ஆதித் தமிழ்ச்சமூகத்தின் தகவல் தொடர்பு சாதனம். நாடி நரம்பெங்கும் முறுக்கேற்றும் அந்தப்பறை அரசியல் தொடங்கிப் பண்பாடு வரை தமிழ்மக்களின் சகல வாழ்வியற் தளங்களிலும் நல்லதொரு மாற்றத்தை ஏற்படுத்தும் கருவியாய் மீளவும் ஓங்கி ஒலிக்கட்டும். இவ்வாறு வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். யாழ் என்டர்டெயின்ற்மென்ற் நிறுவனத்தின் ஏற்பாட்டில் தமிழ்நாடு புத்தர்...

தமிழுக்கான விசேட சட்டம் ஒன்றினைக் கொண்டுவர உள்ளாராம் ஜனாதிபதி!

இனவாத போக்கினை உடையவர்கள் வேறு கட்சி உருவாக்க வேண்டுமென்று கூறிவருகின்றனர். ஆனாலும், விமல் மற்றும் கம்மன்பில வேறுகட்சி ஆரம்பித்தாலும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மக்களிடையே இன, மத, ஜாதி பேதங்களைக் கொண்டுவரும் நபர் அல்ல என, அமைச்சர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ்ப்பாண, கிளிநொச்சி மாவட்ட இளைஞர் யுவதிகளுக்கான மாபெரும்...
Loading posts...

All posts loaded

No more posts