Ad Widget

யாழில் சித்திரைப் புத்தாண்டில் சிறப்பு பட்டிமன்றம்! இந்தியாவிலிருந்து பேச்சாளர்கள் வருகை!!!

யாழ். இந்தியத் துணைத் தூதரகமானது வடமாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டு அமைச்சுடன் இணைந்து பட்டிமன்றமொன்றை நடாத்த தீர்மானித்துள்ளது.

சுதந்திர இந்தியாவின் சட்டம் மற்றும் நீதித்துறைக்கான முதலாவது அமைச்சர் கலாநிதி டீ.சு.அம்பேத்கார் அவர்களின் 125வது பிறந்த தின நினைவு நாளை முன்னிட்டும்,தமிழ் சித்திரை வருடப்பிறப்பை முன்னிட்டும் எதிர்வரும் 14ம் திகதி 5.30 மணிக்கு சிறப்புப் பட்டிமன்றம் நிகழ்வு ஒன்றினை நல்லூர், சங்கிலியன் தோப்பில் நடாத்தவுள்ளது.

இச்சிறப்புப் பட்டிமன்றம் நிகழ்வில் இந்தியாவிலிருந்து வருகை தரும் பிரபல பேச்சாளர்களான திரு. பட்டிமன்றம் ராஜா மற்றும் திருமதி. பாரதி பாஸ்கர் அவர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

இவர்களுடன் வடமாகாணத்தின் புகழ் பூத்த பேச்சாளர்களான முனைவர் மனோன்மணி சண்முகதாஸ், பேராசிரியர் தி.வேல்நம்பி, செந்தமிழ்ச் சொல்லருவி ச.லலீசன்,திரு. ந. விஜயசுந்தரம், திரு. இ.சர்வேஸ்வரா மற்றும் செல்வி ப.கதிர்தர்சினி ஆகியோரும் இப்பட்டிமன்ற விவாத அரங்கினில் தமது வாதங்களை முன்வைப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Pattimantram_in_001

Pattimantram_in_002

Related Posts