Ad Widget

யாழ் சாரணர் ஜம்பொறியில் விசேட கண்காட்சி

சாமாதானத்திற்கான செய்தி என்ற தொனிப்பொருளில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுவரும் 9வது தேசிய சாரணர் ஜம்பொறியை முன்னிட்டு சாரணர்களுக்கான விசேட கணட்காட்சியொன்றும் இடம்பெறுகின்றது.

scout-jampori-exbition

இலங்கை சாரணர் சங்கத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள 9வது தேசிய சாரணர் ஜம்பொறியானது உள்நாட்டுவெளிநாட்டு சாரணர்ககள் 10.000 பேரின் பங்குபற்றலுடன் மாசி மாதம் 20 திகதி முதல் 26 வரை யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்றது.

இதற்கு இணைவாக தாபால் திணைக்களம்,மத்திய சுற்றாடல் அதிகார சபை,சட்ட உதவி ஆணைக்குழு,சுற்றுச்சூழல் அமைச்சு உள்ளிட்டவைகளின் அனுசரணையுடன் சாரணர்களுக்கான விசேட கண்காட்சியொன்று யாழ் மத்திய கல்லூரியில் இடம்பெறுகின்றது.

உலக அபிவிருத்தி கிராமம் என பெயரிடப்பட்டுள்ள இந்த கண்காட்சியில் யாழ் மாவட்ட தபால் திணைக்களத்தின் ஏற்பாட்டில் அமைக்கப்பட்டுள்ள பகுதியில் இலங்கையில் வெளியிடப்பட்ட முதலாவது முத்திரை தொடக்கம் அனைத்து முத்திரைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, சட்ட உதவி ஆணைக்குழுவினால் சாரணர்களுக்கு சட்டங்கள் தொடர்பாக அறிவுறுத்தும் நிகழ்வுகள் இடம்பெறுவதுடன் நாட்டின் உயிர் பல்வகைமையை நிலைநாட்ட சாரணர்களை ஒன்றிணைக்கும் நோக்கில் சுற்றுச்சூழல் அமைச்சினால் சுற்றுச்சூழல் தொடர்பாக விழிப்புனர்வை ஏற்படுத்தும் நிகழ்வும் இடம்பெற்றுவருகின்றது.

தொடர்ந்து 26ம் திகதிவரை இடம்பெறவுள்ள இந்த கண்காட்சியில் ஜம்பொறியில் பங்குகொண்டுள்ள பத்தாயிரத்திற்கு மேற்பட்ட சாரணர்கள் மற்றும் ஏனைய பாடசாலை மாணவர்கள் பொதுமக்களும் கண்டுகளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கதொன்றாகும்.

Related Posts