- Tuesday
- July 21st, 2026
எழுத்தாளர் வெற்றிச்செல்வியின் 'ஆறிப்போன காயங்களின் வலி' நூல் யாழ்ப்பாணத்தில் அறிமுகம் செய்யப்படவுள்ளது. யாழ்ப்பாணம் நாவலர் கலாசார மண்டபத்தில் ச.ராதேயன் தலைமையில் எதிர்வரும் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு இந்த நூல் அறிமுக நிகழ்வு நடைபெற ஏற்பாடாகியுள்ளது. யாழ்ப்பாணம் பல்கலைக்கழக சமூகவியற்றுறை விரிவுரையாளர் எஸ்.ஜீவசுதன் மற்றும் உரும்பிராய் இந்துக் கல்லூரி ஆசிரியர் தி.செல்வமனோகரன் ஆகியோர்...
இயக்குனர் கிருத்திகன் இயக்கத்தில் உருவான “இருட்டறை” குறும்படம் எதிர்வரும் 25ம் திகதி சனிக்கிழமை மாலை 5.30 மணிக்கு யாழ் இந்துக்கல்லூரியில் வெளியிடபடவுள்ளது. இதில் அனைவரையும் கலந்து சிறப்பிக்குமாறு அழைக்கின்றார்கள் இருட்டறை படக்குழுவினர்.
இந்தியாவின் முன்னால் ஜனாதிபதி டாக்டர் எ. பி. ஜே. அப்துல் கலாமின் திருவருவச் சிலை இன்று யாழ் பொது நூலகத்தில் திறந்து வைக்கப்பட்டது இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட இந்த திருவுருவச் சிலையினை இலங்கைகான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே. சிங்கா மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் ஆகியோர் திறந்து வைத்தனர். யாழ் பொது நூலகத்தில்...
பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர, தான் பதவியேற்றதை அடுத்து, முதன் முறையாக இன்று வெள்ளிக்கிழமை (17) யாழ்ப்பாணத்துக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார். பொலிஸ் மா அதிபராக பதவியேற்றதன் பின்னர் சட்டம், ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்ணாயக்கவின் ஆலோசனைக்கு அமைவாக, வடக்கு மாகாணத்துக்கான முதலாவது விஜயத்தை பொலிஸ் மா அதிபர் மேற்கொண்டுள்ளார். அண்மை காலங்களில் வடக்கு...
முன்னாள் பெண் போராளிகளின் பம்பைமடு தடுப்பு முகாம் வாழ்வு தொடர்பான வரலாற்றுப் பதிவான ‘ஆறிப்போன காயங்களின் வலி’ என்ற நூல் எதிர்வரும் 25 ஆம் திகதி சனிக்கிழமை காலை 9.30 மணிக்கு மன்னார் அடம்பன் மத்திய மகா வித்தியாலயத்தில் வெளியிட்டு வைக்கப்படவிருக்கின்றது. போரில் விழுப்புண் அடைந்து ஒரு கண்ணையும், ஒரு கரத்தையும் இழந்த பெண் போராளியான...
நல்லூர், உடுப்பிட்டித் தொகுதிகளின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் உப சபாநாயகருமான அமரர் மு.சிவசிதம்பரத்தின் 14ஆவது ஆண்டு நினைவுதினம் நேற்று ஞாயிற்றுக்கிழமை வடமராட்சி நெல்லியடியில் இடம்பெற்றது. நெல்லியடி பஸ் நிலையப் பகுதியில் அமைந்துள்ள அன்னாரின் உருவச் சிலைக்கு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராசா, ஏம்.ஏ.சுமந்திரன் உட்பட பலர் மலர் மாலை அணிவித்து அஞ்சலி...
வடமாகாண சுற்றுச்சூழல் அமைச்சின் உலக சுற்றுச்சூழல் தின நிகழ்ச்சி இம்முறை வவுனியாவில் நடைபெற்றுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை (03.06.2016) வவுனியா கலைமகள் மகாவித்தியாலயத்தில் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் இந்நிகழ்ச்சி இடம்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் சபையால் ஆண்டுதோறும் யூன் 5ஆம் திகதி உலக சுற்றுச்சூழல் தினம் கொண்டாடப்படுகிறது. இலங்கையில், ஜனாதிபதியின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இவ்வருடத்தில் இருந்து மே 30...
வடக்கு மாகாணத்தில் நெல் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில் நெல் நாற்றுநடும் இயந்திரங்களையும் நெல் களைகட்டும் இயந்திரங்களையும் வடக்கு விவசாய அமைச்சு வழங்கியுள்ளது. இயந்திரங்களை ஒருங்கிணைந்த பண்ணையாளர்கள் சங்கம் மற்றும் இளைஞர்; விவசாயக் கழகங்களிடம் கையளிக்கும் நிகழ்ச்சி இன்று வெள்ளிக்கிழமை (03.06.2016) வவுனியாவில் நடைபெற்றுள்ளது. வவுனியா அரச விதை உற்பத்திப் பண்ணையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் வடக்கு விவசாய...
ஆசியாவின் மிகப்பெரிய நூலகங்களில் ஒன்றான யாழ்ப்பாணம் பொது நூலகம் தீக்கிரையாக்கப்பட்ட கசப்பான சம்பவம் நிகழ்ந்து நேற்றுடன் 35 வருடங்கள் நிறைவடைந்துள்ளன. இதனை முன்னிட்டு நேற்று காலை யாழ் நூல் நிலையத்தில் நினைவு நாள் நிகழ்வொன்றும் அனுஸ்டிக்கப்பட்டது. 1981ம் ஆண்டு மே மாதம் 31ம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் இடம்பெற்ற இலங்கை வரலாற்றில் அழிக்க முடியாத மிகவும்...
வாக்காளர் தினத்தை முன்னிட்டு தேர்தல்கள் திணைக்களத்தினால் யாழ்ப்பாணம் மத்திய பேரூந்து நிலையத்தில் இருந்து யாழ். மாவட்ட செயலகம் வரை இன்று புதன்கிழமை காலை பேரணி ஒன்று நடத்தப்பட்டது. வாக்காளர் தினம் இன்று நாடளாவிய ரீதியில் கொண்டாடப்பட்டுவரும் நிலையில், வாக்களிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, தேர்தல்கள் திணைக்களத்தினால் இந்தப் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. யாழ்ப்பாணம் பேரூந்து நிலையத்தில் இருந்து...
கூட்டுறவு இயக்கத்தின் முன்னோடி அமரர் விஸ்வலிங்கம் வீரசிங்கம் அவர்களின் ஞாபகார்த்த அஞ்சல் தலை நேற்று வெள்ளிக்கிழமை (27.06.2016) இலங்கை தபால் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான வெளியீட்டு விழா வடமாகாண கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. அமரர் வி.வீரசிங்கம் அவர்கள் மானிப்பாய் இந்துக்கல்லூரியின் அதிபராகப் பணியாற்றியிருந்ததோடு பாராளுமன்ற உறுப்பினராகவும் பதவி வகித்தவர்....
ஊற்று வலையுலக எழுத்தாளர்கள் மன்றமும் யாழ் இலக்கியக் குவியமும் இணைந்து நடாத்தும் வலைப்பதிவர்களுக்கான கருத்தரங்கு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (29-05-2016) மாலை 3.45 க்கு புதிய உயர் கல்லூரியில் நடைபெறவுள்ளது. மருத்துவர் சோதிதாஸ் அவர்களின் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் திரு.சித்தாந்தன் ( ஆசிரியர் மறுபாதி சஞ்சிகை) அவர்கள் “இணையத்தில் இலக்கியப்படைப்புகள்” என்னும் தலைப்பிலும், “வலைப்பதிவுத் தொழில் நுட்பங்கள்”...
தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நடாத்திய பாட்டாளி வர்க்க மக்களின் மே தினம் 2016 எழுச்சி நிகழ்வு பருத்தித்துறை சிவன் ஆலய திருமண மண்டபத்தில் நேற்று பிற்பகல் 4.00 மணியளவில் ஆரம்பமாகி இடம்பெற்றது. தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை, இறைமையுள்ள தமிழ் தேசத்தின் அங்கீகாரம் என்பவற்றை வலியுறுத்தி கட்சியின் கொடியேற்றலுடன் ஆரம்பமாகிய இவ் நிகழ்வில் ஈகைச்சுடரினை...
வடக்கில் இராணுவத்துக்கென்று ஒருபுறம் காணிகள் அபகரிக்கப்பட்டுக்கொண்டிருக்கும் அதேசமயம், இன்னொருபுறம் இயற்கை ஒதுக்கிடங்கள் என்ற பெயராலும் காணிகள் அபகரிக்கப்படுகின்றன என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் குற்றம் சாட்டியுள்ளளார். மன்னார் உயிலங்குளத்தில் அமைந்துள்ள மாவட்ட விவசாயப் பயிற்சி நிலையத்தில் நேற்று வெள்ளிக்கிழமை (29.04.2016) விவசாயிகளுக்கான நடுகைப் பொருட்கள் மற்றும் கால்நடைகள் வழங்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு...
தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் இணைந்து நடாத்தும் தொழிலாளர் தின நிகழ்வு பருத்தித்துறையில் இடம்பெறவுள்ளது. இடம்: சிவன்கோவில் திருமண மண்டபம், பருத்தித்துறை நேரம்: பி.ப 3.00 மணிக்கு ஆரம்பம் காலம்: 01 மே 2016 (ஞாயிற்றுக்கிழமை) தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை அடிப்படையில் தமிழ்த் தேசத்தின் அங்கீகாரத்திற்காரம், தமிழ்...
இலங்கையின் தமிழ் பேஸ்புக் பயனர்கள் முதன்முறையாக ஒழுங்கமைக்கும் ஒன்றுகூடல் நிகழ்வொன்று எதிர்வரும் ஞாயிறன்று நடைபெறவுள்ளது. இது தொடர்பான ஊடக அறிக்கை வருமாறு: Facebook தமிழா-2016 ஒன்றுகூடல் நிகழ்வு ஊடக அறிக்கை திகதி: 24/04/2016 இடம்: AVS மண்டபம், #8, லோறன்ஸ் வீதி, பம்பலப்பிட்டி நேரம்- முப 10.00 – பிப 2.00 வரை இலங்கை சமூக...
வடமாகாண சபை, வடமாகாண ஆளுநர் செயலகம், மற்றும் இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத் தாபனம் என்பன இணைந்து தமிழ் – சிங்கள இனங்களுக்கிடையில் சமத்துவ ஒற்றுமையினைக் கட்டி எழுப்பும் வகையிலும் ,நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் வகையிலும் “பனை ஓலையும்,தென்னை ஒலையும்” எனும் தொனிப்பொருளிலான தமிழ்- சிங்களப் புத்தாண்டு விழாவை ஏற்பாடு செய்து நடாத்துகின்றன. தென் மாகாணத்திலிருந்து 100 மாணவர்கள்...
வடக்கு மாகாணசபையின் மூலம் வழங்கப்படும் நியமனங்களில் எமக்குத் தெரிந்தவர், எமக்கு வாக்களித்தவர் என்று எந்த முன்னுரிமைகளும் வழங்கப்படுவதில்லை. பரிந்துரைகள் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை. நீதியரசர் ஒருவரை முதல்வராகக்கொண்டு இயக்கப்படும் மாகாண நிர்வாகத்தில் நியமனங்கள் யாவும் நீதியான முறையில் தகுதிகளின் அடிப்படையிலேயே வழங்கப்படுகின்றன என்று வடக்கு விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாணசபையால் முகாமைத்துவ உதவியாளர்கள், சாரதிகள், அலுவலகப்...
கிராமப்புற மக்களின் போசாக்கு மட்டம் மற்றும் வாழ்வாதாரத்தை அதிகரிக்கும் நோக்கில் கோழிக்குஞ்சுகளை விநியோகிக்கும் திட்டத்தை வடமாகாண கால்நடை அமைச்சு முன்னெடுத்துள்ளது. இதனை வடமாகாண விவசாய, கமநல சேவைகள், கால்நடை அபிவிருத்தி,கூட்டுறவு அபிவிருத்தி,உணவு வழங்கல், நீர் வழங்கல், நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் கடந்த சனிக்கிழமை (16.04.2016) வேலணையில் தொடக்கி வைத்துள்ளார். வேலைணையில் கமநல சேவைகள்...
யாழ்ப்பாணம் பொலிஸாரின் ஏற்பாட்டில் சித்திரைப்புத்தாண்டினைமுன்னிட்டு மாநகரசபை மைதானத்தில் அழகு ராணிப் போட்டியினை நடாத்தவுள்ளனர். குறித்த நிகழ்வுகள் சித்திரைப் புத்தாண்டினை முன்னிட்டு இடம்பெறவுள்ள நிகழ்வுகளின் அங்கமாக நடைபெறவுள்ளதாக யாழ் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி டி.டி.பி வீரசிங்க தெரிவித்தார். சித்திரை புத்தாண்டில் தங்க இல்லம் எனும் தொனிப்பொருளில் ஏப்ரல் 18 ஆம் திகதி அன்று யாழ்ப்பாணம் நகர சபை...
Loading posts...
All posts loaded
No more posts
